சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து, மீனா.. ஏமாந்த மனோஜ்! ஸ்ருதி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் பிளான் படி அவருடைய திருமண நாள் கொண்டாட்டத்தில் மொத்த குடும்பமும் பணக்காரர்கள் போல நடிக்கிறார்கள். ஆனால் கடைசியில் ரோகிணிக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி, ஸ்ருதி மற்றும் மீனாவிடம் பார்ட்டியில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு மீனாவும் ஸ்ருதியும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். நீங்க வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எதுக்கு பொய் சொல்லி நடிக்கணும் என்று இருவரும் கேள்வி கேட்க அதற்கு ரோகிணி முத்துவும், ரவியும் சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொன்னதும் வேறு வழியில்லாமல் மீனாவும், ஸ்ருதியும் சம்மதம் சொல்கின்றனர்.

அதைத்தொடர்ந்து முத்துவிடம் மீனா நீங்க 50 காருக்கு ஓனரா என்று கிண்டல் செய்கிறார். அதற்கு அவர் நான் ஓனர் என்றால் நீ ஐம்பது காருக்கு ஓனரின் பொண்டாட்டியா? என்று நக்கல் அடிக்கிறார். ஆனாலும் மனோஜ் ரோகிணியும் பொய் சொல்றது பிடிக்கல வீட்டுக்கு வேற வழி இல்லாம தான் இவங்க நாடகத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கிறேன் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த நாள் பங்க்ஷனில் ரோகிணி விஜயாவுக்கு பண்ணிய மேக்கப்பில் விஜயா அழகாக இருக்கிறார். அதை பார்த்ததும் விஜயா பிரண்டு பார்வதி நீ பார்ப்பதற்கு வசந்த மாளிகை படத்தில் வர கதாநாயகி மாதிரி இருக்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை விஜயா அழகில் மயங்கி ஜொள்ளுவிட்டு விஜயா பின்னாடி சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக ரோகிணியும் வித்யாவும் வருகின்றனர். அப்போது மனோஜ் இந்த பங்க்ஷனிலேயே நீதான் ரொம்ப அழகா இருக்க என்று பாராட்டி ரோகிணியை கூட்டிக்கொண்டு கொண்டிருக்கிறார். அவர்களை தொடர்ந்து ரவியும், ஸ்ருதியும் வருகின்றனர். எல்லோரும் விஜயாவை பார்த்து அதிசயப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது முத்துவும், மீனாவும் வரவில்லை என்று சொன்னதும் அதற்கு விஜயா அவங்க இங்க வருவதற்கு வெட்கப்பட்டு ஓடிவிட்டார்கள் போல என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். இந்த இடத்திற்கு வந்தாலும் அவர்கள் நம்ம மாதிரி இருக்க மாட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்துவும் மீனாவும் அங்கு வருகின்றனர்.

அப்போது முத்து, மீனா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க இரு உன்னை நான் போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து எல்லோரும் கண் வைக்கின்றனர். அப்போது மனோஜ் போன் பேசிக்கொண்டு போகும்போது முத்துவின் போனை தட்டி விடுகிறார். இதை பார்த்த வித்யா பதறி போய் போனுக்கு என்ன ஆச்சு என்று கேட்க ஒன்னும் இல்லை என்று முத்து சொல்லி விடுகிறார்.
பிறகு ரோகிணி நான் உங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து வேண்டாம் என்று சென்று விடுகிறார். முத்துவும் மீனாவும் போட்டோ எடுக்கும்போது அந்த போனை வாங்கி விட வேண்டும் என்று ரோகிணி போட்ட பிளான் கடைசியில் பெயிலியர் ஆகிவிட்டது. இதனால் ரோகிணி அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications