சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாகும் புது வில்லன்.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்.. ரோகிணிக்கு இருக்கு ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் புதியதாக இன்ஸ்பெக்டர் ஒருவர் வில்லனாக என்ட்ரி கொடுக்கிறார். அவரால் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில நாட்களாகவே ரசிகர்களுக்கு ஏமாற்றக் கொடுக்கும் வகையில் தான் காட்சிகள் இருந்து வருகிறது. ரோகிணி இந்த சீரியலில் எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் அது கனவில் மட்டும் தான் நடக்கும் என்று இயக்குனர் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பிரச்சனை முற்றி ரோகிணி மாட்டுவது போல கதை வந்தாலும் கடைசியில் அது எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது போல போய்விடுகிறது. ரோகிணியின் அப்பாவை பார்க்க மலேசியாவுக்கு போக வேண்டும் என்று முத்து குடும்பத்தோடு பிளான் பண்ண, அதற்கு ரோகிணி அப்பா இருந்தால் தானே நீங்க பார்க்க போவீங்க என்று பிரவுன் மணியை வைத்து அப்பாவே செத்துப் போயிட்டாரு என்று சூப்பராக கதை அளந்து விட்டு விட்டார்.
இதை நம்பி விஜயாவும் இன்று கதறி அழுததை பார்க்கும் போது இதற்கு முடிவே இல்லையா என்று சொல்ல வைத்தது. இந்த பிரச்சனைக்கு மத்தியில் தற்போது வெளியான ப்ரோமோவில் புதிய வில்லன் ஒருவர் முத்துவிற்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். சில வாரங்களாகத்தான் முத்து மற்றும் மீனாவிற்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அடுத்த வாரத்தில் முத்துவுக்கும் மீனாவுக்கும் பிரச்சனைகளை தாராளமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே மீனாவை பழி வாங்க துடிக்கும் சிந்தாமணி விஜயாவிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள போகிறேன் என்று சேர்ந்திருக்கிறார். அதோடு மீனாவை விஜயாவுக்கு பிடிக்காது என்பதை தெரிந்து கொண்டு விஜயாவை வைத்து மீனாவை பழிவாங்க வேண்டும் என்று பிளான் போடுகிறார்.
இதற்கு மத்தியில் இப்போது முத்துக்கும் ஒரு வில்லன் வந்திருக்கிறார். அதாவது மீனாவும் முத்துவும் ஒரு செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு உதவி செய்கிறார்களே அவர்கள் தெருவில் கடை போட்டு இருக்கிறார்கள் என்று அதை எடுப்பதற்கு டிராபிக் போலீஸ் ஒருவர் வந்து அந்த தாத்தா பாட்டியை அடித்து அந்த கடையை அப்புறப்படுத்த சொல்கிறார்.
அப்போது முத்துவும் மீனாவும் அங்கு போய் தடுக்கிறார்கள். அதில் தாத்தா பாட்டியை அடிப்பதை பார்த்து முத்து அந்த போலீஸ்காரரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கிறார். இதனால் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வைத்திருக்கிறார். பின்பு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் முத்துவிடம் போலீசையே அடிப்பியா என்று திட்டுகிறார்.
அப்போது முத்து ட்ராபிக் போலீஸ் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியை அடித்து தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கேட்டேன் என்று சொல்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் டிராபிக் போலீஸை திட்டுகிறார். அங்கே இருந்து யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்தா உன் சட்டையை கழட்டிடுவேன் என்று மிரட்டுகிறார்.
இதனால் டிராபிக் போலீஸ் முத்துவிடம் நீ இப்போ தப்பித்துவிட்ட இன்னொரு முறை மாட்டும் போது உன்னை யாரு காப்பாற்றுவா என்று பார்க்கிறேன் என்று மிரட்டுகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய என்ட்ரியை பார்க்கும்போது இவர்தான் சீதாவுக்கு ஜோடியாக இருக்கும் என்று பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதே நேரத்தில் தாத்தா பாட்டி பொருள்களை போலீசார் அள்ளி கொண்டு போய் இருக்கிறார்கள். அதில் தான் முத்து தவறவிட்ட செல் போன் இருக்கிறது. போலீஸ் மீண்டும் தாத்தா பாட்டியிடம் அந்த எல்லா பொருட்களையும் ஒப்படைக்கும் போது செல்போனை முத்து பார்த்தால் இது என்னுடையது என்று சொல்வார். அதனால் இது தவறவிட்டது வித்யா என்ற உண்மைகள் தெரிய வரும்போது ரோகிணிக்கு அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. ஆனால் அது இனி எத்தனை மாதம் கழித்து வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications