ஸ்ருதியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட ரவி.. புது பிரச்சனையில் மீனா.. ரோகினி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதியின் சுய ரூபத்தை தெரிந்து கொண்ட ரவி அதிர்ச்சியாக இருக்கும் போது விஜயா வந்து வீட்டிற்கு கூப்பிடுகிறார்.

அதே நேரத்தில் விஜயாவால் மீனா புது பிரச்சனைகள் மாட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் பார்வதி விஜயாவுக்கு போன் போட்டு ரவி பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க என்று கேட்கிறார். அதற்கு விஜயா நான் என்ன முடிவு பண்றது. அவன் பேர எடுத்தாலே முத்து அப்படியே எறிந்து விழுகிறான் என்று சொல்லி சொல்கிறார். அதற்கு பார்வதி சரி முத்துவை விடு உன் வீட்டுக்காரர் சமாதானம் பண்ணுனியா? அவரை வைத்து முத்துவை சரி பண்ணிடலாம் என்று பார்வதி ஐடியா கொடுக்கிறார்.
அதற்கு விஜயா அந்த பொண்ணு(ஸ்ருதி) என்ன ஐடியாவில் இருக்கிறது என்று தெரியலையே. அப்புறம் ரவி அந்த பக்கமாக சாய்ந்துட்டா எதுவும் பண்ண முடியாது என்று விஜயா புலம்புகிறார். இதைத் தொடர்ந்து ரோகிணி மனோஜிடம் இந்த மாதம் எவ்வளவு கார் சேல் பண்ணியிருக்க என்று கேட்க அதற்கு மனோஜ் குத்து மதிப்பாக 15 என்று அளந்து விடுகிறார்.

அதைக் கேட்டதும் சந்தோஷமான ரோகிணி சூப்பர் அப்படின்னா நீ எம்டி கிட்ட சம்பளத்தை ஏத்தி கேளு, கண்டிப்பா கொடுப்பாரு என்று சொல்ல வேறு வழியில்லாமல் மனோஜ் சரி என்று அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பி வெளியே போகிறார். அப்போது அண்ணாமலை ஏண்டா நீயே ஷோரூமில் வேலை பாக்குற.
ஆனால் தினம் ஆட்டோவில் போயிட்டு இருக்கே, நீ கார் கம்பெனியில் தானே வேலை பார்க்கிற அங்கேயே லோன் போட்டு ஒரு கார் வாங்கிடு என்று சொல்ல இதுவும் நல்ல ஐடியா தான் நீயே உன் எம்டி கிட்ட பேசு அவர் உனக்கு நல்ல விலையில் கார் கொடுப்பார் என்று ரோகிணியும் ஐடியா கொடுக்கிறார்.
அப்போது நானே வேலை இல்லாமல் இருக்கிறேன். ஆனால் இவங்க என்னை வச்சு போடுற பிளான் இருக்கே என்று மனோஜ் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா இன்னைக்காவது ஒரு நல்ல வேலையோட வா என்று சொல்லி அனுப்பி வைக்க அதை கேட்ட அண்ணாமலை என்ன வேலை என்று கேட்கிறார்.

விஜயா அதற்கு சமாளித்து மனோஜை அனுப்பி வைக்கிறார். பிறகு மீனா சமையல் வேலையை முடித்துவிட்டு கோவில் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்ப அப்போது பார்வதி அண்ணாமலை வீட்டுக்கு வருகிறார். அண்ணாமலை இடம் நலம் விசாரித்துவிட்டு காலையிலிருந்து எதுவும் சாப்பிடல என்று பார்வதி சொன்னதும், விஜயா சரி வா நாம சாப்பிடலாம் என்று சொல்லி சாப்பாடு போட்டு கொடுத்து குழம்பை மூடாமல் திறந்து வைத்துவிட அதில் பல்லி விழுந்து விடுகிறது.
இன்னொரு பக்கத்தில் ஸ்ருதி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய தோழி அவருக்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குழந்தை பெத்துக்கிட போறேன் அதனால வேலையை விட போவதாக அவர் சொல்ல, அதற்கு ஸ்ருதி அப்புறம் உன்னோட லைப்பே போயிடும். முதல்ல லைஃபை என்ஜாய் பண்ணு என்று அறிவுரை கூறுகிறார்.
அதோடு எனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்கிற ஐடியாவே கிடையாது. ஏன் பெத்துக்காம கூட போகலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு ரவி அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கத்தில் மீனா எப்படியாவது இன்னைக்கு பைனான்சியரை பார்த்து காரை வாங்கி விடனும் என்று சொல்லி பைனான்ஸ் ஆபீஸில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்.

பைனான்சியர் மீனாவை பார்த்ததும் வேண்டுமென்றே அவரை சாக்கு போக்கு சொல்லி அங்கேயே காத்து இருக்க வைக்கிறார். பிறகு வீட்டில் விஜயாவும் பார்வதியும் வெளியே கிளம்பி போகின்றனர். ரவியை அவருடைய ரெஸ்டாரண்டில் போய் பார்க்க வேண்டும் என்று போய்க்கொண்டிருக்கும் போதே வழியில் பார்த்து விடுகின்றனர்.
அப்போது விஜயா ரவியிடம் நலம் விசாரித்து விட்டு நீ வீட்டுக்கு வந்துடு என்று சொல்ல, அதற்கு ரவி நான் மட்டும் எப்படி வர முடியும்... ஸ்ருதி என்று கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications