சிறகடிக்க ஆசை: மீனா நம்பிக்கையை உடைத்த முத்து.. உண்மையை உளறிய மனோஜ்.. அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் செல்போனை எடுக்க வேண்டும் என்பதற்காக முத்துவை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று ரோகிணி முயற்சி செய்ய அதில் முத்து சிக்கி விடுகிறார். பிறகு என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் அண்ணாமலையும் விஜயாவும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அப்போது அண்ணாமலை மனோஜை கூப்பிட்டு வீட்டில் இருந்து எப்படி கிளம்பி வந்தீங்களோ அதுபோல அப்படியே வீட்டிற்கு வந்து சேர வேண்டும். இது பிசினஸ் மீட்டிங் என்று எனக்கு தெரியும் ஆனால் நீங்க எந்த தப்பும் பண்ண கூடாது என்று அண்ணாமலை சொல்ல, அதற்கு மனோஜ் சரி என்று சொல்லிவிடுகிறார்.

அவர்களோடு முத்துவும் மீனாவும் வீட்டிற்கு கிளம்ப ரோகிணி வித்யாவிடம் சொல்லி அவர்களை நிறுத்தி சாப்பிடணும் என்று சொல்லி இங்கே கூட்டிட்டு வந்துரு என்று சொல்ல, அதற்கு விஜயாவும் சரி என்று வருகிறார். ஆனால் அதற்குள் அண்ணாமலை நீங்க இப்பவே வீட்டுக்கு வர வேண்டாம். உங்க அண்ணனோட பிசினஸ் மீட்டிங் நடந்துட்டு இருக்கு நீங்க கொஞ்ச நேரம் இருந்து சாப்பிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.
அதை தொடர்ந்து மனோஜ்க்கு பிசினஸ் கொடுத்த நபர் பார்க் நண்பரோடு குடித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் மனோஜையும் குடிக்க கூப்பிடுகின்றனர். ஆனால் மனோஜ் வேண்டாம் என்று மறுக்க பார்க் நண்பனோ இப்போ குடிக்கலன்னா அவர் உன்னுடைய காண்ட்ராக்ட் கேன்சல் பண்ணவும் வாய்ப்பு இருக்கு என்று பயமுறுத்தியதும் மனோஜ் குடித்து விடுகிறார்.

அதை தொடர்ந்து ரவி அங்கு வர, ரவியையும் மனோஜ் குடிக்க வைக்கிறார். ஆனால் முத்து மட்டும் குடிக்காமல் தனியாக இருக்கிறார். மறுபக்கத்தில் மீனா முத்துக்கு போன் செய்கிறார். முத்து நான் குடிக்கவில்லை என்று பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். பிறகு முத்து போனை வைத்து விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு ஒரு நபர் வந்து முத்து தண்ணீர் குடிப்பதை வைத்து கிண்டல் செய்கிறார். உடனே முத்து கோவப்பட்டு அங்கு இருக்கும் சரக்கை எடுத்து குடித்து விடுகிறார். அப்போதும் மீனாவும் ஸ்ருதியும் சாப்பிட செல்ல வேண்டும் என்பதற்காக முத்துவை கூப்பிட வருகின்றனர். ஆனால் ரோகிணி அவர்களை வித்யாவை விட்டு தடுத்து அவர்களை சாப்பிட சொல்கிறார்.

மீனாவும், ஸ்ருதியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரவியும் முத்துவும் அதிகமாக குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிசினஸ்மேன் முத்து நீ குடிக்க மாட்டேன் என்று சொன்னியே என்று கேட்க, அதற்கு மனோஜ் இவன் குடிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டான் அதனால் தான் அமைதியா இருந்தான்.
இப்போ குடிக்க தொடங்கிட்டா எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டோம் என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறார். ஆனால் முத்து குடிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் மீனா பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications