சிறகடிக்க ஆசை: சொந்த வீட்டை விற்க பிளான் போடும் மனோஜ்.. ரோகிணி உளறிய ரகசியம்! மாஸ் காட்டிய முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே நான்காம் தேதிக்கான எபிசோடில், அண்ணாமலையின் வீட்டை பைனான்சியர் ஏலத்தில் விடுவதற்காக நோட்டீஸ் விட்டு இருக்கிறார் அதே நேரத்தில் மனோஜ் சொன்ன விஷயத்தை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சிகள் இருக்கின்றனர் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial May 4, 2026 episode) இன்றைய எபிசோடின், ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணி பற்றிய மனோஜ் பெருமையாக பேச அதைக் கேட்ட ரோகிணி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பிறகு இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட போகலாம் என்று பிளான் போடுகின்றனர்.

மறுபக்கத்தில் முத்து மீனாவும் ரவி ஸ்ருதி ரெஸ்டாரண்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே இடத்திற்கு மனோஜ் ரோகிணியை கூட்டிக்கொண்டு வருகிறார். இருவரும் ஜோடியாக வருவதை பார்த்து எல்லோரும் டென்ஷன் ஆகின்றனர். ஆனாலும் மனோஜ் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. நான் உங்க ரெஸ்டாரண்டுக்கு சாப்பிடறதுக்கு வந்து இருக்கேன் வரலாமா வரக்கூடாதா என்று கேட்ட, அதற்கு ஸ்ருதி தாராளமா யாரு வேணும்னாலும் சாப்பிட வரலாம். ஆனால் நீங்கதான் யாரை கூட்டிட்டு வரணும் வேண்டான்னு யோசிக்கணும்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து கேட்ட கேள்வி

நீங்க பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் அவமானங்களும் உங்களுக்கு மறந்து போச்சா? என்று கேள்வி கேட்கிறார். அப்போ ரவியும், முத்துவும் மனோஜியை திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் மனோஜ் ரோகிணி என்னுடைய பொண்டாட்டி அவ தான் என்னை வெளியே கொண்டு வந்தா என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான முத்து அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லவா? என்று முத்து மிரட்டுகிறார்.

கடுப்பான ரோகிணி

இதனால் ரோகிணி கடுப்பாகி முத்துவிடம் சண்டைக்க போகிறார். பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியே சாப்பிட போனதும் முத்துவும் மீனாவும் ரவி ஸ்ருதியிடம் சிந்தாமணியை அடக்கியது பற்றி பெருமையாக சொல்லி மீனாவே பாராட்டுகின்றனர். இதை பார்த்து ரோகிணி கடுப்பாகிறார். மறுபக்கத்தில் சிந்தாமணி வீட்டிற்கு வந்த ரோகிணி தன்னை அவர்கள் கேலி செய்தது பற்றி சொல்கின்றனர்.

Siragadikka Aasai serial Vijay TV

சிந்தாமணியின் பிளான்

அப்போது சிந்தாமணி அந்த மீனா தனக்கு எதிராக செய்த செயல்களை பற்றியும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இனி அந்த மீனாவை சும்மா விட கூடாது என்று ரோகிணியிடம் தன்னுடைய பிளானை பற்றி சொல்கிறார். ரோகிணியும் சந்தோஷப்படுகிறார். மீனாவை எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே தொறக்க வேண்டும் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Siragadikka Aasai serial Vijay TV

வக்கீல் நோட்டீஸ்

பிறகு ரோகிணி போனதும் சிந்தாமணி பைனான்சியரிடம் சென்று வீட்டை ஒரு நாளைக்கு ஜப்தி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப சொல்லி சொல்கிறார். அதன்படியே அவரும் நோட்டீஸ் அனுப்புகிறார். அந்த நோட்டீசை பார்த்த ரவி அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ளவர்களிடம் நிலைமையை சொல்கிறார். உடனே எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போதும் மனோஜ் நான் தான் சொன்னேனே நம்மால் அந்த பணத்தை கொடுக்க முடியாதுன்னு அதனால இந்த வீட்டை நான் ஒரு நல்ல ரியல் எஸ்டேட்காரங்க விற்று விடுவோம், அவங்க நம்மளுக்கு தேவையான பணத்தை கொடுத்துடுவாங்க என்று சொல்கிறார்.

அடிக்க போன முத்து

உடனே முத்து கோபப்பட்டு அவரை அடிக்கப் போகிறார். அப்போது அண்ணாமலை இது நாம சந்தோஷமா வாழ்ந்த வீடு இந்த வீட்டை விற்க நான் எப்போதுமே சம்மதிக்க மாட்டேன். எப்படியாவது நம்ம வீட்டை நாம வாங்க பார்க்கணும் என்று சொன்னதும் நான் எப்படியும் ஒரு நாளைக்குள் முடிந்த வரைக்கும் பணத்தை ரெடி பண்ணுகிறேன் என்று முத்துவும் சொல்கிறார். ஆனால் மனோஜ் கண்டிப்பா எப்படியும் நம்மளால முடியாது என்று மீண்டும் நெகட்டிவ் ஆக பேச, ரவி விஜயா எல்லோருமே மனோஜை திட்டுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+