சிறகடிக்க ஆசையில் இன்று: ரோகிணி அம்மா பற்றி முத்து கண்டுபிடித்த உண்மை! கடத்தப்படும் கிரிஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 14, 2025: விஜய் தொலைக்காட்சியில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலான 'சிறகடிக்க ஆசை'யில், இன்று, கிரிஷின் எதிர்காலம் குறித்த ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கிரிஷை, வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மனோஜ், விஜயாவின் திட்டம், ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம், ரோகிணி, ஒரு பெரிய ரகசியத்தை மறைத்து, கிரிஷை கடத்திச் செல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கிரிஷுக்கு ஆதரவாக முத்து - ரவி

கிரிஷ், "நான் எங்கேயும் போக மாட்டேன். இங்குதான் இருப்பேன்," என்று அழுது கொண்டே, மனோஜ் மற்றும் ரோகிணியின் கையைப் பிடித்துக் கொள்கிறார். மனோஜ், அவனை முறைக்க, முத்து, "ரெண்டு பேர் தான் உனக்கு சப்போர்ட் இல்லை," என்று கூறி, ரவியைப் பார்க்கிறார்.

ரவி, கை தூக்காமல் இருப்பதைப் பார்த்து, மனோஜ், "நீ நேத்து எனக்கு சப்போர்ட் செய்றேன்னு சொன்னேல," என்று கேட்கிறார். அதற்கு கடுப்பாகும் ரவி, "நான் எப்ப சொன்னேன். நீயா வந்த, நீனா பேசின, ஒரு முடிவோட கிளம்பிட்ட," என்று சொல்லி, கிரிஷுக்கு ஆதரவாக கை தூக்குகிறார்.

முத்துவின் வெற்றி

ஸ்ருதியும், கிரிஷை வீட்டில் இருக்க, ஆதரவு தெரிவிக்க, முத்து, "ரெண்டை விட அஞ்சு தானே பெருசு. அதனால கிரிஷ் இங்கே தான் இருப்பான்," என்று கூறுகிறார். அண்ணாமலை உள்பட நால்வரும், சந்தோஷப்படுகின்றனர்.

ரோகிணியின் மோசமான திட்டம்

முத்து, ரோகிணியின் அம்மா புகைப்படத்தை வைத்து, தேடி கொண்டிருக்க, ஒரு ஆட்டோ டிரைவர், அவரை, "கோவிலில் இறக்கி விட்டதாக," கூறுகிறார். உடனே, முத்து, அதை, மீனாவிடம் கால் செய்து சொல்லி, கோவிலில் விசாரிக்கச் செல்கிறார்.

மறுபக்கத்தில் கிரிஷ், ஸ்கூலில் இருக்க, அங்கு வரும் ரோகிணி, அவனிடம், "நீ கொஞ்ச நாளைக்குத் தனியா தான் இருக்கணும்," என்று சொல்கிறார். "நான் வீட்டில் தான் இருப்பேன்," என்று அவன் அடம் பிடிக்க, "அதெல்லாம் உனக்கு புரியாது," என்று ரோகிணி திட்டிவிடுகிறார். பின்னர், ரோகிணி, கிரிஷை அழைத்துக்கொண்டு, பிரின்சிபல் ரூமுக்குச் சென்று, "தான் அவன் அம்மா," என்று அறிமுகம் செய்து கொண்டு, "கிரிஷ் பாட்டிக்கு உடம்பு முடியலை. வீட்டில் வைத்துப் பார்க்கப் போவதாக," சொல்லி, அவனின் டிசியைக் கேட்கிறார். கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார்.

கடத்தல்

கொஞ்ச நேரம் வெயிட் செய்யச் சொல்ல, கிரிஷ், "நான் இந்த பள்ளியில் தான் படிப்பேன்," என்று அடம் பிடிக்கிறான். ஆனால், ரோகிணி, "அடம் பிடிக்காதே," என்று திட்டிவிட்டு, டிசியை வாங்கிக் கொண்டு, கிரிஷை தரதரவென ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார். இதை, தூரத்தில் இருந்து, ரோகிணியின் அம்மா பார்த்து, "இவனை எங்கே அழைச்சிட்டு போறான்னு தெரியலையே," என்று பதறுகிறார்.

ரோகிணி - வித்யாவிடம் கெஞ்சல்

கிரிஷை, வித்யா வீட்டுக்கு அழைத்து வரும் ரோகிணி, வீட்டில் நடந்ததைச் சொல்கிறார். "பிளீஸ் வித்யா, என்மேல உள்ள கோபத்தில் முடியாதுன்னு சொல்லாதே. இப்போ எனக்கு வேற வழியே இல்லை. ஒரு வாரம் மட்டும். அப்புறம் வந்து நான் கூட்டிட்டு போயிடுறேன்," என்று கெஞ்சிக் கேட்க, அவரும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு, ரோகிணியின் மோசமான திட்டமும், கிரிஷின் எதிர்காலமும், ஒரு பெரிய மர்மமாகவே உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+