சிறகடிக்க ஆசை: சண்டையிட்டு பிரிந்த ஸ்ருதி- ரவி.. முத்துவை நேரடியாக மிரட்டும் மீனா.. பிஜூவால் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 26ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் திருமணம் முடிந்ததும் ஸ்ருதி மற்றும் ரவி இருவருக்கும் இடையே சண்டை வந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி தங்களுடைய வேலைக்கு கிளம்பி போகின்றனர்.

அதே நேரத்தில் முத்துவை பார்க்க வந்த மீனாவை முத்து அவமானப்படுத்த அதற்கு மீனா எதிர்பாராத வார்த்தையை சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா கோவிலில் தன்னுடைய நிலைமையை சொல்லி கடவுளிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது கோவிலுக்கு வரும் ஒரு பெண் சீதாவிடம் இப்ப இருக்கிற பிள்ளைங்க எல்லாருமே இப்படித்தான் ரவி மாதிரி பொறுப்பு இல்லாமல் இருக்காங்க. உன் புருஷன் தங்கமானவன் நீ அவன்கிட்ட உன் பக்கம் நியாயத்தை சொல்லு என்று எடுத்து சொல்ல அதற்கு மீனாவும் ஆமாம் அந்த முடிவு தான் சரி என்று முத்துவை பார்க்க கிளம்பி போகிறார்.
அந்த நேரத்தில் ஸ்ருதிக்காக ரவி சாப்பாடு சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வரும் ஸ்ருதி சந்தோஷமாக ரவியோடு பேசிக் கொண்டிருக்கும்போது ரவி தன்னுடைய குடும்பத்தை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடால் வாக்குவாதம் வந்து விடுகிறது. அப்போது ரவி ஸ்ருதி பெற்றவர்களால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று சொல்ல, அதற்கு ஸ்ருதி கோபமாகி அப்போ உங்க அம்மா அப்பா மட்டும் சரியா என்று கோபத்தில் பேசிவிட்டு நான் டப்பிங் ஸ்டுடியோவுக்கு கிளம்பி போகிறேன் என்று கோபமாக வீட்டை விட்டு வெளியே வருகிறார்.

அப்போது ஸ்ருதி நடந்து கொண்டிருக்கும் போது பிஜு ஸ்ருதியை ஃபாலோ பண்ணி உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று மைண்ட் வாய்சில் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ரவி ஸ்ருதி இடம் பேசி பைக்கில் ஏற சொல்கிறார் அதை பார்த்து கடுப்பாகும் ஸ்ருதி ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார். அதை தொடர்ந்து ஸ்ருதி ஸ்டுடியோவிற்கு வந்ததும் அங்கு டப்பிங்கில் பேசும் போது இவர்களுடைய சிட்டுவேஷன் போலவே அங்கு இருக்கிறது.
அதுபோல முத்து தன்னுடைய நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நபர் தனக்கு கல்யாணம் முடிவாகி இருக்கிறது என்று சொல்ல, அதற்கு கல்யாணம் செய்தால் வாழ்க்கையே போய்விடும் என்று முத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு மீனா வர மீனாவை பார்த்து கடுப்பாகி காரில் கிளம்ப பார்க்கிறார்.
ஆனால் மீனா நகராமல் அங்கேயே நிற்க மீனாவை காரில் இருந்து இறங்கி மீனாவை முத்து திட்டுகிறார் அப்போது மீனா சொல்ல வருவதை முத்து கேட்காமல் இருப்பதால் ஒரு கட்டத்தில் கோபமான மீனா அம்மாவும் உன் புருஷன் வீட்டுக்கு போக சொல்றாங்க நீங்க இங்க வரக்கூடாதுன்னு சொல்றீங்க, இதுல நான் என்ன பண்ண என்று கேட்க அதற்கு முத்து உனக்கு என்ன சிலையாக வைப்பாங்க என்று சொன்னதும் என் பக்கத்து நியாயத்தை கேட்காமல் நீங்க கோவப்படுறீங்க.
ஒரு நாள் நீங்க என்னை தேடி வருவீங்க. அப்போ நான் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதைத் தொடர்ந்து ரவி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அப்போது அவரிடம் அவருடைய நண்பர் முத்து ரெஸ்டாரண்டுக்கு வந்து பிரச்சனை செய்துவிட்டு போனதை பற்றி சொல்ல, அதற்கு ரவி அது அண்ணைக்கு கோபத்தில் வந்திருப்பான்.
இனி வரமாட்டான் என்று ரவி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்துக்கு ரெஸ்டாரண்ட் வாட்ச்மேன் போன் பண்ணி ரவி வந்திருக்கும் விஷயத்தில் சொல்ல முத்து கோபமாக காரில் ரவியின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications