சிறகடிக்க ஆசை: ரோகிணியிடம் வித்யா கேட்ட கேள்வி.. வீட்டை விட்டு துரத்திய அண்ணாமலை.. மீனா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் மகன்கள் குடித்துவிட்டு வந்ததால் அண்ணாமலை ரவி, மனோஜ், முத்து மூன்று பேரையும் வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். அதே நேரத்தில் ரோகிணி வித்யா போன் செய்து சில விஷயங்களை கேட்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலை மனோஜ், முத்து, ரவி மூன்று பேரும் வீட்டுக்குள்ள வரக்கூடாது என்று சொல்ல அதற்கு விஜயா மனோஜையும் ரவியும் மட்டுமாவது உள்ளே கூப்பிடலாம் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை நீ இப்படித்தான் எப்பவுமே பிரிச்சி பேசுவியா? என்று திட்டுகிறார். அப்போது ரோகிணி போனை மனோஜ் கோட்டில் வைத்ததால் டிரஸ் மட்டும் சேஞ்ச் பண்ணிட்டு போகட்டும் அங்கிள் என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை இந்த டிரஸோட இருக்கட்டும் நீங்க உள்ளே போங்க என்று அண்ணாமலை மருமகளில் மூன்று பேரையும் வீட்டிற்குள் அனுப்பி விடுகிறார். பிறகு மூவரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு பேசி இருக்கின்றனர். அப்போது முத்து இவ்வளவு நாள் நான் குடிச்சிட்டு வந்தேன்னா ஒரு நாள் கூட அப்பா என்னை வெளியே தள்ளுனது கிடையாது. ஆனால் இன்றைக்கு உங்களால் இப்படி வெளியே வந்துட்டேன் என்று சொல்கிறார்.

பிறகு மனோஜ் பிச்சை எடுத்ததை பற்றி எல்லாம் ரவியும் முத்துவும் பேச எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குப் பிறகு மனோஜ் நான் ஒரு பெரிய பிசினஸ்மேன். ஆனா உங்களால அப்படி ஆக முடியுமா என்று முத்துவை பார்த்து கேட்க மனோஜ் படிக்கட்டில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து தள்ளி விடுகிறார். அதனால் கீழே விழுந்த மனோஜ் அப்படியே படுத்து தூங்கி விடுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு ரவியும் தூங்கி விட முத்து தண்ணீர் வேண்டும் என்று கதவை தட்டுகிறார். அப்போது மீனா வந்து தண்ணீர் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் வராதீங்க மாமா பேச்சை மீறக்கூடாது என்று முத்துவிடம் ஸ்ட்ரிக்டாக சொல்கிறார். அந்த நேரத்தில் ரூமில் ரோகிணி மனோஜ் பாக்கெட்டில் இருக்கும் போனை எப்படி எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

மீனா வீட்டு வாசலில் அமர்ந்து கொள்ள முத்து வாசலுக்கு வெளியே அமர்ந்து கொள்கிறார். அப்போது நான் எதுக்கு குடிச்சேன் தெரியுமா என்று முத்து கேட்க, அதற்கு மீனா என்ன காரணம் என்று கேட்டதும், இவன் என்கிட்ட ஒரு உதவின்னு வந்தான். ஆனா அந்த ஓடுகாலி கூட பொறந்துட்டான்னு செஞ்சேன். ஆனா அவன் உன்னை ஏமாத்திட்டு போயிருக்கான், அந்த பார்லர் அம்மா உன்னை மதிக்கிறதே கிடையாது.

television siragadikka aasai serial vijay tv

அப்படி இருக்கும்போது அவன் கூப்பிட்ட உடனே நீ வந்த பத்தியா.. உன்னை நினைச்சு பெருமையா இருந்தது. அதனால்தான் நான் குடிச்சேன் என்று முத்து மீனாவை பெருமையாக பேசி மீனாவின் கைகளில் முத்தம் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த ரோகினி கோபப்படுகிறார். அதோடு மீனா பார்ட்டியில் எல்லாரையும் விட நீ தான் அழகாய் இருந்த என்று திருஷ்டி எடுத்துக் கொள்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் ரோகிணி தூக்கம் வராமல் எப்படியாவது போனை எடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வித்யா போன் செய்து போனை எடுத்துட்டியா என்று விசாரிக்கிறார். அதற்கு இல்ல இந்த முத்துவும் மீனாவும் இன்னும் தூங்காம உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க என்று சொல்ல, அதற்கு சந்தோஷமான வித்யா அப்படி என்னதான் அவங்க ரொமான்டிக்கா பேசுறாங்க என்று கேட்டதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+