சிறகடிக்க ஆசை: கிரிஷ் விஷயத்தில் மனோஜ் எடுத்த முடிவு! கலங்கி நிற்கும் ரோகிணி! ரவிக்கு சந்தேகம், ஸ்ருதி அதிரடி
சென்னை, ஆகஸ்ட் 12, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இன்று, விஜயாவின் கோபமான பேச்சும், மீனாவின் புதிய திட்டமும், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னிடத்தில் க்ரிஷ் விஷயத்தில் மனோஜ் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.

விஜயாவின் ஆவேச பேச்சு
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிரிஷுக்கு, மீனா சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்கும்போது, விஜயா, "இவன் பாட்டிக்கு தேவையில்லை. இவனை விட்டுட்டுப் போய்விட்டாள். இவனுடைய அம்மா ஃபாரீன் போய்விட்டாள். இவனை இங்கே கொண்டுவந்து வைத்து சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருக்கிறாள்," என்று கோபமாகப் பேசுகிறார். விஜயாவின் இந்த பேச்சைக் கேட்டு, வழக்கம் போல அண்ணாமலை அமைதியாக இருக்க சொல்கிறார்.
கிரிஷின் வருத்தம்
விஜயாவின் பேச்சால் மனமுடைந்த கிரிஷ், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறான். இதைப் பார்த்த அண்ணாமலை, விஜயாவிடம், "உனக்கு என்ன பேசணும்னு தெரியாதா? எப்பப் பார்த்தாலும், இப்படியே மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுவியா?" என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், "இந்த பையன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது," என்று உறுதியாகச் சொல்ல, அண்ணாமலை, "உன்னையும் ஒரு நாள் முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடுவார்கள்," என்று சொல்ல, விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
மீனாவின் புதிய திட்டம்
கிரிஷை அழைத்துக்கொண்டு, மீனா, சந்திரா பூக்கடைக்கு வருகிறார். அங்கு, சீதா, சத்யா என அனைவரும் இருக்கின்றனர். மீனா, நடந்த விஷயங்களை, தனது குடும்பத்தினரிடம் சொல்கிறார். கிரிஷின் உண்மை மர்மமாக இருப்பதால், சீதா, "போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கலாமா?" என்று கேட்க, மீனா, "வேண்டாம்," என்று மறுத்துவிடுகிறார்.
சத்யா கொடுத்த ஐடியா
அதற்கு சத்யா, "அக்கா, கிரிஷ் பாட்டி போட்டோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்யலாம். தெரிந்தவர்கள் இருந்தால், அவர்கள் போன் பண்ணுவார்கள்," என்று ஒரு ஐடியா கொடுக்கிறார். இது நல்ல ஐடியாவாக இருக்க, மீனா, "நான் போட்டோ ரெடி பண்ணிட்டு சொல்றேன்," என்று சொல்கிறார். இந்த நேரத்தில், சீதா, "அருணுக்கு, அடுத்த பிரமோஷன் கிடைக்கப் போகிறது," என்று ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல, அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
மனோஜின் திட்டம்
மறு பக்கத்தில் மனோஜ், ரோகிணியை ஒரு ரெஸ்டாரண்டுக்கு வர சொல்லி இருக்கிறார் என்ன விஷயம் என்று ரோகினி கேட்க ரவி, ஸ்ருதி வர சொல்லி இருக்கிறேன் அவங்க வந்ததும் பேசலாம் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் வந்ததும் "கிரிஷ் அந்த வீட்டில் இருப்பது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. அவனைப் பெற்றவர்களுக்கே அவன் மீது அக்கறை இல்லாதபோது, நாம் ஏன் வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்?" என்று மனோஜ் சொல்கிறார்.
ஓட்டு கணக்கு
மேலும், "முத்து எப்படியும், கிரிஷ் வீட்டில் இருக்கலாமா, வேண்டாமா என்று ஒரு ஓட்டுக் கணக்கு எடுப்பான். அப்போது, நீங்கள் இருக்கக் கூடாது என்று எனக்கு சப்போர்ட் பண்ணனும்," என்று சொல்கிறார். கிரிஷின் பாட்டி, தொலைந்து போய்விட்டதாக ரவி சொல்ல, "தொலைந்து எல்லாம் போகல. வேணும்னே விட்டுட்டுப் போயிருக்காங்க. அவங்க எப்படி திரும்ப வருவாங்க?" என்று மனோஜ் சொல்கிறார்.
ஸ்ருதியின் யோசனை
ஸ்ருதி, "அவன் அம்மாவை வேணா கண்டுபிடிக்கலாம்," என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மனோஜ், கிரிஷ் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். ரவியும், ஸ்ருதியும் என்ன முடிவு எடுப்பார்கள்? வீட்டுக்கு வந்த முத்து என்ன கேட்கிறார்? இந்த கேள்விகளுக்கான விடைகளை, நாளைய எபிசோடில் காணலாம்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications