Siragadikka Aasai : மீனாவிடம் க்ரிஷ் பாட்டி சொன்ன விஷயம்.. வசமாக மாட்டும் ரோகிணி! மனோஜ்க்கு இது தேவைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோட், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் ரசிகர்களை கலங்க வைத்தது. ரோகிணி தன் மகனை பிரிந்து சென்றதும், லட்சுமியின் குற்ற உணர்ச்சியும் பார்ப்பவர்களை மிகவும் பாதித்தது.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி - கிரிஷ் பிரிவு

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், கிரிஷை போர்டிங் ஸ்கூலில் சேர்க்க ரோகிணி அழைத்து வருகிறார். கிரிஷ் "நான் உன்னை விட்டு தனியாக இருக்க மாட்டேன், உன்னுடனே வருவேன்" என அழுது அடம்பிடிக்கிறான். ஆனால் ரோகிணி, "நீதான் படிக்கணும் கிரிஷ்" என்று கூறிவிட்டு, அவன் அடம்பிடித்த போதும், கோபமாக பேசிவிட்டு அவனை தனியாக விட்டுவிட்டு செல்கிறார்.

லட்சுமியின் கேள்வி

ரோகிணி வெளியே வரும்போது லட்சுமி பார்த்து விடுகிறார். "ஏன் அவனை விட்டுட்டு போன?" என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி "அவன நான் அனாதையாவா விட்டுட்டு போனேன்? அவன் அம்மா கிட்ட தானே விட்டுட்டு போனேன்" என்று அலட்சியமாக பேசுகிறார். "அவனுக்கு என்ன யாருமே இல்லையா? அவன் அனாதை கிடையாது. நீ இருக்க, நான் இருக்கேன்" என்று லட்சுமி சொல்ல "என் கூட அனுப்பிடு" என கெஞ்சுகிறார்.

லட்சுமியின் குற்ற உணர்ச்சி

லட்சுமியின் பேச்சை கேட்காத ரோகிணி, "நீ பேசாம சித்தி கூட இரு. நான் உனக்கு பணம் அனுப்புறேன்" என்று சொல்ல லட்சுமி "உன் பணம் இனி எனக்கு தேவையில்லை" என்று கோபமாக சொல்கிறார். "அவனுடைய எதிர்காலம் என்ன ஆகும்" என்று லட்சுமி கேட்க, "எல்லாத்தையும் நான் யோசித்துதான் இந்த ஸ்கூலில் சேர்த்திருக்கிறேன்" என்று ரோகிணி பதிலளிக்கிறார். பிறகு ரோகிணி லட்சுமியின் கையில் ஊருக்கு போக பணத்தை கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.

மீனா வீட்டுக்கு பூ கொடுத்து விட்டு வரும்போது லட்சுமியை பார்க்கிறார். மீனாவை கண்டதும் லட்சுமி கண்கலங்கி அழுகிறார். "நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். கிரிஷ் அவனோட அம்மா கிட்ட இருக்கணும்கிறதுக்காக தான் விட்டுட்டு போனேன்" என்று லட்சுமி சொல்ல, "நான் மிகப்பெரிய பாவி. உன்னையும் முத்து தம்பியையும் ஏமாத்திட்டேன்" என்று மீண்டும் மீண்டும் லட்சுமி அதே குற்ற உணர்ச்சியில் பேசுகிறார். கொஞ்ச நேரத்தில் பஸ் வந்தவுடன், "நான் நல்லா இருக்கணும்னு சொல்றீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க" என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறி சென்று விடுகிறார்.

மீனாவின் பேச்சு

மீனா பூ கொடுத்து விட்டு வரும்போது, சீதாவுடன் போனில் பேசுகிறார். அப்போது சீதா, "அம்மா இவ்வளவு நாள் கடையில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க" என்று கேட்கிறார். அதற்கு மீனா "ஆமாம், அப்பா இருந்த போது கூட ஒருநாள் எங்கயாவது குற்றாலம் போவோம். அதுக்கு அப்புறம் நம்ம எங்கேயுமே போனதில்லையே" என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

அருண் - செல்வம் சந்திப்பு

மறுபக்கம் செல்வம் தனது மச்சானுடன் வண்டியில் வந்து கொண்டிருக்க, பின்னால் உட்கார்ந்திருக்கும் மச்சான் ஹெல்மெட் போடாததால் அருண் செக்கிங்கில் வண்டியை நிறுத்துகிறார். "அவன் முத்துவோட சகல தான். முன்னாடி நின்னு கல்யாணம் எல்லாம் பண்ணோம். நல்லா தெரியும். பேசிக்கலாம்" என்று செல்வம் தைரியமாக அருணிடம் பேச வருகிறார். மறுபக்கத்தில் மீனா வீட்டில் கிரிஷ் பாட்டியை பார்த்தேன் என்று சொல்ல அதை கேட்டு ரோகிணி பயத்தில் வேர்த்து விறுவிறுத்து இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அருண் செல்வதை என்ன கேட்கிறார், செல்வத்தின் பதில் என்ன, மீனா வீட்டில் வந்து என்ன சொல்ல போகிறார் என்பதை நாம் அடுத்த எபிசோடில் தெரிந்து கொள்வோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+