பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு எதிராக கோபி போட்ட பிளான்.. ராதிகா கொடுத்த பதிலடி.. கோபத்தில் இனியா
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவிற்கு எதிராக கோபி பிளான் போடுவதை தெரிந்து கொண்ட ராதிகா கோபிக்கு வார்னிங் கொடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்யா, ஈஸ்வரி, அமிர்தா,ஜெனி என நான்கு பேரும் பீச்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி கல்யாணத்துக்கு முன்னாடி தன்னுடைய அப்பாவிடம் கடலுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அவர் கூட்டிட்டு போகாததை தன்னுடைய கணவர் செய்தது குறித்து பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பிறகு செழியன் பற்றி ஜெனி பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு கடலில் விளையாடலாம் என்று ஜெனியும் அமிர்தாவும் கூப்பிட நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க என்று பாக்கியா அனுப்பி வைத்துவிட்டு ஈஸ்வரியோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி உனக்கு இந்த பிரச்சனைகளுக்கு நடுவுல இந்த ரிலீப் தேவை தான் என்று சொல்ல, பாக்கியா நீங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்தீங்க உங்களுக்கும் இதுதான் தேவை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஈஸ்வரி எனக்கு புள்ள சரியில்ல உனக்கு புருஷன் சரியில்ல ஆனால் நம்ம ரெண்டு பேரும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருக்கிறது. எனக்கு நீ இருப்பது போல நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிற மருமகள்கள் உனக்கு இருக்கிறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ரூமில் ப்ரொடியூசர் இடம் கோபி பேசிக் கொண்டிருக்க, ராதிகா நீங்க கொஞ்ச நாளா யார்கிட்டயோ ரொம்ப பேசிட்டே இருக்கீங்க என்று கேட்டதும் எழில் படம் பண்ண போற விஷயத்தை சொல்லிக்கொண்டு அந்த ப்ரொடியூசர் கிட்ட பேசுற விஷயத்தை சொல்கிறார். பிறகு நாம எழில் உடைய பட பூஜைக்கு போகணும் என்று சொல்கிறார்.
அதற்கு ராதிகா நான் வரல, உங்க குடும்பத்துக்காரங்க எல்லாம் வருவாங்க என்று சொல்கிறார். அதற்கு கோபி அவங்க யாரும் வர மாட்டாங்க. அதிலும் அந்த பாக்கியா வரவே மாட்டா. அவள் வரவிடாத வகையில் நான் எல்லா வேலையும் பண்ணிட்டேன். எழிலிடம் இருந்து பாக்கியாவை பிரித்து பழிவாங்காமல் விடமாட்டேன் என்று வில்லத்தனமாக பேசுகிறார்.

அதற்கு ராதிகா எதுக்கு கோபி இப்படி பேசுறீங்க என்று கேட்க இந்த விஷயத்தில் நீ எதுவும் சொல்லாத என்று ராதிகாவிடம் கோபி சொல்லிவிடுகிறார். பிறகு எல்லோரும் ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்ப, ஈஸ்வரி நான் முன்னாடி காரில் உட்காரவா என்று கேட்டதும் பாக்கியா நான் காரை ஓட்டுகிறேன் என்று கார் ஓட்டுகிறார்.
சர்ச்சைகளை தாண்டி பிக் பாஸ் விக்ரமனுக்கு கல்யாணம்.. அன்பும் அறனும் இணைந்தது! குவியும் வாழ்த்துக்கள்
பிறகு கொஞ்ச தூரம் போனதும் விஜய் ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு என்று சொல்ல எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியா ஜெனி மற்றும் அமிர்தாவுக்கு நன்றி சொல்கிறார். ரொம்ப நாளாச்சு சிரிச்சு பேசி. இப்போ ரொம்ப நிம்மதியா சந்தோஷமா இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் இனியா எல்லாரும் தன்னை விட்டுட்டு வெளியே போய் இருக்காங்க என்று கோபமாக இருக்கும்போது செழியன் அவரை சமாதானப்படுத்துகிறார். ஆனால் இனியா கோபத்தோடு இருக்கிறார். அப்போது வீட்டிற்குள் ஜெனி, ஈஸ்வரி, பாக்கியா மூன்று பேரும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டு வர இதை பார்த்து இனியா மேலும் டென்ஷன் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications