Siragadikka Aasai: பரிதாப நிலையில் கிரிஷ்.. மீனாவின் சாமர்த்தியம்! மனோஜிடம் சிக்கும் ரோகிணி!
சென்னை, ஆகஸ்ட் 25, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், நகைச்சுவை, மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், நாளைக்கான ப்ரோமோவில் வெளியான சுவாரசியமான தகவல்களையும் விரிவாக பார்க்கலாம்.

மீனாவின் முயற்சி
இன்றைய எபிசோடில், ஹாஸ்டலில் படிக்கும் கிருஷ்ணா, மற்ற மாணவர்களை அவர்களது அம்மாக்கள் வந்து பார்ப்பதை ஏக்கத்துடன் பார்க்கிறான். அப்போது சில மாணவர்கள், அவனுக்கு அம்மா இல்லை என்று கேலி செய்ய, கிருஷ்ணா கோபமடைந்து, தனது அம்மா பெயர் 'ரோகிணி' என்று சொல்கிறான். பின்பு, பயந்து 'கல்யாணி' என்று பெயரை மாற்றிச் சொல்ல, மற்றவர்கள் அவனை மேலும் கேலி செய்கின்றனர்.
அம்மாவின் பிளாக்மெயில்
கிரிஷ். அழுதுகொண்டே போனில் ரோகிணியை அழைத்துப் பேசுகிறான். தன்னைச் சந்திக்க வரும்படி அடம் பிடிக்க, ரோகிணி, "நீ இப்படி அடம் பிடித்தால் நானும் பாட்டி மாதிரி தொலைந்து போயிடுவேன்" என்று பிளாக்மெயில் செய்து அவனை அமைதிப்படுத்துகிறார். அதே பள்ளிக்கு டெக்கரேஷன் ஆர்டருக்காக மீனா செல்கிறார். அப்போது சிந்தாமணி நேராக கரஸ்பாண்டன்ட் கிட்ட சென்று பேசிவிட்டு வர மேனேஜரிடம் மீனா அவங்க முடிச்சுக்குவாங்க வேண்டாம் சார் என்று சொல்லுகிறார்.
என் மேடம் நீங்க கொட்டேஷன் சொல்லாமலே சொல்றீங்க என்று கேட்க நான் என்ன கொட்டேஷன் கொடுத்தாலும் அதைவிட கம்மியா பண்ணி தரேன்னு தான் அவங்க சொல்லுவாங்க என்று சொல்ல, சரி உங்களுடன் அமொண்ட மட்டும் சொல்லுங்க என்று சொல்ல, உடனே மீனா , எனக்கு லாபம் எல்லாம் வேணாம் பூவோட காசு 15,000 மட்டும் போதும் என சொல்ல பேசிவிட்டு வெளியில் வந்த சிந்தாமணி இடம் மேனேஜர் சென்று அவங்க ஒரு கொட்டேஷன் சொல்லி இருக்காங்க நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க அவ பண்ணதை விட நான் 2000 கம்மி பண்ணி தரேன் என்று சொல்லிவிடுகிறார்.
உடனே மீனா சந்தோஷப்பட மேனேஜரும் சந்தோஷமாக அவர்களை 15,000 பண்ணி தருகிறார்கள், நீங்கள் அதைவிட 2000 கம்மி பண்ணி கொடுத்தா ரொம்ப சந்தோஷமா நீங்களே வந்து பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சிந்தாமணி மீனாவிடம் இதுக்கு 50 ஆயிரம் ஆகும் என்ன நஷ்டமாக வைத்துவிட்ட அல்லவா உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்லுகிறார் எத்தனை பேர் வைத்து சம்பாதித்து இருப்ப உனக்கு புண்ணியத்தை தான் சேர்த்து இருக்கேன் வரட்டுமா சிந்தாமணி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மீனாவும் அங்கிருந்து கிளம்பி வெளியே வர கிருஷ் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மீனாவை பார்த்து விடுகிறார் உடனே கத்தி கொண்டு ஓடி வர மீனாவிற்கு காதில் விழாமல் சென்று விடுகிறார் பிறகு வாட்ச்மேன் கிருஷ் அழைத்துச் சென்று விடுகிறார்.
மனோஜின் சாகசம் - ரோகிணியின் அச்சம்
மனோஜ் ஒரு பள்ளிக்கு தலைமை விருந்தினராகச் செல்லத் தயாராகிறார். அவரது நண்பர் போன் செய்து பள்ளி முகவரியை உறுதி செய்யும்போது, அது கிருஷ்ணா படிக்கும் 'அறிவு போர்டிங் ஸ்கூல்' என்று மனோஜ் சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணி, அதிர்ச்சி அடைகிறார். மனோஜ் கிருஷ்ணாவின் பள்ளியில் கிருஷ்ணாவைப் பார்த்துவிடுவாரோ என்று ரோகிணி அச்சமடைகிறார். மனோஜ் காரில் கிளம்பும்போது, ரோகிணி அவருக்குப் போன் செய்து, "தனக்கு நெஞ்சு அழுத்துகிறது, மயக்கமாக வருகிறது" என்று பொய் சொல்கிறார்.
ரோகிணியின் நாடகத்தைக் கேட்டு, மனோஜ் காரை திருப்பி, அவளைப் பார்க்கச் செல்கிறார். இதன் மூலம், மனோஜ் கிருஷ்ணாவின் பள்ளிக்குச் செல்வது தற்காலிகமாகத் தடுக்கப்படுகிறது. ரோகிணியின் இந்தத் திட்டம் மனோஜை பள்ளியில் இருந்து தற்காலிகமாகத் தடுத்திருந்தாலும், இந்த உண்மை எப்போது வெளிவரும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நாளை, ரோகிணியின் ரகசியம் அம்பலமாகுமா? அல்லது இன்னும் சில பில்டப்களுடன் ரசிகர்கள் காக்கப்படுவார்களா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications