சிறகடிக்க ஆசை: வீட்டுக்கு வரும் போலீஸ்.. தற்கொலை முயற்சியில் சத்யா! முத்து செய்த செயல்.. கதறும் மீனா
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சத்யாவை அரெஸ்ட் செய்வதற்காக போலீஸ் வீட்டிற்கு வருகிறது. அதை தெரிந்து கொண்ட சத்யா தற்கொலை செய்யப் போறேன் என்று மிரட்டுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் பல மாதங்களாகவே எதிர்பார்த்து இருந்த ட்ராக் இப்போது வந்திருக்கிறது. சத்யா விஜயாவை பழிவாங்க வேண்டும் என்று அவருடைய பணத்தை திருடிய வீடியோவை முத்து தன்னுடைய செல்போனில் வைத்திருந்தார். சத்தியா திருந்திய பிறகும் அந்த வீடியோவை டெலிட் செய்யாமல் முத்து ஃபோனில் பத்திரமாக வைத்திருந்தது எதற்காக என்று தெரியவில்லை.

இப்போது அதனால் தான் மொத்த குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். சத்யாவின் வீடியோவை ரோகிணியின் உதவியோடு சிட்டி இன்டர்நெட்டில் லீக் செய்து விட்டார். இதைப் பார்த்த விஜயா வீட்டிற்க்கே வந்து சத்யாவை செருப்பை கழட்டி அடித்திருக்கிறார். அதோடு வீட்டிற்கும் இப்போது இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.
பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு எதிராக கோபி போட்ட பிளான்.. ராதிகா கொடுத்த பதிலடி.. கோபத்தில் இனியா
இந்த நிலையில் தான் திருப்பதிக்கு கோவிலுக்கு சவாரிக்கு போயிருந்த முத்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது சத்யா வீடியோ பற்றி எல்லோருக்கும் தெரிந்து விட்டது என்ற உண்மையும் முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதுபோல சத்தியா திருடிய விஷயம் ஏற்கனவே முத்துவுக்கு தெரியும் அதனால் தான் சத்யாவின் கையை முத்து உடைத்தார் என்ற உண்மையையும் இப்போது சத்தியா வீட்டில் சொல்ல எல்லோரும் முத்துவை தியாகி போல பார்க்கிறார்கள்.

தன்னுடைய குடும்பத்திற்காக முத்து இத்தனை நாட்களாக அவமானப்பட்டு கொண்டிருந்தார் என்று தெரிந்து கொண்ட மீனாவும் அழுது கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சத்யா வீடியோ இன்டர்நெட்டில் ட்ரெண்டானதும் சத்யாவை அரெஸ்ட் செய்வதற்காக உயர் அதிகாரி கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்புகிறார்.
இந்த நிலையில் சத்யா வீட்டு மொட்டை மாடியில் இருந்து நான் இனி உயிரோடு இருக்க விரும்பவில்லை என்னால் தான் உங்களுக்கு எப்போதும் கஷ்டம் என்று குதிக்கப் போவதாக சொல்ல முத்து அவரை தடுக்க பார்க்கிறார். ஒருவேளை இனி போலீஸ் வரும்போது சத்யா திருடியது எங்க அம்மாவிடம் இருந்துதான் நாங்களே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கவில்லை இது எங்கள் குடும்ப பிரச்சனை என்று முத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் விஜயா ஏற்கனவே நான் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன் என்று சொல்லிவிட்டு போயிருந்த நிலையில் அவர் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்று நாளை எபிசோடில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications