ரோகினியை மகனை வைத்து மிரட்டும் அம்மா.. விஜயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முத்துவின் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ரோகினி பற்றிய உண்மையை வீட்டில் செல்லும்படி அவருடைய அம்மா வற்புறுத்த அதற்கு ரோகிணி எதிர்பார்க்காத செயலை செய்கிறார்.

siragadikka aasai serial October 2nd promo and Episode Highlights

அதே நேரத்தில் ரவிக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மனோஜ் ரவியை அவமானப்படுத்த முத்து பதிலடி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் மீனாவிடம் விஜயா நாளைக்கு ரவியை மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள். அதனால் வீட்டில் சமையல் எல்லாம் தடபுடலாக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க அப்போது முத்து வழக்கம் போல விஜயாவை கிண்டல் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து முத்து அண்ணாமலையிடம் பெண் பார்க்கும் விஷயத்தை பற்றி சொல்ல, அதற்கு நாம பார்த்தது தான் செட் ஆகல. அதனால அவ தான் பார்க்கிறேன் என்று சொல்கிறாரே அவளே பார்க்கட்டும் என்று சொல்லி விடுகிறார். அதை தொடர்ந்து ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் போனில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஸ்ருதிக்கு இன்னொரு வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் என்பது இவர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.

siragadikka aasai serial October 2nd promo and Episode Highlights

இப்போது ஸ்ருதியின் நண்பர் சின்ன வயது நண்பர் ஒருவரை பற்றி விசாரித்து அவர்கள் வீட்டுக்கு அடுத்த நாள் நாம் லஞ்சுக்கு போகப்போறோம் என்று சொல்ல அங்க நான் வரல எனக்கு டப்பிங் வேலை இருக்கிறது என்று ஸ்ருதி சொல்ல, ஆனால் கண்டிப்பாக நீயும் வர வேண்டும் என்று அவருடைய மனதை மாற்றுகின்றனர்.

ரோகிணி தன்னுடைய அம்மாவை பார்க்க சென்றிருக்கும் நேரத்தில் அங்கு வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை பற்றி தன்னுடைய அம்மா பேசிக் கொண்டிருக்கிறார். அத்தோடு இன்னும் எத்தனை நாளைக்கு தான் உன்னுடைய மகனை நீ மறைத்து வைக்க முடியும். சீக்கிரமாக வீட்டில் உண்மையை சொல்லு சொன்னால் தானே இவனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும் என்று சொல்ல, அதற்கு அதுவெல்லாம் இப்போது முடியாது. எனக்கு பிடிக்காத கல்யாணத்தை நீ தானே செஞ்சுவெச்ச, அதனால நீயே இனி அவனை பாத்துக்கோ.

siragadikka aasai serial October 2nd promo and Episode Highlights

ஒருவேளை வீட்டில் சொல்ல முடியாமல் போய்விட்டால் நீதான் அவனை பார்க்க வேண்டும் என்று தன்னுடைய அம்மாவை ரோகிணி மிரட்டுகிறார். அதற்கு விஜயாவின் அம்மா நான் முத்து மீனா கிட்ட இதை பத்தி பேசவா? அவங்களே உனக்கு உதவி பண்ணுவாங்க என்று சொல்ல, ரோகிணி டென்ஷன் ஆகி சாப்பாடு தட்டை தூக்கி வீசுகிறார். பிறகு ரோகிணியின் அம்மாவும் அவருடைய தோழியும் திட்டுகின்றனர்.

தொடர்ந்து மறுநாள் காலையில் ஸ்ருதி விருந்துக்காக மார்டன் உடையில் கிளம்பி கொண்டு வர அதற்கு அவருடைய அம்மாவும் அப்பாவும் புடவையில் வருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அதே நேரத்தில் விஜயாவும், ரவி இன்னைக்கு வேலைக்கு போகாத லீவு சொல்லிடு உன்னை மாப்பிள்ளை பார்ப்பதற்காக பொண்ணு வீட்டில் இருந்து வராங்க என்று சொல்ல ரவி அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது நம்மை விட ரவிக்கு பணக்கார வீட்டுல பொண்ணு அமைந்தால் இந்த வீட்டில் நமக்கு மரியாதை இருக்காது என்று மனோஜ் கிரிமினலாக யோசித்து, எதுக்கு இவனுக்கு பெரிய இடத்துல பொண்ணு பாக்கறீங்க? இவன் சாதாரண சமையல்காரன் தானே என்று அவமானப்படுத்த, அதற்கு முத்து சமையல் செய்வது அவ்வளவு ஈஸியான வேலை கிடையாது என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது அண்ணாமலையும் நீ செய்ற வேலை மட்டுமே உசத்தி கிடையாது என்று மனோஜ்க்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

siragadikka aasai serial October 2nd promo and Episode Highlights

அதைத்தொடர்ந்து முத்து நீங்க யாரை வேணாலும் பொண்ணு பாருங்க ஆனால் அந்த பொண்ணு அப்பாவை மதிக்கிற பெண்ணாக இருக்கணும். அந்தக் குடும்பமும் நல்ல குடும்பமா இருக்கணும் என்று சொல்ல, விஜயாவும், ரவியும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+