சிறகடிக்க ஆசை சீதா கழுத்தில் மஞ்ச தாலி.. மீனாவுக்கு டைவர்ஸ்! விஜயாவால் மாறும் வாழ்க்கை.. அடுத்து ஃப்ளாஷ் பேக் தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் சீதாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சங்கீதா திருமணமான கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கழுத்தில் தாலியுடன் சில புகைப்படங்களில் இருக்கிறார். இதனால் இவருக்கும் அருணுக்கும் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இவர்களுக்கு திருமணம் நடந்தால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ரோகிணி பணக்கார வீட்டு பெண் இல்லை என்பது தெரிந்ததுமே விஜயா தன்னுடைய ருத்ரதாண்டவத்தை தொடங்கிவிட்டார். இதுவரைக்கும் மருமகளாக இருந்த ரோகிணியை இப்போது பிச்சைக்கார மருமகள் என்று அடிக்கடி திட்டி கொண்டிருக்கிறார்.

சிக்கிய ரோகிணி
அதனால் விஜயாவை சமாளிப்பதற்காக சிட்டியிடம் இருந்து ஒரு செயின் வாங்கிக் கொண்டு வந்து ரோகிணி கொடுத்திருந்தார். ஆனால் அந்த நகை இப்போது திருட்டு நகை என்று தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த நகை வாங்கிய ஒரு லட்சம் பணத்தை எனக்கு தர வேண்டும் என்று விஜயா ரோகிணிக்கு செக் வைத்திருக்கிறார். ஏற்கனவே நகை வாங்குவதற்கு வித்தியாவிடம் கடன் வாங்கிய ரோகிணிக்கு இப்போது அடுத்த பணம் புரட்டுவதும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
முத்து எடுக்கும் முடிவு
இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் சீதா, அருண் உடைய ரிஜிஸ்டர் மேரேஜை மீனாவே முன் நின்று நடத்துகிறார். ஏற்கனவே இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் முத்து அவசர அவசரமாக சீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது சீதாவின் திருமணத்தை மீனாவே முன் நின்று நடத்துகிறார். இந்த நிலையில் தான் தற்போது சீதாவாக நடிக்கும் சங்கீதா மஞ்சள் தாலியோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சீதாவின் திருமணம்
இந்த புகைப்படங்கள் இந்த சீரியல் சூட்டிற்காக எடுக்கப்பட்டா? அல்லது அவர் திரைப்படங்களில் நடிக்கும் போது எடுக்கப்பட்டதா? என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த சீரியலில் அருண் மற்றும் சீதா உடைய திருமணம் நடந்து விடும். அந்த திருமணம் இப்போதைக்கு குடும்பத்திற்கு தெரிய வராது. அலைபாயுதே படத்தில் ஷாலினி மாதவன் ரகசிய திருமணம் செய்தது போலத்தான் இவர்களும் திருமண வாழ்க்கையை ரகசியமாக வைக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வார பஞ்சாயத்து
சீதா கல்யாணத்தை நடத்தி வைத்தது மீனா என்று தெரியும் போது முத்து மீனாவை வீட்டை விட்டு துரத்துவார். முத்துவின் பாட்டி வந்து மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வர வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பாட்டி வந்திருக்கும் புகைப்படங்களும் இப்போது வெளியாகியிருக்கிறது. இதனால் முத்துவிற்கு சீதாவின் திருமணம் சீக்கிரமாக தெரிய வரப்போகிறது. எது எப்படியோ அடுத்த வாரம் இந்த சீரியலில் பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கப்போகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications