சாமியை திட்டுறதால மனைவிக்கு இப்படி ஆகிடுச்சா? 4 வருஷமாக கோமாவில் இருப்பது பற்றி சத்யராஜ் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய மனைவி நான்கரை வருடமாக கோமாவில் இருக்கும் செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகர் சத்யராஜின் மகள் சமீபத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார், அதில் தன்னுடைய அம்மா கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறி இருந்தார். இந்த நிலையில் சத்யராஜ் கலாட்டா youtube சேனலில் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது தன்னுடைய மனைவியின் நிலை குறித்தும் பேசி இருக்கிறார்.

television sathyaraj

அதில், ஒரு தராசில் ஆசை அதிகமாக இருந்தால் துன்பமும் அதிகமாக தான் இருக்கும். ஆசை குறைந்துவிட்டால் துன்பமும் குறைந்துவிடும். நாம் ஆசைப்படுவது நம்முடைய இஷ்டம். அது நிறைவேறுமா? இல்லையா? என்பது நம்முடைய கையில் இல்லை. நாம் ஒரு படத்தில் நடிக்கிறோம் அந்த படம் ஓடுமா? ஓடாதா? என்பது நமக்கு தெரியாது.

காரணம் என்னவென்றால் அதனுடன் வெளியாகும் திரைப்படங்கள் எப்படிப்பட்ட திரைப்படங்களாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது. அதனால் எந்த விஷயமும் நம்முடைய கையில் இல்லை. அதனால் டேக் இட் ஈசி என்ற பாலிசியில் நம்முடைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கணவரை பிரிந்து விட்டேன்.. ஏ.ஆர். ரஹ்மானிடம் வேலை பார்க்கும் Bassist மோகினி டே திடீர் பதிவு
பொதுவாக ஒரு நடிகனுக்கு எந்தவிதமான கஷ்டங்கள் இருந்தாலும் அவன் கேமரா முன்பு சென்று விட்டால் அவன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும். இதுதான் அத்தியாவசியமானது. அந்த இடத்தில் எந்த பர்சனல் பிரச்சனைகளுக்கும் இடம் கிடையாது.

television sathyaraj

என்னுடைய வாழ்க்கையில் பர்சனல் பிரச்சனைகள் என்னுடைய நடிப்பு வாழ்க்கையில் குறுக்கீடு செய்தது கிடையாது. இப்போ கூட என்னுடைய மனைவி கோமாவில் இருக்கிறார் என்ற செய்தி என்னுடைய நெருக்கமானவர்களுக்கு ஏற்கனவே தெரியும். அதிலும் சிவக்குமார், பிரபு போன்றவர்களின் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் நன்றாகவே தெரியும்.

கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் சந்தோஷம், தூக்கம் என எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். இப்போது கூட என்னுடைய பேரன்களோடு நான் அதிகமாக விளையாடுவேன்.

television sathyaraj

எனக்கு டென்னிஸ் விளையாட தெரியும். பேர குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாட தெரியும் என்பதால் நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். அதற்கு பிறகு ஓவியம் வரைந்து கொள்வோம் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதும் ஒரு வரம் தான். இன்னொரு விஷயம் நான் சாமியே கும்பிட மாட்டேன் அதனால் தான் என்னுடைய மனைவிக்கு இப்படி நடக்கிறது என்றெல்லாம் கமெண்ட் இருப்பதாக கூறுகிறீர்கள்.

சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் கஷ்டம் இல்லையா என்ன? சாமி கும்பிடுபவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் வந்ததில்லையா? உடல்நிலை சரியில்லாமல் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அவதிப்பட்டதில்லையா? அவர்கள் வீட்டில் யாரும் தற்கொலை செய்து கொள்வது கிடையாதா? குடும்பத்தோடு கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து இல்லையா? என்று அந்த பேட்டியில் சத்யராஜ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+