சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு ஆப்பு வைத்த முத்து.. ரோகிணியின் திமிருக்கு கிடைத்த கூலி.. பாவம் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 30ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் மீனாவை எல்லோருக்கும் சமைக்க சொல்லி கொடுமைப்படுத்தும் விஜயாவிற்க்கு முத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மறுபக்கத்தில் உடம்பு முடியாமல் மீனா ஹாஸ்பிடலுக்கு போகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா ரூமிற்கு வந்ததும் விஜயா ரோகிணி எங்கே என்று கேட்க அதற்கு மீனா அவங்க சாப்பிட்டுட்டு வருவாங்க, நீங்க படுத்து தூங்குங்க என்று மீனா சொன்னதும் தராதரம் இல்லாதவங்க கூட எல்லாம் படுத்து தூங்க வேண்டிய நிலைமை இருக்கு என்று மீனாவை விஜயா திட்ட மீனா நான் தரையில் படுத்து கொள்கிறேன் என்று படுத்துக் கொள்கிறார்.

பிறகு ரோகிணி ரூமுக்கு வந்ததும் ரோகிணி யிடம் மீனாவை பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் விஜயா நீ படுமா என்று படுத்துக்கொள்ள சொல்கிறார். மறுபக்கத்தில் முத்து தரையில் பாயை போட்டு படுக்க அண்ணாமலை நீயும் கட்டிலில் படு என்று கூப்பிட்டதும் மனோஜ் மூணு பேர் எல்லாம் படுத்தா சரியா இருக்காது என்று சொல்ல, முத்து நான் கீழே படுத்துகிறேன். நீ தூங்கு என்று சொல்கிறார்.
அப்போது அண்ணாமலை தூக்கம் வரவில்லை என்று சொல்ல, முத்து அவரிடம் கதை சொல்லிக்கொண்டே இருக்க மனோஜ் தூங்க முடியாமல் தவிக்கிறார். மறுபக்கத்தில் விஜயா குறட்டை சத்தம் அதிகமாக வர தூங்க முடியாமல் ரோகிணி ஹாலுக்கு வர அங்க ஏற்கனவே மனோஜ் உட்கார்ந்து இருப்பதை பார்க்கிறார். பிறகு ரோகிணியை பார்த்த மனோஜ் நீ என்ன வெளியே வந்துட்டா என்று கேட்க உங்க அம்மாவோட குறட்டை சத்தத்தில் தூங்க முடியல என்று சொல்கிறார்.
நீ எதற்கு வெளியே வந்தாய் என்று கேட்க, முத்து உள்ள பேசிட்டே இருக்கான் அதனால தூக்கமே வரல. கடைசியா நாம திரும்பவும் வந்த இடத்துக்கே வந்துட்டோம். இன்னைக்கு வெளியே தான் படுத்து தூங்கணுமா என்று வருத்தப்பட்டு பாயை விரித்து படுக்கின்றனர். மறுநாள் காலையில் மீனா லேட்டாக எழுந்து வர விஜயா மகாராணிக்கு இப்போது தான் தூக்கம் போச்சா என்று சத்தம் போடுகிறார்.
அதோடு டைம் என்ன ஆச்சு எல்லோருக்கும் வேலைக்கு கிளம்புவாங்க சாப்பாடு செய்யணும்னு உனக்கு தெரியாதா? என்று கோபப்பட, மீனா எனக்கு உடம்பு முடியல ஒரு நாளாச்சும் அவங்க அவங்களுக்கு தேவையானதை சமைச்சுக்கலாம் இல்ல என்று சொல்கிறார். அதற்கு விஜயா என்னடி நீ எனக்கு ஆர்டர் போட்டு இருக்கியா? என்று சத்தம் போட அண்ணாமலை அவதான் உடம்பு முடியலன்னு சொல்ற இல்ல இன்னைக்கு ஒரு நாள் வேற யாராவது சமைக்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா அவ நடிக்கிறா? என்று கோபப்படுகிறார். பிறகு மனோஜ் ரோகிணி வந்து சாப்பாடு கேட்க இன்னும் சமைக்கல என்று சொன்னதும் மனோஜ் நாங்க பிசினஸ் பண்றோம் சரியா தூங்கவும் முடியாமல், சாப்பிடவும் முடியாமல் போனால் எப்படி? என்று கேள்வி கேட்க அந்த நேரத்தில் ரவி ஸ்ருதி வந்துவிட அவர்களும் கிளம்பனும் சாப்பிடலாமா? என்று கேட்கின்றனர்.
அதற்கு விஜயா இவா சமைக்கவே இல்ல என்று சொல்ல அண்ணாமலை மீனாவுக்கு உடம்பு முடியல என்று சொல்ல ஸ்ருதி நான் என்ன ஆச்சு? அப்படி என்றால் இன்னும் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று சொல்கிறார். அண்ணாமலை மேலும் மீனா மட்டும்தான் சமைக்கணுமா? இந்த வீட்ல மத்த ரெண்டு மருமகள் இருக்கீங்க இல்ல? என்று சொல்ல ஸ்ருதி ஐயோ அங்கிள் எனக்கு சமைக்கலாம் தெரியாது.
அதனால்தான் நானே ஒரு செஃப்பை கல்யாணம் செய்து கொண்டேன் என்று சொல்ல, ரவி அப்போ என்னை அதற்காக மட்டும் தான் கல்யாணம் பண்ணுனியா என்று கேட்டதும் ஸ்ருதி அதுக்காகவும் தான் என்று சொல்கிறார். பிறகு நாங்க ரவியோட ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று கிளம்பி போகிறார்கள். அடுத்ததாக அண்ணாமலை ரோகிணியிடம் நீயாவது சமைக்க கூடாதா என்று கேட்க, இல்ல அங்கிள் எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் வெளியே சாப்பிடுகிறேன் என்று சொல்லி ரோகிணியும் மனோஜூம் கிளம்பி செல்கின்றனர்.
விஜயா பாரு உன்னால 4 பேரு வெறும் வயித்தோடு போய் இருக்காங்க. இப்ப உனக்கு சந்தோஷமா? அவங்க வெளியே போய் சாப்டாங்கன்னா நாம எங்க போய் சாப்பிடுவது? என்று கோபப்பட முத்து இனிமே மீனா யாருக்காகவும் சமைக்க மாட்டா... உனக்காக மட்டும் தான் சமைப்பா அப்பா மத்தவங்களுக்கு தேவைன்னா அவங்களையே சமைச்சுக்க சொல்லு என்று ஷாக் கொடுக்கிறார்.
பிறகு மீனா கிச்சனுக்கு போய் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது முத்து வந்து பார்க்க நினைத்தை விடவும் அதிகமாக காய்ச்சல் இருக்கிறது. இதனால் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று மீனாவை கூட்டிட்டு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications