சிறகடிக்க ஆசை: அண்ணாமலையை கைது செய்யும் போலீஸ்.. நழுவிப்போன ஸ்ருதி- ரவி.. மீனா கேட்ட நறுக் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி காணாமல் போனதற்காக ஸ்ருதியின் அம்மா அப்பா அண்ணாமலை வீட்டிற்கு போலீஸோடு வந்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் ஸ்ருதி மற்றும் ரவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து தான் முத்துவிடம் சொல்லப் போகிறேன் என்று மீனா கோபத்தில் திட்டுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரவி ஸ்ருதிக்கு கல்யாணம் ஆன நிலையில் அவர்களை பார்த்ததும் மீனா திட்டுகிறார். இதை மாமாவிடமாவது சொல்லி இருக்கலாமே என்று திட்டி விட்டு நான் இதை இப்பவே உங்க அண்ணனுக்கு சொல்லுறேன் என்று சொல்லி முத்துவுக்கு போன் பண்ண ட்ரை பண்ணும் போது ரவியும், ஸ்ருதியும் மீனா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றனர்.
அதற்கு மீனா தப்பு பண்ணிக்கிட்டு மன்னிப்பு கேட்டா சரியா போயிடுமா? என்று திட்டுகிறார். அப்போது மீனாவுக்கு தெரிந்த ஐயர் வந்து என்னமா பிரச்சனை என்று கேட்க, அதற்கு கல்யாணம் வீட்டுக்கு தெரியாமல் நடந்துடுச்சு என்கிட்ட நீங்களாவது சொல்லி இருக்கலாமே என்று கேட்க, அதற்கு அவர் எனக்கே தெரியாது மா தெரிஞ்சிருந்தா நானே சொல்லி இருப்பேன் என்று சொல்லி, சரி நடந்தது நடந்து போச்சு நீ ஆசீர்வாதம் செஞ்சா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்.
நீயே இப்படி பேசாத என்று மீனாவை சமாதானப்படுத்தி மாப்பிள்ளை வீட்டு பக்கத்தில் இருந்து மீனாவை கையெழுத்து போட சொல்கிறார். மீனாவும் வேறு வழி இல்லாமல் கையெழுத்து போடுகிறார். பிறகு ஒழுங்கா வீட்டுக்கு வந்து மாமா கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று சொல்லிவிட்டு மீனா கிளம்பி போகிறார். அதை தொடர்ந்து பிஜு கோயிலுக்கு வந்து ஸ்ருதியை தேட அங்கு ஸ்ருதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு போய்விடுகிறார்.
ஸ்ருதி அம்மா அப்பாவிடம் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்ல, அதற்கு அவர்கள் ஸ்டுடியோக்கு போய் இருப்பாளாக இருக்கும் என்று சமாளித்து அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டு அண்ணாமலை வீட்டிற்கு வருகின்றனர்.அங்கு ரவி ஸ்டூடியை கடத்திக் கொண்டு போய் விட்டான் என்று சண்டை போட அண்ணாமலை ரவி அப்படி பண்ணிருக்க மாட்டான் அவன் ரெஸ்டாரண்ட் போயிருக்கான் என்று சொல்லி நான் இப்பவே போன் பண்ண சொல்றேன் என்று போனை எடுத்து கால் டிரை பண்ணி பார்க்கிறார். அதே நேரத்தில் ரவியின் போனை வாங்கி ஸ்ருதி சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார்.
இதைத்தொடர்ந்து ஸ்ருதி அப்பா அண்ணாமலை சட்டையை பிடித்துக் கோவப்பட்ட அதை பார்த்து கோபமான விஜயா, ரோகினி எல்லாரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயா நான் போலீசை கூப்பிடுகிறேன் என்று மிரட்ட, அப்போது ஸ்ருதியின் அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்களே வந்துருவாங்க என்று சொல்ல, அந்த நேரத்தில் அங்கு போலீஸ் வருகின்றனர்.
அவர்கள் அண்ணாமலையிடம் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு வாங்க என்று சொல்ல, முதலில் அண்ணாமலை வர முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு அரெஸ்ட் வாரண்டோடு உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்று போலீஸ் மிரட்ட அண்ணாமலை கிளம்பி செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications