சிறகடிக்க ஆசை: சத்யாவிற்காக விஜயாவிடம் முத்து கேட்ட கேள்வி! சப்போர்ட் செய்த அண்ணாமலை.. ஏமாந்த ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடில் சத்யாவை தேடி போலீஸ் வந்திருக்கும் நிலையில் விஜயாவிடம் முத்து உதவி கேட்கிறார். அதற்கு அண்ணாமலையும் சப்போர்ட் செய்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவை புரிந்து கொள்ளாமல் நான் ரொம்ப பேசிட்டேன் என்று மீனா அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் சத்யாவைத் தேடி வீட்டிற்கு வருகின்றது. அப்போது முத்து சத்யா வீட்டில் இல்லை ஆனால் அவன் வேணும்னு பணத்தை திருடல எங்க அம்மா அடிக்கடி அசிங்கப்படுத்திட்டே இருந்தாங்க என்று அவங்கள பழிவாங்க அவன் அப்படி செஞ்சுட்டான்.

siragadikka aasai serial vijay tv

அவன் தெரியாம செஞ்சிட்டேன்னு அந்த பணத்தையும் என்கிட்ட கொடுத்துட்டான். இது எங்க குடும்ப பிரச்சனை என்று முத்து சொல்ல அதற்கு அவர்கள் குடும்ப பிரச்சனையா இருந்தாலும் இப்போ சோசியல் மீடியா முழுவதும் இந்த பேச்சுதான் நடக்கிறது. அதனால் கண்டிப்பாக அவனை அரெஸ்ட் பண்ணனும் என்று சொல்ல, முத்து நான் வேணா எழுதி தரேன் அவன் மீது தப்பு இல்லை என்று என சப்போர்ட் செய்கிறார்.

அதற்கு போலீஸ் அவன் திருடிய அந்த பெண்தான் எழுதி தரணும் நீங்க எழுதி தர வேண்டாம் என்று சொல்ல அதற்கு முத்து நான் எங்க அம்மாவிடம் பேசி அப்படி எழுதி தர சொல்கிறேன் என்று சொல்கிறார். பிறகு போலீஸ் போனதும் சத்யாவை காணவில்லை என்று முத்துவும் குடும்பத்தினரும் மாடியில் தேடிக் கொண்டிருக்கும் போது சத்தியா அவர்களிடமிருந்து தப்பித்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்கிறார்.

siragadikka aasai serial vijay tv

என்னால் உங்கள் எல்லாருக்கும் அவமானம் தான் கிடைக்கிறது அதனால் நான் உயிரோடு இருக்க கூடாது என்று சத்யா சொல்லிக் கொண்டிருக்க ஒரு வழியாக முத்து அவரை சமாதானம் செய்து கீழே கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு வீட்டில் இருந்தால் சரிப்பட்டு வராது என்று சத்யாவை செல்வம் வீட்டில் கொண்டு போய் விடுகிறார்.

செல்வத்திடம் தனக்காக இந்த ஒரு உதவியும் செய்ய வேண்டும் சத்யா வெளியே வந்தால் அவனை போலீஸ் அரெஸ்ட் செய்து விடும். அதனால் அவன் வெளியே வராமல் இந்த வீட்டில் கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது முத்துவுக்காக மீனா வாங்கிய புது ஃபோனை எடுத்துக் கொடுக்க முத்து இந்த நேரத்தில் எதற்கு போன் என்று கேட்கிறார்.

siragadikka aasai serial vijay tv

நான் இதை உங்களிடம் சந்தோஷமாக கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா இப்போ சூழ்நிலை அப்படி இல்ல என்று சொல்லி போனை கொடுக்கிறார். அதோடு எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு நாளா நீங்க தான் இந்த வீடியோவை வச்சிருந்தீங்க. ஆனால் அதை நீங்க வெளியே விடாமல் வைத்திருந்தீர்கள். அதை டெலிட் பண்ணி இருக்கலாமே என்று கேட்க, செல்வம் வேணாம்னு சொன்னான்.

siragadikka aasai serial vijay tv

அதுவும் எனக்கு சரின்னு பட்டுச்சு அதனால்தான் டெலிட் பண்ணல அதுவும் இல்லாம என்கிட்ட போன்ல இருக்கற வரைக்கும் வீடியோ ரிலீஸ் ஆகல. தொலைஞ்ச அடுத்த நாளே ரிலீஸ் ஆயிருக்கு யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று சொல்ல, எனக்கு சிட்டி மேல டவுட்டா இருக்கு என்று மீனா சொல்கிறார். முத்து இது சிட்டியோட வேலை கிடையாது. எனக்கு வேற ஒருத்தவங்க மேலயும் சந்தேகம் இருக்கு என்று சொல்கிறார்.

அதோடு நாம இப்போ அம்மா கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் கொடுக்காமல் இருக்கணும் என்று முத்து சொல்ல, அதற்கு மீனா எனக்கு அங்க வரவே புடிக்கல என்று சொல்ல, நீ எந்த தப்பும் பண்ணலையே ஆனாலும் நீ தப்பு பண்ணாமலேயே அம்மா கத்திகிட்டே இருப்பாங்க இப்போ சூலத்தை எடுத்துக்கிட்டு நிற்பாங்க என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியல. ஆனாலும் வா போகலாம் என்று மீனாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது விஜயா மீனாவை வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார். உன்னை வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்னேன் நீ எதற்காக வந்தாய் என்று வாக்குவாதம் செய்கிறார். அதோடு மனோஜும் அம்மாவுக்கு சப்போட்டாக மீனாவும் முத்துவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்கிறார்.

அப்போது விஜயா நீங்க இவளை இந்த வீட்டில் இருக்க சொன்னா நான் இத்தனை வருஷமா உங்க கூட வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லை என்று வாக்குவாதம் செய்கிறார். முத்துவும் மீனாவும் மீண்டும் வீட்டிற்கு வந்ததை பார்த்து ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+