சிறகடிக்க ஆசையில் அடுத்து செம சம்பவம்! மனோஜ்க்கு நீத்துவுடன் திருமணம்.. ரோகிணி நிலைமை? விஜயா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரவியின் ரெஸ்டாரண்ட் ஓனர் நீத்துவிருக்கும், மனோஜ்க்கும் திருமணம் நடத்துவதற்காக விஜயா பிளான் போடுகிறார். அதே நேரத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம்தான் இனி அடுத்து நடக்கப்போகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் சீதாவின் திருமணம் நடக்குமா? இல்லை? என்ற கேள்விக்குறியோடு கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. சீதா அருணை காதலிக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அருண் சீதா திருமணத்திற்கு முத்து சம்மதம் தெரிவிக்காமல் இருக்கிறார்.

சீதாவின் காதல்
முத்து சம்மதிக்கவில்லை என்றால் இந்த திருமணமே வேண்டாம் என்று சீதாவும் முடிவு எடுத்திருக்கிறார். இதற்கிடையில் சீதா அருண் திருமணத்தை நடத்த வேண்டும் என்று சத்யா மற்றும் மீனா முடிவெடுத்திருக்கின்றனர். இதனால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. அதாவது ரவியின் ரெஸ்டாரண்ட் ஓனர் விஜயா வீட்டிற்கு வந்திருக்கிறார்.
நீத்து சொன்ன விஷயம்
விஜயா பணக்கார பொண்ணு என்றதும் அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறார். அப்போது நீத்து தான் புதியதாக ஒரு ரெஸ்டாரண்ட் தொடங்கப் போவதாகவும், அதற்கு ரவி தான் சீப் செஃப் என்று சொல்கிறார். இதனால் விஜயா சந்தோஷப்படுகிறார். அதோடு புது ரெஸ்டாரண்ட் தொடங்குவதற்கு எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்க, அது கோடி கணக்கில் ஆகும் என்று சொன்னதும் அதற்கு உனக்கு பணம் யார் தருவாங்க? என்று கேட்க, அதற்குத்தான் எங்க அப்பா இருக்காங்களே, எங்க அப்பா எனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தருவாங்க என்று நீத்து சொன்னதும் விஜயாவிற்கு பேராசை வருகிறது.
விஜயாவின் பிளான்
பேசாமல் இந்த பார்லர் காரியை கழட்டிவிட்டு இந்த பொண்ணை மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசித்துப் பார்க்கிறார். அப்போது மனோஜ் மற்றும் நீத்து இருவரும் மனக்கோலத்தில் வீட்டில் வாசலில் நிற்கின்றனர். ஏற்கனவே ரோகிணி மீது கொலைவெறியில் இருக்கும் விஜயா இனி நீத்துவை இந்த வீட்டு மருமகளாக்க வேண்டும் என்பதற்காக அடுத்த பிளானை தொடங்குவார். இதனால் ரோகிணிக்கு தான் பிரச்சனை வரப்போகிறது. ரோகிணிக்காக இனி முத்து மீனா சப்போர்ட் செய்ய போகிறார்களா? அல்லது நீத்து மீது ஏற்கனவே கோபத்தில் இருக்கும் ஸ்ருதி நீத்துவை இந்த வீட்டை விட்டு துரத்த போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications