சிறகடிக்க ஆசையில் நாளை.. ஏமாற்றிய விஜயா தற்கொலை செய்ய போன அண்ணாமலை.. முத்து எடுத்த அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை மே நான்காம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்ணாமலை தற்கொலை செய்யப் போவதாக அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில், (Siragadikka Aasai serial Promo) விஜயாவும் மனோஜும் குடும்பத்திற்கு தெரியாமல் பல பிரச்சனைகள் செய்து இருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கும்போதும் முத்துவும் மீனாவும் தான் மனோஜையும் விஜயாவையும் அதிலிருந்து காப்பாற்றுகின்றனர். காரணம் அண்ணாமலைக்காகத்தான் முத்து இவ்வளவு செய்வதாக பல இடங்களில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை ப்ரோமோ
அதேபோலத்தான் இப்போது கூட விஜயாவும் மனோஜாலும் மொத்த குடும்பமும் புது பிரச்சனையில் சிக்கிகின்றனர். ஏற்கனவே சிந்தாமணிக்கு விஜயாவின் வீட்டு மீது ஒரு கண்ணு இருக்கிறது. இந்த பெரிய வீட்டை நாம எடுத்துக்க வேண்டும் என்று பிளான் போட்டு இருந்தார். அது போதாத குறைக்கு முத்துவும் மீனாவும் சிந்தாமணியிடம் பிரச்சனை மேல் பிரச்சனை செய்ய இவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே சிந்தாமணி இப்போ இந்த வீட்டை வைத்து கேம் விளையாடுகிறார்.
ஏற்கனவே பணத்தேவையிலிருந்து மனோஜியிடம், பேங்கில் இருந்த வீட்டு பத்திரத்தை கொண்டு வந்து பைனான்சியரிடம் கொடுத்து அண்ணாமலை கையெழுத்து போட்டுக் கொடுத்தால் அதிக பணம் தருவதாக ஆசை காட்டி இருந்தார். இதனால் மனோஜும் விஜயாவும் அதே போல செய்ய இப்போது பிரச்சனையை சந்திக்கின்றனர்.
பொய் கையெழுத்து
அண்ணாமலை கையெழுத்தை பொய்யாக போட்டுக் கொடுத்ததற்காக பைனான்சியர் மனோஜ் மீது போலீசில் கம்பளைண்ட் கொடுத்திருந்தார். இதனால் அவரை ஜெயிலில் வைத்திருந்தனர். அப்போது அண்ணாமலை ஃபீல் பண்ணுவாரு என்பதற்காக முத்துவும் மீனாவும் தான் மனோஜை ஜெயிலில் இருந்து எடுத்ததற்காக முயற்சி செய்தனர். கடைசியில் ரோகிணி பைனான்சியரிடம் கெஞ்சி அவரிடம் 5 லட்சம் பணம் கொடுத்து மனோஜை வெளியே கொண்டு வந்து விட்டார்.
இதனால் இதுவரைக்கும் ரோகிணி மீது கோபத்தில் இருந்த மனோஜ் இப்போ ரோகிணி மீது பாசத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மீனா சிந்தாமணியிடம் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு வீட்டு பத்திரத்தை கொடுத்து ஏமாந்தவர்களை வைத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க போவதாக மிரட்டி இருந்தார். இதனால் கடுப்பான சிந்தாமணி இப்போ பைனான்ஸியரை வைத்து விஜயாவின் வீட்டை ஏலத்தில் விட முயற்சி செய்கிறார்.
இதை தெரிந்து கொண்ட அண்ணாமலை நம்மால் இனி இந்த வீட்டில் இருக்க முடியாதா? இந்த வீடு நம்ம கையை விட்டு போயிடுமா? என்று பீல் பண்ணி அழுது கொண்டிருக்கிறார். அதோடு இனி நான் வாழ்ந்தே பிரயோஜனம் இல்லை செத்துப் போயிடலாம் என்று அவர் செண்டிமெண்டாக பேச அதைக் கேட்டு முத்து பதறிப் போய் அப்பாவை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் நாளை எபிசோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இனி நடக்கப்போவது என்ன?
வழக்கம் போல முத்து அண்ணாமலைக்காக ஏதாவது செய்து வீட்டை கடைசி நேரத்தில் காப்பாற்றி விடுவார். ஆனாலும் நாளைக்கு கொஞ்சம் அழுகாச்சி காட்சிகள்தான் அதிகமாக இருக்கப் போகிறது. ஆனால் முத்து என்னதான் செய்தாலும் இந்த விஜயாவும் மனோஜும் கடைசி வரைக்கும் அவங்கள புரிஞ்சு கொள்ள போறது கிடையாது. தான் செய்தது தப்பே என்று தெரியாத விஜயா இப்பவும் இத்தனைக்கும் காரணம் முத்து மீனா தான் என்று சொல்லப் போகிறார்.
ஏற்கனவே மனோஜ் விஜயா பேச்சை கேட்டு பொய் கையெழுத்து போட்டு கொடுத்ததால் தான் ஜெயிலுக்கு போனார். அப்போ கூட முத்து அவன் தான் இதற்கு காரணம், நீங்க சிந்தாமணியிடம் பிரச்சனை பண்ணாம இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று பலியை அப்படியே மாத்தி போட்டார். அதே போல இப்போ வீட்டு பிரச்சனையில் செய்யப் போகிறார்.
நாளை ப்ரோமோ
ஆனால் இந்த தியாகி மீனாவும் முத்துவும் கடைசி வரைக்கும் குடும்பத்திற்காகவும், அப்பாவுக்காகவும் நாங்க பாடுபடுகிறோம் என்று ஓடப் போகிறார்கள். ஏற்கனவே மனோஜ் வாங்கிய கடனை ஒரு மாசத்திற்குள் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலமாக முத்துவும் மீனாவும் வேலை பார்க்கிறார்கள். இதற்கிடையில் இப்போ வர பிரச்சனையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications