சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் அண்ணாமலை கேட்ட கேள்வி! புதியதாக வெடித்த பூகம்பம்.. முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயாவிடம் சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லி அண்ணாமலை பேசுகிறார். ஆனால் விஜயா அதற்கு முடியாது என்று சொல்லிவிடுகிறார். அதே நேரத்தில் மீனா வீட்டில் புது பிரச்சனையும் வெடிக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலை பார்வதி வீட்டிற்கு வந்து விஜயாவிடம் சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்க சொல்லி பேசுகிறார். ஆனால் விஜயா வாபஸ் வாங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அதற்கு அண்ணாமலை அந்த பையன் படிக்கிற பையன் இப்போ மனம் திருந்திட்டான் அதனால் அவனை தண்டிக்கிறது தப்பு.

நீ கேஸ் வாபஸ் வாங்கு என்று மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க அதற்கு விஜயா சரி கேஸை வாபஸ் வாங்குறேன் ஆனால் அந்த வீட்டில் மீனா இருக்கக்கூடாது என்று சொல்ல அதற்கு அண்ணாமலை முத்துவை என்ன செய்ய என்று கேட்க அவனும் வேணும்னா வீட்டை விட்டு போகட்டும் என்று சொல்லி விடுகிறார்.
அண்ணாமலை இந்த வீட்டில் நீ எப்போதும் மீனா மீது கோபத்தை காட்டிக்கொண்டே இருக்க, மீனாவை பேசுற மாதிரி மற்ற ரெண்டு மருமகளை பேசினால் அவங்க புருஷன்களை கூட்டிட்டு போயிருவாங்க. முத்து மீது எப்போதும் கோபத்தை மட்டும் தான் காட்டுற. அவன் மீது உனக்கு பாசமே இல்ல, முத்து இன்னைக்கு திருந்தி இருக்கிறதுக்கு காரணமே மீனாதான் என்று சொல்கிறார்.

ஆனாலும் விஜயா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்க, அதற்கு அண்ணாமலை பிடிவாதமும் ஒரு வியாதி தான் நீ இப்படியே இருந்தா இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். வீட்டுக்கு வந்த அண்ணாமலையிடம் முத்துவும் மீனாவும் அம்மா என்ன சொன்னாங்க என்று கேட்க அதற்கு அண்ணாமலை விஜயா பிடிவாதமா இருக்கிறா, கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா அவ அப்படி வாங்கணும்னா நீங்க ரெண்டு பேரும் வீட்டில் இருக்கக் கூடாதுன்னு சொல்கிறா என்று சொல்கிறார்.

இதற்கிடையில் அண்ணாமலை பார்வதி வீட்டில் இருந்து வெளியே போகும்போது அங்கு ரோகிணியும் மனோஜும் வருகின்றனர். அப்போது ரோகிணி அத்தை மனசு மாறிட்டீங்களா? அத்தையும் கூப்பிடறதுக்காக வந்தீங்களா? என்று கேட்க அதற்கு அண்ணாமலை எதுவும் பேசாமல் கோபமாக கிளம்பி விடுகிறார்.

பிறகு மனோஜ் விஜயாவிடம் நீ கேஸை வாபஸ் வாங்காதம்மா அப்படி வாங்கினால் அவனுக்கு உன் மேல இருக்கிற கோபத்தில் ஒருவேளை வீட்டுக்கே வந்து உன்னை கத்தியால் குத்திருவான் என்று பயமுறுத்துகிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் வக்கீல் இடம் விஜயா கேசை வாபஸ் வாங்கவில்லை என்று சொல்ல, அதற்கு அவர் அப்படி என்றால் 5 லட்சம் வரை செலவாகும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் முத்துவிற்கு, சீதாவிற்கு வரன் பார்த்த மாப்பிள்ளை போன் பண்ணி எனக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் இப்படி ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பையன் வீட்டில் இருக்கும் நிலையில் அந்த வீட்டில் சம்பந்தம் வச்சா பிரச்சனை என்று வீட்டில் எல்லாரும் சொல்றாங்க என்று சொல்ல, அதற்கு முத்து திருமணத்திற்கு பிறகு இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீங்க என்று கேட்க, சீதாவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி இருப்பேன் என்று சொல்கிறார்.
இதனால் நீ என்னடா சொல்றது நாங்களே சொல்றோம். நீ வேண்டாம் என்று திட்டி விட்டு போனை வைத்து விடுகிறார். அந்த நேரத்தில் சீதாவின் அம்மா முத்துவுக்கு போன் பண்ணி வக்கீல் பார்க்க போன விஷயம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு முத்து சமாளித்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications