சர்ச்சைகளை தாண்டி பிக் பாஸ் விக்ரமனுக்கு கல்யாணம்.. அன்பும் அறனும் இணைந்தது! குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமனுக்கு இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமண புகைப்படங்களை விக்ரமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமான விக்ரமன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். அவர் ஒரு பெண்ணை ஏமாற்றி அவரிடம் இருந்து பண மோசடி செய்ததாக அந்த பெண் அவர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரைக்கும் தொகுப்பாளராக பலரையும் பேட்டி எடுத்த விக்ரமன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் "அறம் வெல்லும்" என்ற டேக் மூலம் ட்ரெண்ட் ஆனார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு அதிகமான சப்போர்ட் இருந்தது. அதே நேரத்தில் இவர் விசிக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் கட்சி தலைவர் உட்பட இவருக்கு விசிக கட்சி உறுப்பினர்களின் சப்போர்ட் அதிகமாக இருந்தது. இது இவருக்கு நெகட்டிவ் ஆகவும் அமைந்தது.
அதுபோல ஆறாவது சீசனில் அசீம் உடைய நடவடிக்கைக்கு பலர் சப்போர்ட் கொடுத்து வந்தனர். அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யார் டைட்டில் வெற்றி பெற போவது என்ற போட்டியும் பெரிய அளவில் இருந்தது. அசீம் பிஆர் மூலமாகத்தான் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார் என்ற குற்றசாட்டுகள் இருந்தாலும் கடைசியில் அவர்தான் வெற்றி பெற்றார்.

இது விக்ரமனை மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கூட விக்ரமன் பல பேட்டிகளில் அசீம் வெற்றி பெற்றது முறையானது அல்ல என்று கூறிக் கொண்டிருந்தார். அதற்கு விக்ரமனை அசீமுடைய ரசிகர்கள் திட்டி வந்தனர். சமீபத்தில் அவர் மீது பெண் வழக்கு தொடர்ந்த பிறகு அவர் பெரிய அளவில் சமூக வலைதளத்தில் பேட்டிகளும் கொடுக்காமல் இருந்தார்.
ஆனால் பிக் பாஸ் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மட்டும் பேசி இருந்தார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த செய்திகளும் வெளியே தெரியாத வகையில் தான் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உள்ளிருந்த போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வேண்டுகோள் வைத்திருந்தனர்.

நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் இன்று விக்ரமனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. தன்னுடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமன் பகிர்ந்து இருக்கிறார். அதில் "அன்பும் அறனும்" என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications