சிறகடிக்க ஆசை: சத்யாவின் வீடியோவை லீக் செய்த ரோகிணி.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 30-ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து போனில் இருந்த வீடியோவை ரோகிணி சிட்டியிடம் ஒப்படைத்து விட்டார். இதனால் என்ன பிரச்சனை நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து ஃபோனை தேடி கொண்டு இருக்க, அதை பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறார். அப்போது மீனா போன் தானே தொலைஞ்சது இன்னொரு புது போன் வாங்கிக்கலாம். அதுக்காக எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிறீங்க என்று கேட்க, முத்து கோவப்பட்டு மீனாவை திட்டுகிறார்.

பிறகு செல்வத்திற்கு போன் செய்து போன் தொலைஞ்சுடுச்சு என்று சொன்னதும் செல்வம் அதில் தானே அந்த வீடியோவை நீ சேவ் பண்ணி வச்சிருந்த என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார். உடனே மீனா எந்த வீடியோ சேவ் பண்ணி வச்சிருந்தீங்க என்று கேட்க, முத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி செல்வத்தோடு சென்று பார்ட்டி நடந்த இடத்தில் தேடுகிறார்.
மறுபக்கத்தில் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு சிட்டியை பார்க்க போகணும் என்று சொல்கிறார். அதே நேரத்தில் ஹோட்டலில் செல்போன் கிடைக்காததால் முத்து டென்ஷனாக இருக்கிறார் அந்த வீடியோ மட்டும் லீக் ஆயிடுச்சுன்னா குடும்பத்தில் பெரிய பிரச்சனை வந்துடும் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது செல்வம் முத்துவை போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம், அப்போ அவங்க சிக்னல் வச்சு கண்டுபிடிச்சிடுவாங்க என்று சொல்ல, முத்து அப்போ வீடியோ விஷயம் தெரியாதுல என்று கேட்கிறார். அதெல்லாம் தெரியாது என்று செல்வம் முத்துவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு சென்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் ரோகிணி சிட்டியிடம் தனக்கு வீடியோ கிடைச்சுச்சு ஆனா முதலில் அந்த பிஏவை ஒரு வழி பண்ணு என்று சொல்ல, சிட்டி தனது ஆட்களை வைத்து பிஏவை தூக்கிக்கொண்டு வருகிறார். அங்கு பிஏவை கண்ணை கட்டிக்கொண்டு வந்து இருட்டு ரூமுக்குள் வைத்து அடித்து துவைக்க பிளான் பண்ணுகிறார்.

இதை மறைந்திருந்து பார்த்து ரோகிணி சந்தோஷப்பட்டு சத்யாவின் வீடியோவை சிட்டிக்கு அனுப்புகிறார். மேலும் இனி என் வழியில் பிஏ வரக்கூடாது என்று சிட்டி இடம் சொல்லி விட்டு செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications