சிறகடிக்க ஆசை: மனோஜை மிரட்டும் நபர்கள்.. ரோகிணிக்கு கிடைத்த அதிர்ச்சி.. சந்தோஷத்தில் மீனா குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 17ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் செல்போனை எடுக்க வேண்டும் என்று பிளான் போட்ட ரோகிணிக்கு மனோஜ் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் மீனாவின் குடும்பத்திற்கு சந்தோஷமான செய்தி கிடைத்திருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் போனில் இருக்கும் சத்யாவின் வீடியோவை எடுப்பதற்காக ரோகிணி பாலில் மயக்க மருந்து கலந்ததால் மீனாவும், முத்துவும் அதை குடித்துவிட்டு தூங்கி விடுகின்றனர். பிறகு அவர்கள் தூங்கியதை உறுதி செய்த ரோகிணி போனை எடுக்க போகும் நேரத்தில் விஜயா அங்கு வந்து விடுகிறார். விஜயா இங்க என்ன பண்ணுற என்று ரோகிணி இடம் கேட்க எனக்கு தூக்கம் வரல அதனால இங்க வந்தேன் என்று ரோகிணி சமாளிக்கிறார்.

அதற்கு விஜயா எனக்கும் தூக்கம் வரல அந்த மீனா சிரிச்சுக்கிட்டே இருந்தா எதுக்காக சிரிச்சான்னு தெரியலையே என்று யோசித்து எனக்கு தூக்கம் வரல எனக்கு ஒரு காபி போடு என்று சொல்கிறார். பிறகு விஜயா முன்பு ரோகிணி ரூமிற்கு சென்று விடுகிறார். விஜயா அங்கிருந்து போனதும் மீண்டும் வந்து செல்போனை எடுக்கும் நேரத்தில் மனோஜ் பின்னாடியே வந்து ரோகிணியை தூக்கி விடுகிறார். நான் கனவில் பாரிஸுக்கு போவதாக கண்டேன்.
அதனால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வா ரொமான்ஸ் பண்ணலாம் என்று ரோகிணியை கூட்டிக்கொண்டு போய் விடுகிறார். அடுத்த நாள் மனோஜ் கடையில் இருக்கும் போது அவருடைய பாடிகார்டு உறவினர்கள் வருகிறார்கள். முத்து அடித்ததால் பாடிகாட் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருப்பதாகவும் அதற்கு செலவுக்கு 50,000 தருமாறு அவருடைய ஆட்கள் வந்து சண்டை போடுகின்றனர்.

அதற்கு மனோஜ் தன்னிடம் காசு இல்லை என்று சொன்னதும் அவர்கள் கடையில் இருந்த பொருட்களை அள்ளிச் செல்கின்றனர். இதனால் எதுவும் செய்ய முடியாமல் மனோஜ் அதிர்ச்சியில் நிற்கிறார். மறுபக்கத்தில் டான்ஸ் கிளாஸ் நடக்கும்போது விஜயாவிற்கு மீனா சிரித்தது ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பார்வதியிடம் சொல்லி மீனாவுக்கு போன் போட்டு ஏன் சிரித்தாய் என்று கேட்க சொல்கிறார்.
ஆனாலும் மீனா பார்வதியிடமும் உண்மையை சொல்லாமல் தவிர்த்து விடுகிறார். அடுத்ததாக சீதாவுக்கு அவருடைய அம்மா பூ வைத்து வேலைக்கு அனுப்பும் போது அங்கு ஒரு பெண் வருகிறார். அவர் தான் சீதாவை தினமும் பார்ப்பதாகவும் சீதா மிகவும் நல்ல பெண்ணாக இருக்கிறார் அதனால் அவர் எங்க குடும்பத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று சீதாவை பொண்ணு கேட்கின்றனர். மீனாவின் அம்மா சந்தோஷப்பட்டு தன் மகளிடமும், மருமகனிடமும் பேசிவிட்டு முடிவு சொல்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications