சிறகடிக்க ஆசை: மனோஜ்- ரோகிணிக்கு பெரிய தண்டனை கொடுத்த முத்து.. இனி ஆட்டம் மாறப்போகுதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பணம் வாங்கிய விஷயத்தில் மாட்டி இருக்கும் மனோஜ் மற்றும் ரோகிணிக்கு முத்து ஒரு தண்டனை கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக ரோகிணி பற்றிய ஒரு உண்மை மட்டும் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது மனோஜ் ஷோரூம் திறப்பதற்கு ரோகிணியின் அப்பா பணம் கொடுக்கவில்லை, ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சத்தை வைத்து தான் ஷோரூம் திறந்தார் என்ற உண்மை முத்து மூலமாக குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது.

அதுபோல என்ன நடந்தாலும் மனோஜ் தனக்காக துணையாக இருப்பார் என்று நினைத்திருந்த நிலையில் ரோகிணியை மொத்தமாக மனோஜ் ஏமாற்றிவிட்டார். தன்னுடைய அம்மாவிடம் தான் நல்ல பேரு வாங்க வேண்டும், தனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக ஜீவாவிடமிருந்து பணத்தை வாங்கியதும் ஷோரும் திறக்கலாம் என்று எனக்கு ஐடியா கொடுத்தது ரோகிணி தான் என்று அப்ரூவல் ஆக மாறிவிட்டார்.
இதனால் விஜயா ரோகிணி மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். தன்னிடம் இந்த விஷயத்தை ரோகிணி சொல்லவில்லையே என்பதுதான் ரோகிணி மீது விஜயாவிற்கு இருக்கும் கோபத்தின் காரணம். இதனால் ரோகிணி பார்வதியின் வீட்டிற்கு சென்று பார்வதியிடம் அழுது நாடகம் போட்டதால் பார்வதி விஜயாவிடம் நீ இப்போ அவளை மதிக்கலனா ரோகிணிக்கு நாளைக்கு சொத்து கிடைக்கும் போது அவ மனோஜை தனியா கூட்டிட்டு போயிருவா என்று பயம் காட்டி இருக்கிறார்.

இதனால் விஜயா ரோகிணி விஷயத்தில் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் நாளைக்ஙான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வீட்டில் நாட்டாமை சரியான தண்டனை கொடுக்கல அதனால நான் தண்டனை கொடுக்க போறேன் என்று முத்து சொல்கிறார்.

அதை பார்க்கும்போது பார்வதி எடுத்து சொன்னதால் மனோஜ் மற்றும் ரோகிணிக்கு சாதகமாக விஜயா ஏதோ சொல்லி இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் முத்து நான் தண்டனை கொடுக்க போறேன் என்று சொன்னதும் மனோஜும் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு முத்து அப்பாவை ஏமாற்றிய பணத்தில் மனோஜ் ஷோரூம் தொடங்கி இருக்கிறான் அதனால்.. என்று சொல்லும் போது குறிக்கிட்ட மனோஜ் அதனால உன் பேருக்கு அந்த ரெஸ்டாரண்டை எழுதி தரணுமா? என்று கோபப்படுகிறார். அதற்கு முத்து இல்ல அந்த பணம் அப்பாவோட பணம் அதனால் அந்த ஷோருமை அப்பா பெயருக்கு மாத்தணும் என்று சொல்ல மனோஜும் விஜயாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இனி நாளைக்கு பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்ன நடக்குது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications