உச்சகட்டத்தில் சிறகடிக்க ஆசை.. தன் உயிரையே விற்ற முத்து.. ரகசியமாய் மீனா செயல்.. நெகிழ வைத்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கும் முத்து தன்னுடைய காரை விற்று பணத்தை ரெடி செய்கிறார்.

அதே நேரத்தில் ரவிக்கு அப்பாவுடைய நிலைமை தெரிய வந்து இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஹாஸ்பிடலுக்கு யாருக்கும் தெரியாமல் மீனா வருகிறார்.
இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். அந்த வகையில் மீனாவும் அவருடைய அம்மா, தங்கச்சியும் ஒரு சாமியார் பெண்ணிடம் சென்று தன்னுடைய நிலைமையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் ஒரு கயிறு ஒன்றை கொடுத்து மாமனார் கையில் கட்டி விட்டால் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.
மறுபக்கம் மீனாவையும் காணாமல் முத்து தேடி அலைந்து பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி கந்து வெட்டிக்காரரை வேகவேகமாக சென்று சந்தித்து அவரிடம் 4 லட்சம் ரூபாய் கேட்கிறார். அவர் டாக்குமெண்ட் என்ன கொண்டு வந்திருக்கீங்க என்று கேட்க அப்போது வீட்டு பத்திரத்தை காணல சாயங்காலத்துக்குள் தேடிக் கொண்டு வந்து கொடுத்து விடுவேன்.
இப்ப பணத்தை மட்டும் கொடுங்க என் அப்பா உயிரை காப்பாத்தணும் என்று சொல்ல அதற்கு வட்டிக்கடைக்காரர் நாளைக்கு உங்க அப்பா செத்துப் போயிட்டா நான் என் பணத்தை எப்படி வாங்குவது என்று அலட்சியமாக பேச அதை கேட்டு அதிர்ச்சியான முத்து அவரை அடிக்கப் போகிறார். பின்பு அங்கிருக்கும் அடியாள்கள் வந்து முத்துவை அடிக்க செய்கின்றனர்.

அப்போது கந்துவட்டிக்காரர் அவனை விடுங்க என்று சொல்ல முத்து உன் பணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று கோபமாக திட்டி விட்டு அங்கிருந்து வெளியே வருகிறார். அதை தொடர்ந்து மீனா அம்மாவையும் சீதாவையும் வீட்டுக்கு போக சொல்லிவிட்டு அண்ணாமலையை பார்க்க ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறார்.
அப்போது சீதா ரவிக்கு போன் போட்டு அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரவி இந்த நிலைமைக்கு நான்தான் காரணம் என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்க அதற்கு ஸ்ருதி ஆறுதல் சொல்லி 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து முத்து காரை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார்.
அங்கு மரத்தின் அடியில் ஒரு விநாயகர் சிலை வீசப்பட்டிருக்கிறது. அதை பார்த்து கண்ணீர் விட்டு தன் நிலமையை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மெக்கானிக் போன் செய்து கார் ரெடியாயிடுச்சு. புது கார் மாதிரி ரெடி பண்ணி இருக்கிறேன். அந்த கார பார்த்துட்டு ஒருத்தர் நாலு லட்சம் ரூபாய் வேணும்னு சொல்றாரு என்று எதார்த்தமாக பேசுகிறார்.
அதைக் கேட்டு முத்து உடனே அந்த காரை நான் விற்க போகிறேன் என்று சொல்லிரு என்று சொல்கிறார்.செட்டுக்கு வந்து காரை வாங்குகிறேன் என்று சொன்னவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு உங்களிடம் டாக்குமெண்டை நான் சாயங்காலம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, அதற்கு அவர் அதை பொறுமையாக தாங்க இப்போ உங்க உங்க அப்பாவுக்கு ஹாஸ்பிடலில் போய் இந்த பணத்தை கட்டுங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஹாஸ்பிட்டலில் முத்து இந்த பணத்தை கொண்டு கட்ட அப்போது மனோஜ் இப்போ ஆப்ரேஷன் பணத்தை மட்டும் கட்டியாச்சி. ஆனால் இன்னும் ஒரு மூன்று லட்சம் ஆகுமே என்ன பண்ண என்று கேட்க என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நிற்கின்றனர். அப்போது விஜயா தன்னுடைய நகைகளை கழட்டி கொடுத்து இதை வைத்து ரெடி பண்ணு என்று சொல்கிறார்.
இதை எல்லாம் மறைந்து நின்று மீனா பார்த்து கண் கலங்குகிறார். அப்போது ரோகிணியும் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று தன் கையில் இருக்கும் நகைகளை கழட்ட அதை முத்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கான எபிசோடு என்று வெளியான வீடியோவில் யாரும் மருத்துவமனைக்குள் இல்லாத நேரத்தில் பார்த்து மீனா அண்ணாமலையின் பக்கத்தில் சென்று கையில் அந்த கயிறை கட்டுகிறார். அப்போது அங்கு விஜயா, ரோகினி, மனோஜ் மூவரும் வருகின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications