சிறகடிக்க ஆசை: ரோகிணி பணத்தை திருடியதும் நடந்த சம்பவம்.. மீனாவின் செம மாற்றம்.. எதிர்பாராத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி விஜயாவின் பணத்தை திருடி இருக்கிறார். அதே நேரத்தில் மீனாவிடம் ஸ்ருதி பல மாற்றங்களை செய்து இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவின் டெக்கரேஷனை பார்த்த ஸ்ருதி சூப்பரா இருக்கு இதை சோசியல் மீடியாவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடு செய்யணும் அதற்கு நீங்களே மாடலா இருக்கணும் என்று மீனாவின் லுக்கை மாற்றி போட்டோ எடுக்கிறார். பிறகு முத்து சொல்லி கொடுக்கும்படி மீனா போஸ் கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் ரோகினி மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது சிட்டி போன் செய்து இன்னும் பணம் வரல என்று கேட்க, ரோகினி நான் அனுப்புனா தானே வரும் என்று கேட்க, அதற்கு கோபமான ஸ்ருதி என்ன கலாய்க்கிறீங்களா? கொஞ்ச நேரம் ஆனா அந்த பிஏ பாடியை உங்க வீட்டில கொண்டு போட்டுட்டு போயிடுவேன். அவன் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்று சொன்னதும் ரோகிணி பதறி போய் விஜயாவின் பணத்தை எடுக்க முடிவு செய்கிறார்.
பிறகு விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரதி உங்கள மாதிரி டான்ஸ் ஆடவே முடியாது மாஸ்டர் என்று ஐஸ் வைத்ததும் விஜயா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். பிறகு எல்லோரும் கிளம்ப அந்த நேரம் பார்த்து ரோகிணி வருகிறார்.

இன்னைக்கு மேக்கப் போட ஒரு வீட்டுக்கு போயிருந்தேன். அங்கு உங்களப்பத்தி பேசினதாகவும் அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருச்சு. உங்களுக்காக ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க என்று சொல்லி எடுத்து வைக்கிறார். பிறகு விஜயா மற்றும் பார்வதியை சாப்பிட வைத்துவிட்டு ஃபோன் வந்திருக்கிறது என்று நைசாக மேலே சென்று பணத்தை எடுத்து பேக்கில் வைத்து விட்டு கீழே வந்து ஒன்னும் தெரியாதது போல பேச்சு கொடுக்கிறார்.
அப்போது மீனா சாப்பாடு சாப்பிட்டு எனக்கு நாக்கு எல்லாம் செத்துப் போச்சு என்று விஜயா சொன்னதும் பார்வதி அதான் மீனா நல்லா சமைப்பாளே என்று சொல்ல, அவ நல்லா தான் சமைப்பா ஆனா அவளுக்கு இந்த மாதிரி வாங்கி தர தெரியாது.. என்னுடைய மூன்று மருமகள்களில் ரோகிணி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று விஜயா பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ரோகிணி இப்போ கிளம்பலாமா என்று யோசிக்கிறார். ஆனாலும் இப்போ நாம கிளம்பிட்டோம்னா நம்ம மேல சந்தேகம் வந்துரும் என்று விஜயாவோடு கிளம்பலாம் என்று முடிவு எடுக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதி மீனாவிற்கு சொல்லிக் கொடுக்க மீனாவும் அதே போல செய்ய முத்து போட்டோ எடுக்கிறார்.
அந்த நேரத்தில் ரவி வருகிறார். ரவி பார்த்ததும் மீனா வெக்கப்பட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். அதற்கு பிறகு ஸ்ருதி சமாதானம் செய்து மீனாவை மீண்டும் போட்டோ எடுக்கிறார். அந்த நேரத்தில் ரோகினி, விஜயா, மனோஜ் மூன்று பேரும் வீட்டிற்கு வருகின்றனர். மீனாவை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications