Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: முத்துவிற்கு விஜயாவை பற்றி தெரிய வந்த உண்மை.. ரோகிணியிடம் மாட்டும் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ரவியை சுருதி முன்னணியில் முத்து அடிக்க போக சுருதி கோவப்பட்டு திட்டுகிறார். இதனால் மேலும் பிரச்சினை அதிகமாகிறது.

அதைத் தொடர்ந்து வசீகரனுக்கு பணம் கொடுப்பதற்காக பார்க்குக்கு போன ரோகிணி அங்கு மனோஜை பார்த்து விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் மீனாவும் திரும்ப வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து எனக்கு உன்னை தூக்கியதால் கை வலிக்கிறது, பசிக்கிறது வா போய் சாப்பிட்டு வரலாம் என்று ஒரு ரெஸ்டாரண்டுக்கு போகின்றார். அங்கு ரவியும் சுருதியும் சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

siragadikka aasai serial November 23th promo and episode full update

அதை பார்த்த முத்து இங்க வேணாம் வா வேற ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று கிளம்பும்போது முத்துவை ரவி பார்த்து சந்தோஷமாக முத்து எப்படி இருக்க என்று பேச ஓடி வருகிறார். அதற்கு முத்து யாருடா நீ என்கிட்ட வந்து பேசுற என்று அவமானப்படுத்தி பிடித்து தள்ளி விடுகிறார். அப்போது அங்கு ஹோட்டலில் இருப்பவர்கள் வந்து விசாரிக்க இது என்னுடைய அண்ணன் தான் என்று ரவி சொல்ல அதற்கு நீ என் தம்பி எல்லாம் கிடையாது என்று முத்து திட்டுகிறார்.

அதனால் கோபமான சுருதி நீங்க ஓவரா பண்றிங்க அன்னைக்கே ஸ்டேஷனில் அந்த மாதிரி தான் ரவியை அடிச்சீங்க, அப்போ சரி கோவத்துல பண்றீங்கன்னு பார்த்தா இப்போவும் ரவியை திட்டிக்கிட்டே இருக்கீங்க. நாங்க என்ன தப்பு பண்ணுனோம் என்று கேட்க, அதற்கு மீனா நீங்க பண்ணுனது தப்பு இல்லையா? ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவீங்க அதோட என்ன வேணும்னே இதுல மாட்ட வச்சிட்டீங்க.

உங்களால நாங்க பிரியுற வரைக்கும் போயிட்டோம் என்று சொல்ல, அதற்கு சுருதி மன்னிச்சிடுங்க இதுல மீனா உடைய தப்பு எதுவும் இல்லை என்று சொல்ல அதற்கு முத்து நீ அந்த ஏமாற்றுக்காரன் பொண்ணு தானே அப்படித்தான் இருப்பே என்று திட்டுகிறார். அதற்கு ரவி நீ என்னை என்ன வேணாலும் பேசு சுருதியை எதுவும் பேசாத என்று சொல்ல, அங்கிருந்து முத்துவை சமாதானம் செய்து மீனா கூட்டிக்கொண்டு வருகிறார்.

மறுபக்கத்தில் விஜயா வீட்டிற்கு பார்வதி வருகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ரவியை வீட்டுக்கு கூட்டிட்டு வருவதற்கு அண்ணாமலை அண்ணன்கிட்ட பேசினியா என்று கேட்க அப்போது விஜயா ரவி பேச்சை கேட்டாலே அவர் கோபப்படுகிறார் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து அங்கு வரும் போதே, அவன் எல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அவன் எல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிட்டேன் என்று சொல்கிறார்.

உடனே எப்ப அவன்கிட்ட சொன்ன என்று விஜயா கேட்க அதற்கு மீனா வரும்போது ரெஸ்டாரண்டில் ரவியும் சுருதியையும் பார்த்தோம் அவங்கள பார்த்ததும் முத்து கோபப்பட்டு கத்துனாரு என்று சொல்கிறார். அதை தொடர்ந்து மீனா அண்ணாமலை கிட்ட மாமா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. ரவி அவருக்கு புடிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ஆனா இப்ப அவர் நம்ம கூட சேர்ந்து இருக்கணும்னு நினைக்கிறாரு. அவங்கள வீட்டுக்கு கூப்பிடலாமே என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு விஜயா ஆமாம் கரெக்டா தான் சொல்றா என்று சப்போர்ட் செய்கிறார்.

இப்படியாக இந்த எபிசோடு முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து நாளைக்கு என வெளியான வீடியோவில் வசீகரனுக்கு பணம் கொடுப்பதற்காக ரோகிணி பார்க்குக்கு வருகிறார். அங்கு மனோஜ் பார்க் நண்பரோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதை ரோகிணி பார்த்து விட அதை பார்த்து அதிர்ச்சியாகி மனோஜ் நிற்கிறார். இதனால் இனி மனோஜ் பற்றிய உண்மை வெளிவர இருக்கிறது.

அதை போல அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் மீனா உடம்பு வலியில் இருக்கும் முத்துவிற்கு முதுகில் மிதித்து மசாஜ் செய்து கொண்டிருக்க அப்போது முத்து கத்துவதை கேட்டு பதறி போன விஜயா ஐயோ என் பிள்ளையை நீ மிதிக்கிறியா? என்று கத்துகிறார். இதை பார்த்த முத்து எங்க அம்மாவுக்கு என் மேல எவ்வளவு பாசம் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+