சிறகடிக்க ஆசை: பங்ஷனில் நடந்த கலவரம்.. முத்து போனால் மீனாவிடம் மாட்டும் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவின் போனை எடுக்க முயற்சி செய்த ரோகிணிக்கு மீனா அதிர்ச்சி கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை அவருடைய பழைய பிஏ மிரட்டி கொண்டிருக்கிறார். அதில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக சிட்டி இடம் உதவிக்கு போன ரோகிணிக்கு சிட்டி, முத்துவின் செல்போனில் சத்யா விஜயாவின் நகைகளை திருடிய ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவை எனக்கு கொடுங்க அப்போதான் நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று டீல் பேசியிருக்கிறார்.

அதனால் முத்துவின் செல்போனில் இருக்கும் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்பதற்காக ரோகிணியும் பல முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த வீடியோவை எடுக்க முடியாமல் போக கடைசியில் இப்போது மனோஜ் மூலமாக ரோகிணி அந்த வீடியோவை எடுத்துவிடலாம் என்று புது ப்ளான் போட்டு இருக்கிறார்.
அதாவது மனோஜின் பார்க் நண்பர் ஒரு பிசினஸ்மேன் பிசினஸ் செய்வதற்காக நல்லா உழைக்கக்கூடிய ஒரு இளைஞரை தேடிக்கிட்டு இருக்காரு. ஆனா தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆகும் நபரின் குடும்பமும் ரிச்சா இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் உன்னுடையதம்பி முத்து 50 கார் வைத்திருக்கிறான், இன்னொரு தம்பி ரெஸ்டாரண்ட் என்று வைத்திருக்கிறான் என்று நான் பொய் சொல்லிவிட்டேன் அதற்கு தகுந்த மாதிரி நீங்க நடிச்சிருங்க என்று சொல்லி இருக்கிறார்.

இதை வைத்து தன்னுடைய திருமண நாள் கொண்டாட்டத்தில் அந்த பிசினஸ் மேனை வரவழைத்து நாடகம் போட்டு விட ரோகிணி மற்றும் மனோஜ் பிளான் போட்டிருந்தனர். முதலில் ஏமாற்றி நடிக்க வேண்டும் என்பதற்கு முத்துவும் ரவியும் முடியாது என்று சொல்ல, பிறகு மனோஜ் நல்லா இருக்க வேண்டும் என்று மனதை மாற்றி சம்மதம் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் ஆசைப்பட்ட மாதிரியே பங்க்ஷன் சிறப்பாக முடிகிறது. ஃபங்ஷனில் அந்த பிசினஸ் மேன் நான் மனோஜை என்னுடைய பிசினஸ் பார்ட்னராக சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதை தொடர்ந்து அங்கு சரக்கு பார்ட்டி நடக்கிறது. அப்போது மனோஜ் மற்றும் ரவி குடிக்க முத்து குடிக்காமல் இருக்கிறார். முத்து குடித்தால் தான் வீடியோவை எடுக்க முடியும் என்று அதற்காக ரோகிணி காத்திருக்கிறார். அந்த நேரத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடந்தது போல இருக்கிறது. உடனே முத்து கோபப்பட்டு அங்கிருக்கும் சரக்கை எடுத்து குடித்து விடுகிறார்.
இதனால் அவரும் போதையில் இருக்க ரவி, ஸ்ருதி, மீனா, முத்து, மனோஜ், ரோகிணி எல்லாரும் லிப்டில் கீழே இறங்குகின்றனர். அப்போது முத்துவின் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் செல்போனை ரோகிணி எடுக்க, அதை மீனா பார்ப்பது போல காட்டப்படுகிறது. உடனே ரோகிணி அதே இடத்தில் வைத்து விடுகிறார்.

இதனால் இதை வைத்து பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகிணி பற்றி மீனா வெளியே சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம் போல இந்த முறையும் மீனா சொதப்ப போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications