சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்: அருண்-சீதா கல்யாணத்திற்கு சம்மதித்த முத்து.. ஆனால், இனி தான் பிரச்சனையே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இதுவரைக்கும் சீதா அருண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்த முத்து இப்போது மனது மாறி இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இதுவரைக்கும் சீதா அருண் காதல் கல்யாணத்திற்கு சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்த முத்து இப்போது மீனா மற்றும் சீதாவின் நடவடிக்கையை பார்த்து மனம் மாறி இருக்கிறார். அதாவது சீதாவிடம் உனக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று முத்து கேட்டிருந்தார்.

ஆனால் அதற்கு சீதா அருணை மனதில் நினைத்து எனக்கு வரப்போற மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை பார்க்கணும், வீட்டுக்கு ஒரே பையனா இருக்குன்னு என்று சொல்லி இருந்தார். இதை தவறாக புரிந்து கொண்ட முத்து இதே போலவே மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதற்கு மீனா சீதா சொன்னது அருணை நினைத்துதான் அவளுக்கு மனசுக்கு புடிச்சதை செய்யாமல் உங்க இஷ்டத்துக்கு நீங்களே பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லி இருந்தார்.
இதனால் சீதாவிடம் நேரடியாக வந்து முத்துவும் மீனாவும் நீ யாரல நினைச்சு இந்த குவாலிபிகேஷன் சொன்ன என்று கேட்க, அதற்கு சீதா நான் அருணை நெனச்சி தான் சொன்னேன் என்று சொன்னதும் கோபமாக முத்து வீட்டை விட்டு கிளம்பி போகிறார். இப்படியான நிலையில் தான் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில், கோபத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் முத்து நாம நம்முடைய வீம்பு மற்றும் பிடிவாதத்தால் சீதாவின் வாழ்க்கைக்கு எதிராக இருக்கிறோமோ? அவளுடைய ஆசை கனவுகளை தடுப்பதற்கு நாம யாரு என்று யோசித்துப் பார்க்கிறார்.
பிறகு வீட்டிற்கு வருகிறார். அப்போது அங்கு ஒரு தம்பதி முத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அதை பார்க்கும்போது சீதாவும் அருணும் நிற்பது போன்று முத்துவுக்கு தெரிகிறது. பிறகு சீதாவிடம் நீ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு மாப்பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும் மீனா வழக்கம் போல கோபப்படுகிறார். அதற்கு முத்து சீதாவிடம் நீ அந்த அருணுடைய அம்மாவை நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லு என்று சொன்னதும் சீதா சந்தோஷப்படுகிறார்.
ஏற்கனவே இந்த சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெளியிட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவில் அருண் சீதா என்று பேனர் ஒன்று இருந்தது. இதனால் அருண் மற்றும் சீதாவிற்கு தான் திருமண ஏற்பாடுகளை முத்து செய்யப் போகிறார். இந்த திருமணத்தில் தான் பலர் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க போகிறது என்று தெரிகிறது. ஏற்கனவே ரோகிணி ஸ்ருதியின் அம்மாவிடம் 2 லட்சம் பணம் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு ஸ்ருதியின் அம்மா அந்த ரோகினியை வைத்துதான் அண்ணாமலை வீட்டிற்குள் பிரச்சனை செய்து ஸ்ருதியை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று யோசித்து இருக்கிறார். அதேபோல முத்துவுக்கு தெரியாமல் மீனா அருண் மற்றும் சீதாவிற்கு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்திருக்கிறார். இநத உண்மைகளும் தெரிய வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் அடுத்த வாரம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications