சிறகடிக்க ஆசை: முத்துவை அடித்த அண்ணாமலை.. விஜயா சொன்ன வார்த்தை! மீனாவோடு தனி குடித்தனம் போயாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து குடிக்காமலேயே அவர் பாரில் இருந்ததை வைத்து சிட்டி முத்து குடித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உண்மை என்று நம்பி அண்ணாமலை முத்துவை அடித்திருக்கிறார்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அடுத்த வாரம் எபிசோடு இருக்கப்போகிறது. இதுவரைக்கும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்த்த ரசிகர்கள் அடுத்த வாரத்தில் மனதை தைரியப்படுத்திக் கொண்டுதான் சீரியலை பார்க்க வேண்டும். இதுவரைக்கும் இந்த சீரியலில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் முத்து பக்கத்தில் நியாயம் இருக்கும் என்று அண்ணாமலை முத்துவை நம்பிக் கொண்டிருந்தார்.

Siragadikka aasai serial next week may 6th promo and episode

ஆனால் இப்போது பரவி வரும் வீடியோவை பார்த்து முத்துவை அண்ணாமலை திட்டி இருக்கிறார். தன்னைப் பற்றி என்ன நடக்கிறது என்பதை தெரியாமலேயே முத்து இருக்கும் நிலையில் அவருடைய காரை போலீசார் தூக்கிக்கொண்டு போய்விட்டனர். அதோடு முத்துவின் லைசென்ஸை முடக்கப்போவதாகவும் சொல்லி இருக்கின்றனர்.

அவமானப்படுத்தியதால் சிட்டி செய்த சதியில் முத்து மாட்டி இருக்கிறார். ஆனால் இது தெரியாத அண்ணாமலை பரவி வரும் வீடியோவை நம்பி விடுகிறார். ஏற்கனவே முத்து மீது கொலை காண்டில் இருக்கும் ரோகிணி மற்றும் மனோஜ் இதை சாதகமாக பயன்படுத்தி முத்துவை வீட்டிலிருந்து துரத்தி விட வேண்டும். என்பதற்காக வீட்டிற்குள் பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று வெளியான வீடியோவில் வீட்டிற்கு வந்த முத்துவை மனோஜ் அவமானப்படுத்தி திட்டுகிறார். அதற்கு முத்து கோபப்பட அப்போது அண்ணாமலை இதுவரைக்கும் நீ எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நம்பிட்டு இருந்தேன். ஆனால் என்னோட நம்பிக்கையே பொய்யா கிட்டா... நீ இப்படி குடிச்சிட்டு வண்டி ஓட்டி என்னை கேவலப்படுத்திட்ட என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மனோஜ் முத்துவை திட்ட கோபமான முத்து மனோஜ் அடிக்க போகிறார். அதற்கு அண்ணாமலை முத்துவை கன்னத்தில் அறைகிறார். அதை பார்த்து ரோகிணி சந்தோஷப்பட விஜயா அதிர்ச்சியில் நிற்கிறார். அதே நேரத்தில் இனி இந்த முத்துவும் மீனாவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உங்களால் எனக்கு மரியாதை இல்லை என்று முத்துவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜயா எப்போது முத்துவை வீட்டை விட்டு துரத்தலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருந்தார். இப்போது அதற்கு சரியான சந்தர்ப்பமும் கிடைத்துவிட்டது. இப்படியான நிலையில் தற்போது மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா வெளியிட்ட வீடியோவில் அவர் தனி குடித்தனம் போய் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் முத்து மீனா வீட்டை விட்டு வெளியேறி தனி குடித்தனம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+