சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனை.. மனோஜால் ஆபத்தில் சிக்கும் குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் தன்னுடைய கடையிலிருந்த முட்டையை பற்றி சொல்கிறார். அதோடு விஜயாவையும் விரதம் இருக்க வேண்டும் என்று சொல்ல அதை விஜயா கேட்காத போது அவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவை கரெக்ட் பண்ணுவதற்கு என்ன பண்ண என்று மீனாவை ஃபாலோ பண்ணும் நபர் முத்துவிடம் ஐடியா கேட்கிறார். அதற்கு முத்துவும் அந்த பொண்ணை பார்க்கும்போது பெயர் கேட்டதற்கு சாரி நானே உங்களுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன் என்று பேசுங்க என்று ஐடியா கொடுத்து அனுப்புகிறார்.

அடுத்ததாக வீட்டில் மனோஜ் விஜயாவை கூப்பிட்டு உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்க, விஜயா எனக்கு உன்னை தான் பிடிக்கும் என்று சொல்கிறார். அதற்கு பிறகு கடையில் முட்டை இருந்த விஷயத்தையும் ஜோசியரை பார்த்த விஷயத்தையும் சொல்கிறார். அதோடு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற மனோஜ் சொன்னதும் விஜயா தன்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது அதனால் நான் இந்த பரிகாரத்தை பண்ண மாட்டேன் என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜ் பரிகாரத்தை செய்யவில்லை என்றால் உங்களுக்கு உயிருக்கு ஏதாவது ஆபத்துக்கு வந்துரும் என்று சொல்கிறார். அதற்கு விஜயா ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டு வெளியே வரும்போது அங்கு மேலே மாட்டியிருந்த ஃபேன் கழண்டு கீழே விழுகிறது. இதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர்.

அதற்கு விஜயா மீனாவை கூப்பிட்டு திட்டுகிறார். மீனா எனக்கு இப்படி நடக்கும் என்று எப்படி தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு மோட்டாரில் தண்ணி வரவில்லை என்று எல்லோரும் குடத்தை எடுத்துக்கொண்டு லாரியில் தண்ணீர் பிடிக்க செல்கின்றனர். முத்துவும் மீனாவும் ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்.
அதை பார்த்ததும் ஸ்ருதி நானும் தண்ணீர் எடுக்க வரேன் என்று ஒரு குடத்தை எடுத்து இடுப்பில் தூக்க தெரியாமல் கீழே போட்டு விடுகிறார். அப்போது ரோகினி நானும் தண்ணீர் எடுக்க போறேன் என்று சொல்ல, அதற்கு விஜயா நீ எல்லாம் தண்ணீர் எடுக்க போகக்கூடாது நீ தெருவில் போய் தண்ணீர் எடுப்பதை யாராவது வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டுவிட்டால் அதை உங்க அப்பா பார்த்தா பிரச்சனை ஆயிடும்.. அவர் என்ன நினைப்பாரு என்று சொல்கிறார்.

அடுத்ததாக மோட்டார் சரி பார்ப்பவர் வந்து சரி பார்த்துவிட்டு யாரும் சுட்சு போட வேண்டாம் என்று முத்துவிடம் சொல்ல செல்கிறார். ஆனால் இது தெரியாமல் மனோஜ் சுட்சு போட்டு விடுகிறார். இதனால் கரண்டு வந்து விடுகிறது. அந்த நேரத்தில் விஜயா பேனை போட அவருக்கு ஷாக் அடிக்கிறது.
அப்போது அங்கு வந்த பார்வதி விஜயா தன்னைப் பார்த்து முறைக்கிறார் என்று நினைத்து அவரை சமாதானம் செய்வதற்காக அவர் மீது கை வைக்க அவர் மீது கரண்ட் பாஸாகிறது. அவரை காப்பாற்ற வந்த ரோகிணி, ஸ்ருதி, மனோஜ், ரவி என்று எல்லோருக்கும் அடுத்தடுத்து கரண்ட் ஷாக் ஆகி நிற்கிறார்கள். இதனை மீனா பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications