Siragadikka Aasai : மனோஜ்க்கு கிடைத்த சரியான தண்டனை! ரோகிணியின் நாடகம் முடிந்தது! முத்து கேட்ட கேள்வி
சென்னை, ஆகஸ்ட் 26, 2025: (Siragadikka aasai serial Today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், இன்றைய எபிசோடில் மனோஜுக்கு நேர்ந்த விபரீதம், குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் விஜயா மற்றும் ரோகிணி செய்த செயலை குடும்பத்தினர் எல்லோரும் கலாய்த்து வருகின்றனர்.

மனோஜுக்கு நாய் கடி
மனோஜ் உடல்நிலை சரியில்லை என ரோகிணி போன் செய்ததால், அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மனோஜ் அடித்த அதே நாய், வீட்டு வாசலில் குரைத்துக்கொண்டிருந்தது. கோபமடைந்த மனோஜ், கல்லை எடுத்து அடிக்க முயல, நாய் அவருடைய காலில் கடித்துவிட்டது. வலியில் துடித்த மனோஜை, நாயின் உரிமையாளர் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது அவர், "என்னுடைய நாய் பழிவாங்கிவிட்டது" என்று சொல்ல, மனோஜ் நாயைப் போலச் சில அசைவுகளைச் செய்து காட்டுகிறார்.
ஊசி மற்றும் எச்சரிக்கை
டாக்டர் வீட்டுக்கு வந்து மனோஜுக்கு ஊசி போட்டுவிட்டு, "அடுத்த ஐந்து வாரங்களுக்கு ஊசி போட வேண்டும். மேலும், தினமும் அந்த நாய் உயிரோடு இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நாய்க்கு ஏதாவது ஆச்சுன்னா இவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்று எச்சரிக்கிறார். இதைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரோகிணியின் தந்திரம் மற்றும் குடும்பத்தின் செயல்
மனோஜ் ஏன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்கு வந்தார் என்று விஜயா கேட்க, ரோகிணிதான் வரச் சொன்னார் என்று மனோஜ் சொல்வாரோ என்று பயந்த ரோகிணி, அவர் பர்ஸை மறந்துவிட்டதால் வந்ததாக மனோஜ் சொல்ல வைக்கிறார்.
மனோஜ், ரோகிணியிடம் "உனக்கு எப்படி இருக்கிறது? தலை சுற்றுகிறது என்று சொன்னாயே?" என்று கேட்க, "உன்னை நாய் கடித்தது என்று தெரிந்ததும் என் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது" என்று சொல்லி சமாளிக்கிறார்.
முத்துவின் திட்டம்
ஒரு பக்கம் விஜயா மனோஜுக்காக ஜோசியரைப் பார்க்கச் செல்ல திட்டமிடுகிறார். மறுபுறம், முத்துவும் மீனாவும் மரம் நடுவது குறித்து வேடிக்கையாகப் பேசுகின்றனர். ரோகிணி விஜயாவின் செயலை ஆதரித்து ஜால்ரா அடிக்க, முத்துவும் மீனாவும் அதை வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கின்றனர்.
கிருஷை மீனா பார்ப்பாரா? கிரிஷ் விஷயம் குடும்பத்திற்கு தெரிய வருமா? என்று எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்று நடந்த சம்பவம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஆனாலும் இதுவரைக்கும் அதிகமாக பில்டப் பண்ணி பேசிக் கொண்டிருக்கும் மனோஜை இப்போது நாய் பழிவாங்கி இருக்கும் நிலையில் அவர் செய்யும் செயல்கள் சிரிக்க வைக்கும் வகையில் தான் இருக்கிறது. வழக்கம்போல இந்த வாரமும் கிரிஷ் பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வாய்ப்பில்லை என்பது போலத்தான் இருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications