சிறகடிக்க ஆசையில் பெரிய சம்பவம் இருக்கு! சிட்டியோடு ரோகிணி போட்ட பிளான்.. இவங்க ஆபத்து தான்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை ஜனவரி 5ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா குடும்பத்திற்கு எதிராக ரோகிணியும் சிட்டியும் சேர்ந்து பிளான் போடுகின்றனர். இதனால் முத்துவுக்கு பிரச்சனை வரப்போகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ரோகிணி வீட்டில் மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதுபோல இந்த வாரத்தில் ரவி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வைத்து நேற்றைய எபிசோடும் இன்றைய எபிசோடும் முடிந்து விட்டது.

ஒரு வழியாக முத்துவும் மீனாவும் ரவி மற்றும் ஸ்ருதியை மீண்டும் சேர்த்து வைக்கின்றனர். அதோடு ரவியின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெறுமா? இல்லையா? என்ற பரபரப்புக்கு கடைசியில் முத்து-மீனா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் முத்து மற்றும் மீனா பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதை கேட்டு ரோகிணியின் முகம் கோபத்தில் சிவந்து போய் இருந்தது. அதுபோல விஜயாவும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியும் வித்யாவும் சென்று
சிட்டியை சந்திக்கிறார்கள். அப்போது முத்துக்கு நீங்கதான் வீடியோவை ரிலீஸ் பண்ணி இருப்பிங்க என்ற சந்தேகம் வந்துடுச்சு என்று ரோகிணி சொல்கிறார்.

அதற்கு சிட்டி அது இப்போ இல்ல எனக்கு அப்பவே தெரிஞ்சதுதான். இந்த வீடியோ வெளியானதுமே அவனுடைய முதல் சந்தேகம் என் மேல தான் இருக்கும். ஏன்னா அவனுடைய முதல் எதிரியே நான் தான். அவனுக்கு என்னை தவிர பெரிய எதிரி கிடையாது. அதனால் நான் தான் வெளியே லீக் பண்ணி இருப்பேன்னு அவன் யோசிப்பான் என்று எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கிருக்கும் சிட்டியின் நண்பர் ஒருவன் ஆமா இவங்க சொல்றது உண்மைதான் என்று சொல்கிறான்.
அதோடு இரண்டு மூன்று நாளைக்கு முன்னாடி சத்யா என்கிட்ட உன்னை பத்தி விசாரிச்சான். நீ தான் அந்த வீடியோவை லுக் பண்ணுனியானு என்று என்கிட்ட கேட்டான் என்று சொல்கிறார். அதற்கு சிட்டி ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சனையில் சத்யா சிக்க வேண்டியது, அப்போ நான் தான் அவனை வேணான்னு தப்பிக்க வச்சேன்.

ஆனால் இப்போ அவனை மீண்டும் அதே பிரச்சனையில் சிக்க வைக்க போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த வாரத்தில் சத்யாவிற்கு சிட்டியால் பிரச்சனை வரப்போகிறது. அதே நேரத்தில் சத்யாவிற்கு சப்போர்ட்டாக முத்து அந்த பிரச்சனைகளில் சிக்க போகிறாரா? அல்லது சத்யாவை காப்பாற்றப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஏற்கனவே விஜயாவிடம் வேலைக்கு சேர்ந்திருக்கும் மீனாவின் எதிரியான டெகரேஷன் செய்யும் பெண் மீனாவை பழி வாங்குவதற்கு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதற்கு மத்தியில் முத்துவுக்கும் அடுத்த பிரச்சனை வரப்போகிறது. இதனால் இந்த சீரியலில் வில்லியாக இருக்கும் ரோகிணிக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் சாதகமான சூழ்நிலை வந்துவிடுகிறது.

-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications