சிறகடிக்க ஆசை: முத்துவிற்கு இடியென வந்த செய்தி! கதறி அழுத விஜயா.. அண்ணாமலை கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோட் பார்வதியின் வீட்டில் காணாமல் போன பணத்தை மீனாதான் எடுத்தார் என்று விஜயா ஆர்ப்பாட்டம் செய்ய, அதற்கு அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பார்வதி வீட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை என்று விஜயாவிடம் சொன்னதும் விஜயாவும் சேர்ந்து வீட்டில் எல்லா இடத்திலும் தேடி பார்க்கிறார். பிறகு வீட்டிற்கு யார் வந்துட்டு போனது என்று யோசிக்க மீனா மட்டும்தான் வந்துட்டு போனா அப்போ அவ தான் எடுத்திருப்பா என்று விஜயா சொல்ல, அதற்கு பார்வதி அப்படி சொல்லாத அவ உன்னுடைய மருமக வேற யாராவது எடுத்தாங்களானு தெரியலையே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மற்ற பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க பார்வதியின் நகை பணம் எல்லாம் இருக்கிறது.

television siragadikka aasai serial vijay tv

இந்த இரண்டு லட்சம் மட்டும் காணவில்லை என்பதால் இதை பிளான் பண்ணி மீனா எடுத்துட்டா, வக்கீல் அவங்க கிட்ட சொல்லி இருப்பாரா இருக்கும் அதனாலதான் மீனாவுக்கு தெரிஞ்சு அவ எடுத்து இருக்கா என்று விஜயா அடித்து கூறுகிறார்.

பிறகு நான் வீட்டிற்கு போறேன் போன் பண்ணு என்று புது நாடகம் போட போகிறார். அந்த நேரத்தில் வீட்டில் மீனா தனக்கு ஒரு கல்யாண ஆர்டர் கிடைத்திருக்கிறது அதை முடிப்பதற்காக போறேன் என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா வீட்டிற்கு வந்து இவ என்ன அடிக்கடி வெளியே போறா என்று கேட்க அவளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது அதான் போறா என்று அண்ணாமலை சொல்கிறார்.

சாமியை திட்டுறதால மனைவிக்கு இப்படி ஆகிடுச்சா? 4 வருஷமாக கோமாவில் இருப்பது பற்றி சத்யராஜ் எமோஷனல்
அப்போது விஜயா பார்வதிக்கு மிஸ்டு கால் கொடுக்க, பார்வதி திருப்பி போன் செய்கிறார். அதில் உன் வீட்டில் வைத்திருந்த பணத்தை காணுமா வேற யாரும் வரலையா? மீனா மட்டும்தான் வந்திருந்தாளா? என்று கத்தி பேச அதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது விஜயா பார்வதியிடம் மீனா மீது தான் நீ சந்தேகப்படுறியா? என்று கேட்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் பார்வதி இவள் என்ன பேசிட்டு இருக்கிறாள் என்று புரியாமல் இருக்கும்போது... விஜயாவிடம் இருந்து போனை பிடுங்கி முத்து பார்வதியிடம் பேசுகிறார். அப்போது நீங்க மீனா மீது சந்தேகப்படுறீங்களா? அத்தை உங்களுக்கு மீனா பத்தி தெரியும் தானே என்று கேட்க, பார்வதி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே அண்ணாமலையும் விஜயாவை திட்டுகிறார். அதற்கு விஜயா பார்வதி வீட்டில் இருந்த இரண்டு லட்சம் காணாமல் போயிடுச்சு அதற்கு காரணம் மீனாதான்னு பார்வதி சந்தேகப்படுறா.. முத்துவும் மீனாவும் தான் அந்த பணத்திற்கு பொறுப்பேத்துக்கணும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

அதற்கு முத்து நாங்க எதிர்க்க பொறுப்பு ஏற்றுக்கொள்ளனும் பணம் காணவில்லை என்றால் போலீஸில் கம்பிளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சியாகி திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரவியும் ஸ்ருதியும் முத்து மீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

உங்களுடைய டான்ஸ் ஸ்கூலுக்கு ஸ்டுடென்ட் எத்தனை பேர் வர்றாங்களே அவங்க யாராவது எடுத்து இருப்பார்கள் என்று கேட்க அவங்க கலை கத்துக்க வராங்க அவங்க தப்பு பண்ண மாட்டாங்க என்று அவங்களுக்கு சப்போர்ட்டாக விஜயா பேச அதற்கு முத்து கோபப்படுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது அண்ணாமலை உனக்கு முத்து மீனா மீது எப்போதும் வன்மம் தானா? அவங்க வீட்டை விட்டு வெளியே போக வைக்கணும்னு தானே நீ இப்படி பேசிட்டு இருக்குற. நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அவங்க இந்த வீட்டை விட்டு போக மாட்டாங்க என்று சொல்ல முத்து நாங்க கண்டிப்பா போக மாட்டோம் என்று சொல்கிறார்.

பிறகு மீனா அழுது கொண்டிருக்கிறார். அவரை முத்து சமாதானப்படுத்துகிறார். பார்வதி அத்தையை பற்றி எனக்கு நல்லா தெரியும். அவங்க கண்டிப்பா இப்படி அடுத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேச மாட்டாங்க. இதுல அம்மா தான் ஏதோ கேம் விளையாடுறாங்க அதை கண்டிப்பா கண்டுபிடிக்கணும் என்று முத்து சொல்லுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+