Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துக்கு சிட்டியால் வரும் புது பிரச்சனை.. அடிக்க கை ஓங்கிய மீனா.. கடைசியில் இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியை பார்க்கலாம். அதில் சிட்டியும் சத்யாவும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா கோபப்பட்டு திட்ட அதற்கு சிட்டி முத்துவை மீண்டும் பிரச்சனையில் சிக்க வைக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து தன்னுடைய கார் சேட்டில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது மனோஜ்க்கு பணம் வந்ததை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு மீனா அவர்களுடைய விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சொன்னதைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு செல்வம் உட்பட எல்லோரும் தங்கச்சி சொன்னது சரிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka aasai serial May 2nd promo and episode full update

அந்த நேரத்தில் அங்கு ஒரு ஜோசியர் வந்து முத்துவின் முகத்தை பார்த்து சில விஷயங்களை சொல்ல முத்து பணத்தை கொடுத்து டீ சாப்பிட்டு போங்க என்று சொல்கிறார். அதற்கு ஜோசியர் எனக்கு பணம் வேண்டாம் ஜக்கம்மா உன்கிட்ட பேச சொல்லுற உன் கைய காட்டு என்று சொல்கிறார். முத்து அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

தினம் தினம் நான் பிரச்சனையை தோல் மேல போட்டுகிட்டு சுத்திக்கிட்டு இருக்கிறவன் என்று சொல்ல அதற்கு நண்பர்கள் கைய காட்டுப்பா என்று காட்ட வைக்க ஜோதிடர் பார்த்துவிட்டு உனக்கு இன்னைக்கு பெரிய ஆபத்து இருக்கு நீ எது செஞ்சாலும் யோசித்து செய்யணும். இல்லன்னா எந்த ஊரு உன்னை ஏசும் இடத்திற்கு நீ தள்ளப்படுவாய் என்று சொல்கிறார். அதற்கு முத்து பணத்தை கொடுத்து சரி போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்க அந்த நேரத்தில் முத்துவுக்கு ஏரியா தலைவரிடம் இருந்து போன் வருகிறது.

அதற்கு முத்து இப்பதான் ஜோசியர் என்னமோ சொல்லிட்டு போனாரு ஆனா இப்போ நல்ல விஷயம் நடந்திருக்கு என்று சொல்லி முத்து கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் மீனா தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததை பார்க்க வந்திருக்கிறார். அப்போது சத்தியா சிட்டியுடன் வந்து இறங்க மீனா சிட்டியை திட்டுகிறார். என் தம்பி கூட நீ எதுக்கு சுத்திகிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.

அதோடு சிட்டியை அடிக்க போக சத்தியா மீனாவை எதிர்த்து பேசுகிறார். அதற்கு சத்தியா விடு அக்கா தானே பேசுறாங்க பேசிட்டு போகட்டும் என்று அங்கிருந்து கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் மனோஜ் ஒரு ஏஜென்சிக்கு வந்து கார் வாங்குவதற்காக வந்திருக்கிறார். அங்கு தேடி பிடித்து ஒரு காரை செலக்ட் செய்து வைத்திருக்கிறார். ரோகிணியை அங்கு வரவைத்து ரோகிணி இடம் காரை காட்டுகிறார்.

முதலில் ரோகிணி கார் இப்போ எதற்கு வேண்டாம் என்று சொல்ல, அதற்கு மனோஜ் நாம பிசினஸ் விஷயமா யாரையாவது சந்திக்க போகும்போது காரில் போனா தானே நல்லா இருக்கும் என்று சொல்கிறார். பிறகு காரை பார்த்ததும் ரோகிணியும் சரி என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் முத்து தலைவரை பார்க்க அவர் தன்னுடைய நண்பர் என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் ஆந்திராவில் இருந்து வந்திருக்கிறார் அவர் கார் வாங்கணும்னு ஆசைப்படுறாரு என்று சொல்கிறார்.

அதோடு உனக்கு தான் காரைப் பற்றி நல்லா தெரியுமில்ல அதனாலதான் வர சொன்னேன் என்றும் சொல்கிறார். அதற்கு முத்து எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஏஜென்சி இருக்கு நம்பிக்கையான இடம். என் காரை கூட நான் அங்க தான் வாங்கினேன் என்று கூட்டி செல்கிறார். முத்து தலைவரையும் அவருடைய நண்பரையும் கூட்டி வந்து கார்களை காட்ட அவர் நம்பர் செட்டாகாமல் கார் செட் ஆகல என்று சொல்லிக்கொண்டே இருக்க கடைசியில் மனோஜ் செலட் செய்து வைத்திருந்த கார் சூப்பரா இருக்கு அதையே எடுத்து விடலாம் என்று சொல்கிறார்.

பிறகு இந்த காரை புக் பண்ணிடலாம் என்று சொல்ல அதற்கு அங்கிருந்தவர்கள் இந்த காரை ஒரு தொழிலதிபர் புக் பண்ணி இருக்காரு என்று சொல்ல, சரி அந்த தொழிலதிபர் கிட்ட பேசிப் பார்க்கலாம் என்று முத்து வர அது மனோஜ் ரோகிணி என்று தெரிந்ததும். இவங்கதான் அந்த தொழிலதிபரா? இவன் வேலையே இல்லாத வெட்டிப்பையன் அவனை நம்பி எல்லாம் காரை கொடுக்காதீங்க.

அவன் லோன் கூட கட்ட மாட்டான் காரை தூக்கிட்டு ஓடிடுவான் என்று அசிங்கப்படுத்த, அங்கு இருந்தவர்கள் அந்த காரை தலைவரின் நண்பருக்கே வங்கி கொடுக்கிறார். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி முத்து மீது பயங்கர கோபத்தில் கிளம்பி செல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைக்கு என்று வெளியான வீடியோவில் முத்து கார் வாங்கி கொடுத்ததற்காக அவருக்கு தலைவர் பார்ட்டி கொடுக்க பாரில் முத்து குடித்துக் கொண்டிருக்கிறார். அதை சிட்டி வீடியோ எடுத்து அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு இப்படி குடிக்கும் இவருடைய காரில் யாரும் போகாதீங்க என்று கிளப்பி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி முத்துவுக்கு பெரிய பிரச்சனை வர இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+