சிறகடிக்க ஆசை: முத்து வெளியிட்ட வீடியோ! மாட்டிய சிட்டி.. ரோகிணியும் சிக்கியாச்சு.. கலங்கிய அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து மீது தப்பு இல்லை என்பதை மீனா கண்டுபிடித்திருக்கும் நிலையில் முத்து புது வீடியோ வெளியிட அதை பார்த்து அண்ணாமலை கலங்கி நிற்கிறார். மறுபக்கத்தில் சிட்டி போலீசில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்துக் கிடக்க இன்ஸ்பெக்டர் வந்ததும் அவரிடம் சென்று நான் குடிக்கவே இல்லை என்று சொல்ல, இன்ஸ்பெக்டர் நம்பாமல் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கோங்க என்று அனுப்பி விடுகிறார். அதை தொடர்ந்து மீனா முத்து குடித்தார் என்று சொல்லப்படும் ஒயின்ஷாப்புக்கு வருகிறார்.

ஒயின்ஷாப்பில் ஆண்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கும் போது அங்கு மீனாவும் காத்துக் கொண்டு இருப்பதை பார்த்த யூடியூபர் ஒருவர் செம கன்டென்ட் கிடைச்சிருக்கு என்று லைவ் வீடியோவில் ஒரு இந்திய குடிமகன்களுக்கு முன்னாகவே வந்து ஒயின்ஷாப்பில் காத்துட்டு இருக்காங்க என்று சொல்லி அப்படியே மீனாவிடம் உங்களுக்கு எவ்வளவு நாளா இந்த குடிப்பழக்கம் இருக்கு? எப்படி இந்த குடிப்பழக்கம் வந்தது? குடிக்காமல் இருந்தால் உங்களுக்கு கை கால் எல்லாம் நடுங்குமா?
அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களா? என்று கேள்வி மேல் கேட்க, அதற்கு மீனா இதெல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கா என்று கேட்க அதற்கு அவரும் ஆமாம் என்று சொன்னது அவருடைய கன்னத்தில் பளார் என்று அறைகிறார். என்ன எதுன்னு எதுவுமே தெரியாம ஆளாளுக்கு இந்த மாதிரி வீடியோ எடுத்து போட்டதுனால தான் இன்னைக்கு என் புருஷன் பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.
அவர் தப்பு பண்ணலன்னு நிரூபிக்க தான் நான் இங்கே வந்து இருக்கிறேன் என்று சொன்னதும் அடுத்த நிமிஷமே அந்த youtuber பாத்தீங்களா இங்க ஒரு சிங்கபெண் தன்னுடைய புருஷனை காப்பாற்ற வந்திருக்காங்க என்று மாற்றி பேசுகிறார். பிறகு ஒயின்ஷாப் திறந்ததும் மீனா சென்று ஓனரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி சிசிடிவி புட்டேஜ் பார்க்க வேண்டும் என்று கேட்டு அதற்கு அவர் முடியாது என்று சொன்னதும் மீனா உங்க பொண்ணா நெனச்சு எனக்கு இந்த ஒரு ஹெல்ப்பை பண்ணுங்க என்று கண்கலங்கி அழுகிறார்.
அதற்கு ஓனர் சரி ஏதோ நல்லது நடந்தா சரிதான் என்று அவரும் சம்மதிக்கிறார். பிறகு சிசிடிவியில் சிட்டி தான் இந்த வேலையை பார்த்தது முத்து குடிக்கவில்லை என்ற உண்மை தெரிந்ததும் உடனே இந்த வீடியோவை ரவிக்கு அனுப்பி வைங்க என்று நம்பர் கொடுத்துவிட்டு ரவியை முத்துவின் கார் செட்டுக்கு வரச் சொல்லி மீனாவும் கிளம்பி போகிறார். ரவி செட்டுக்கு வந்ததும் முத்து என்னடா என்ன ஆச்சு ஏன் இங்கே வந்த என்று கேட்க, அதற்கு ரவி அண்ணி தான் வர சொன்னாங்க என்று சொன்னது முத்து என்ன எதுன்னு தெரியாமல் தவிக்கிறார்.
அந்த நேரத்தில் மீனா ஓடி வந்து முத்துவை கட்டிபிடித்து என்னை மன்னிச்சிடுங்க நீங்க அவ்வளவு சொல்லியும் நானும் உங்களை நம்பாமல் விட்டுட்டேன் நானாவது உங்களை நம்பி இருக்கணும் என்று அழுது புலம்ப மீனா என்னவென்று கேட்டதும் ரவி தனக்கு வந்த வீடியோவை பார்த்து அண்ணி ஒயின்ஷாப்புக்கு போயி நீ குடிக்கல என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிச்சிருக்காங்க என்று சொல்கிறார்.
பிறகு முத்துவிடம் இந்த வீடியோவை காட்ட சிட்டி வீடியோ எடுத்ததை பார்த்து முத்து கோபப்படுகிறார். பிறகு இந்த வீடியோவில் என்ன நடந்தது என்பதை நீ பேசு என்று ரவி ரெக்கார்டு செய்து அந்த வீடியோவை இன்டர்நெட்டில் பதிவிடுகிறார். அப்போது முத்து நான் குடிக்கல என் மேல சுமத்தப்பட்ட பழியில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தது என் பொண்டாட்டி தான் என்று பெருமையாக சொல்லி கண் கலங்குகிறார்.
இந்த வீடியோவை பார்த்து மீனாவின் அம்மாவும் கண்கலங்க மறுபக்கம் அண்ணாமலைக்கும் விஷயம் தெரிந்து அவரும் வீடியோவை பார்த்து கண்கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான வீடியோவில் சிட்டி தான் தவறான வீடியோ பதிவிட்டு இருக்கிறார் என்று முத்து கம்ப்ளைன்ட் செய்ததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சிட்டி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாக சொல்ல, அதற்கு முத்து நான் நஷ்ட ஈடு பணத்தை வாங்க மாட்டேன்.
இந்த மாதிரி பொய்யா வீடியோ போடறவங்களுக்கு ஒரு பயம் வரணும் அதனால இவனுக்கு தண்டனை கிடைக்கனும். இவன் அரெஸ்ட் பண்ணுங்க என்று சொல்லுகிறார். அதே நேரத்தில் வீடியோவில் சிட்டியை பார்த்ததும் நாம இவன்கிட்ட தான வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறோம் இவனுக்கு முத்துவுக்கும் என்ன பிரச்சனை என்று ரோகிணி பயந்து கொண்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications