தங்க வளையலை வைத்து ஸ்ருதி அம்மா செய்த சதி! மறுபக்கத்தில் சத்யாவும் வாராரு! ஆனால் மீனா அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 18ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவின் திருமண நாள் கொண்டாட்டத்தின்போது பிரச்சனை செய்ய வேண்டும் என்று சிட்டி ஒரு பக்கம் பிளான் போட்டிருக்கும் நிலையில் ஸ்ருதியின் அம்மாவும் வளையலை கொண்டு வந்து பிரச்சனை செய்ய அது கடைசியில் அவருக்கே ஆப்பாக மாறுகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து வீட்டில் இருந்து போட்டுட்டு போன சட்டையை போடாமல் வேறு சட்டை போட்டு விட்டு வந்திருப்பதை குறித்து வீட்டில் எல்லோரும் கேள்வி கேட்க, அதற்கு முத்து ஆணியில் மாட்டி கிழிஞ்சிருச்சு என்று சொல்ல, மீனா அதே நேரத்தில் டீ கொட்டிடுச்சு என்று சொல்ல இரண்டு பேரும் இரண்டு பதில் சொல்வதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் சந்தேகப்படுகின்றனர்.

அதற்கு முத்து டீ கொட்டிடுச்சு அதை கிளீன் பண்ண போனப்ப ஆணியில் மாட்டி கிழிஞ்சிடுச்சு என்று சமாளிக்கிறார். ஆனால் விஜயா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பாட்டி விஜயாவை திட்டி ஆப் பண்ணி விடுகிறார். பிறகு ரவி மீனாவிடம் நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க திரும்பவும் உங்க வீட்டுக்கு போவீங்களா? என்று கேட்க,
அதற்கு மீனா இல்ல சாயங்காலம் அம்மாவும் தங்கச்சியும் இங்க வருவாங்க என்று சொல்ல அவங்க எதுக்கு இங்க வராங்க என்று விஜயா கேட்க, அது உனக்கு எதுக்கு என்று பாட்டி பதிலடி கொடுக்கிறார். பிறகு ரோகிணி மீனாவிடம் வந்து மீனா உங்க வீட்ல என்ன நடந்துச்சு? முத்து கோவமா இருக்காரு உங்க முகமும் சரியா இல்ல என்று துருவித் துருவி கேள்வி கேட்க,
அதற்கு மீனா எங்க வீட்டுல என்ன நடந்தா உங்களுக்கு என்னனு திருப்பி கேள்வி கேட்க அதற்கு ரோகிணி இப்ப புரியுதா உங்களோட பர்சனலில் தலையிட்டா உங்களுக்கு எவ்வளவு கோபம் வருது? அந்த மாதிரி தானே எனக்கும் வரும். இனிமே எங்களோட பிரச்சனையில நீங்க தலையிடாதீங்க என்று வார்னிங் கொடுக்கிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் திருமண நாளை கொண்டாடுவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.
மறுபக்கத்தில் சத்யா ஜெயிலில் இருந்து வந்த சிட்டியை சந்திக்கிறார் அப்போது சிட்டி என் மேல தப்பு இல்ல நான் உங்க மாமாவை பழிவாங்கணும்னு எதுவும் பண்ணல என்று சத்யாவை சமாதானம் படுத்த பார்க்க, அவர் வீட்டில் முத்து மீனாவிற்கு திருமண நாள் என்ற விஷயத்தை சொல்ல நீ போகலையா என்று சிட்டி கேட்டதும் ஏற்கனவே நான் எடுத்துக் கொடுத்த சட்டையை கழட்டி போட்டுட்டு போயிட்டாரு.
இதனால இனி அங்க வீட்டுக்கு போனா பிரச்சனை தான் வரும் போகல என்று சொல்ல அதற்கு சிட்டி இந்த மாதிரி ஃபங்ஷன்ல நீ கண்டிப்பா போய் நிக்கணும். அப்போதான் உன் மேல அவங்களுக்கு கோபம் குறையும் நீ அக்கா மாமாவுக்கு எல்லா பொருள்களையும் வாங்கிக் கொடு என்று பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார். பிறகு சிட்டி தன்னுடைய நண்பனிடம் இவன் அங்க போய் நிக்கணும். அதனால முத்து கோவப்பட்டு இவனை அடிக்கணும்.
அதனால் கணவன் மனைவி இருவருக்கும் சண்டை வரணும். முத்துவும் மீனாவும் சந்தோஷமா கல்யாணம் நாளை கொண்டாடக்கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பங்க்ஷன் தொடங்கியதும் ரவியும், ஸ்ருதியும் பெரிய கேக்குடன் வீட்டுக்கு வர மனோஜ் இவ்வளவு பெரிய கேக் இருக்கா என்று வாயை பிளக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வர அவரைப் பார்த்ததும் முத்து எல்லாரும் தள்ளிருங்க ஏதாவது காணாம போயிடுச்சுன்னா நம்மள தான் சொல்லுவாங்க என்று சொல்ல,
அதற்கு விஜயா ஒரு பங்க்ஷனில் தொடங்கிய பிரச்சனை இன்னொரு பங்க்ஷனில் முடியனும் அதனால் தான் கூப்பிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ஸ்ருதியின் அம்மா சம்மந்தி ஏதோ தெரியாம தப்பு நடந்துடுச்சு என்று சொல்லிவிட்டு மீனாவுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லியபடி தங்க வளையலை கிப்டாக கொடுக்க, விஜய்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதோடு உங்களுக்கு பெரிய மனசு பொண்ணை பெத்தவங்க கூட ஒன்னும் செய்யல.

ஆனா நீங்க தங்க வளையல் போடுறீங்க என்று சொல்ல, மீனாவும் என்னுடைய பொண்ணு போல தான் என்று சொல்லியப்படியே வளையலை மீனாவுக்கு போடப் போக மீனா வளையலை வாங்கி பார்த்து நல்லா இருக்கு என்று சொல்லி அந்த வளையலை ஸ்ருதி கையில் போட்டு விடுகிறார். உங்களுக்கு தான் இந்த வளையல் அழகாக இருக்கிறது என்று சொல்ல அதை பார்த்து அண்ணாமலை தனக்கு வந்ததை கூட மீனாவுக்கு அடுத்தவங்களுக்கு கொடுக்கிற மனசு இருக்கு.
அது மீனாவுக்கு மட்டும்தான் வரும். மருமகள்னா இப்படித்தான் இருக்கணும் என்று பாராட்டி விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். அடுத்ததாக ஸ்ருதியின் அம்மா ஹாலில் ஏசி இல்லையா? நான் வேணும்னா பெரிய கேசட் வாங்கி அனுப்பவா? என்று அடுத்த பிரச்சனையை தொடங்க விஜயா சந்தோஷப்படுகிறார்.
ஆனால் அண்ணாமலை அதெல்லாம் வேண்டாம் உங்க ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்ல முத்து சூப்பர் பா என்று கை தட்டுகிறார். கடைசியாக முத்து மீனா கேக்கு கட் பண்ணி மாறி மாறி ஊட்டிக்கொண்டு மற்றவருக்கு ஊட்டி விடுகின்றனர். அப்போது மீனா ஸ்ருதிக்கு ஊட்டி விடுவதையும், ஸ்ருதி மீனாவுக்கு ஊட்டி விடுவதையும் பார்த்து ரோகிணி வயிறு எரிகிறார்.
பிறகு மீனா சுதாவுக்கு கேக் கொடுக்க நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன் என்று விஜயாவிடம் கை கொடுத்து நான் கிளம்புகிறேன் என்று சொல்ல அண்ணாமலை கையெடுத்து கும்பிட்டு போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார். இதை எல்லாம் பார்த்து ஸ்ருதியின் முகம் மாறுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications