சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு துரத்தப்படும் அண்ணாமலை.. கடைசியில் மனோஜ் சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத அதிரடியான சம்பவங்கள் நடைபெறுகிறது. அதாவது சிந்தாமணியால் அண்ணாமலை குடும்பம் மொத்தமும் வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுகின்றனர். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் இப்போது வந்துவிட்டது. இதுவரைக்கும் சிந்தாமணி பேச்சைக் கேட்டு விஜயா ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் கடைசியில் தான் சிந்தாமணி எவ்வளவு பெரிய சூழ்ச்சிகாரி என்பது விஜயாவுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் பொய் கையெழுத்து போட்டு வீட்டு பத்திரத்தை கொடுத்து பணம் வாங்கிய மனோஜ்க்கு இன்னும் அந்த வருத்தமும், தான் செய்த தப்பும் புரியவே இல்லை.
அதாவது கடந்த வாரத்தில் சிந்தாமணி மீது மீனா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகிறேன் என்று மிரட்டி இருந்தார். இதனால் கடுப்பான சிந்தாமணி மீனா வீட்டில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மனோஜ் கையெழுத்து போட்டு பணம் வாங்கிய பைனான்சியரிடம் சொல்லி மனோஜ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்திருந்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
இதனால் மனோஜை ஜெயிலில் போட்டிருந்தனர். அப்போது ரோகிணி தான் 5 லட்சம் பணம் கொடுத்து பைனான்சியரிடம் மனோஜ் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க செய்திருந்தார். இதனால் மனோஜ்க்கு தான் செய்த தப்பு மறந்து போய்விட்டது, தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் செய்த உதவிகளும் மறந்துவிட்டது. வழக்கம்போல முத்து மீனா யாருமே எனக்காக உதவி செய்யல ரோகிணி தான் வந்து எனக்கு உதவி செய்தாய் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, இரண்டாவது முறையாக சிந்தாமணியிடம் மீனா மோதி இருந்தார். இதனால் கடுப்பாக சிந்தாமணி தற்போது வெளியான ப்ரோமோவில் இனி அந்த மீனா குடும்பம் நிம்மதியாகவே இருக்க கூடாது எனக்கு ஒரே நாளில் 30 லட்சம் பணம் வேண்டும் என்று நோட்டீஸ் விடுங்க என பைனான்சியரிடம் சொல்லி இருக்கிறார். அதுபோல பைனான்ஸியரும் செய்திருக்கிறார்.

40 லட்சம் கடன்
மனோஜ் வாங்கிய 40 லட்சம் கடனில் முத்து 10 லட்சம் கடனை அடைத்திருக்கிறார். மீதமுள்ள 30 லட்சத்தை ஒரே நாளில் வேண்டும் என்று கேட்டதால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். அப்போது அண்ணாமலை இதிலிருந்து நாம வெளியே வர முடியாதா? வீடு ஏலம் போகுவதை தடுக்க முடியாதா என்று சென்டிமெண்டாக பேச முத்து மீனாவும் அண்ணாமலைக்கு ஆறுதலாக பேசுகின்றனர்.

மனோஜ் சொன்ன விஷயம்
ஆனால் மனோஜ் அது எப்படி இனி தடுக்க முடியும்? அதுதான் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களே... நோட்டீஸ் அனுப்பின பிறகு எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார். இதை கேட்கும் போதே அனைவருக்கும் எரிச்சல் வரும். அந்த அளவிற்கு தான் அவருடைய பேச்சு இருக்கிறது. இதுவரைக்கும் அடுத்தவர்களையும் தன்னுடைய மூத்த மகன் மனோஜ் மட்டுமே நம்பிக் கொண்டிருந்த விஜயா இந்த முறை மொத்த குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுகிறார்.

விஜயாவின் மனமாற்றம்
இனி இவர்கள் யாருடைய வீட்டில் வாழப்போகிறார்கள் என்ற கேள்விகள் இருக்கிறது. அதாவது இவர்கள் அனைவருமே மீனாவின் அம்மா வீட்டுக்கு தான் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனாவின் அம்மாவை ஒவ்வொரு இடத்திலும் அசிங்கப்படுத்திய விஜயா அங்க போயாவது திருந்துவாரா? அல்லது அங்க போய்யும் இந்த வீட்ல இது கூட இல்லையா? அது கூட இல்லையா? என்று வசனம் பேச போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications