Siragadikka Aasai Promo: சிந்தாமணி சூழ்ச்சியால் வீட்டை இழக்கும் விஜயா.. முத்து எடுக்கும் முடிவு.. தியாகி மீனா பழி!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி (Siragadikka Aasai serial promo) வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்போது சிந்தாமணியின் சூழ்ச்சியில் விஜயாவும் அவருடைய மகன் மனோஜும் சிக்கி இருக்கின்றனர். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்தது இப்போது நடந்து விட்டது. அவரைப் பற்றிய ஒரு மொத்த உண்மைகளும் குடும்பத்தினருக்கு தெரியவந்துவிட்டது. அதனால் ரோகிணியை விஜயா அடித்து விரட்டி இருக்கிறார். அதோடு மனோஜ்க்கு விவாகரத்து செய்து வைத்துவிடலாம் என்று கேஸ் போட்டு இருக்கும் நிலையில், ரோகிணி கோர்ட்டில் தன்னைப் பற்றிய உண்மைகள் எல்லாமே மனோஜ்க்கு ஏற்கனவே தெரியும் என்று பொய் சொல்லி, விஜயா பிளான்களை எல்லாம் அவருக்கு எதிராகவே சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜயாவின் கேரக்டர்
இது வழக்கமாக நடப்பது தான் எப்போதுமே தப்பு பண்ணுறவங்க தான் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க என்று சொல்லற மாதிரியே எல்லா சீரியலிலும் ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல இப்போது ரோகிணி காட்டில் நல்ல மழை. அவருக்கு உதவி செய்வதற்காக சிந்தாமணியும் இருக்கிறார். ஆனால் சிந்தாமணி ரோகிணியை வைத்து விஜயா வீட்டை ஆட்டம் போட வேண்டும் என்று நினைத்தார். இப்போது அதில் விஜயாவே போய் வசமாக சிக்கி இருக்கிறார்.
ஏமாறும் மனோஜ்
மனோஜின் வாழ்க்கையில் இருந்து ரோகிணியை பிரிக்க வேண்டும் என்று ரோகிணி கொடுத்த ஆர்டரால் வந்த கடனை அடைப்பதற்காக பைனான்ஸியரிடம் ஏழு லட்சம் கடன் கேட்கிறார். அதற்கு பைனான்சியர் வீட்டு பத்திரம் இருந்தால் தான் தர முடியும் என்று சொன்னதும் அண்ணாமலையின் கையெழுத்தை மனோஜை போட வைத்து பத்திரத்தை பைனான்சியரிடம் கொடுக்கிறார்.
சிந்தாமணியின் சூழ்ச்சி
இதை பார்க்கும் சிந்தாமணி ஒரு வழியாக நாம ஆசைப்பட்ட மாதிரி அந்த வீடு என் பேருக்கு வரப்போகுது என்று சந்தோஷத்தில் இருக்கிறார். இனி தான் சிந்தாமணியின் சுயரூபம் விஜயாவுக்கு தெரியவரும். ஆனால் அப்போ கூட விஜயா உண்மையை புரிந்து கொள்வாரா அல்லது வழக்கம் போல சிந்தாமணி பணக்காரவங்க, அவங்க தான் நல்லவங்க என்று மீனாவை குறை சொல்ல போகிறாரா என்று தெரியவில்லை.
அதுபோல இந்த சீரியலில் என்னதான் அடிச்சாலும் நாங்க தாங்குவோம் என்பது போல மீனாவும் முத்துவும் விஜயாவிற்கு சேவகம் செய்வதற்காகவே காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் விஜயாவும் மனோஜும் ஒரு பிரச்சனைகள் சிக்கிக் கொள்ள அவர்களுக்கு ஓடி போய் உதவி செய்து, அசிங்கப்படுவது தான் முத்து மீனாவின் வேலையாக இருக்கிறது. இப்போது பத்திரத்தை பைனான்சியரிடம் விஜயா கொடுத்திருக்கும் நிலையில் இதை வைத்து வரும் பிரச்சனையில் இனி முத்து தான் மொத்த பணத்தையும் கொடுத்து வீட்டை மீட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்து தான் காப்பாத்தணும்
எப்படியும் அடுத்த வாரம் அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் சிந்தாமணி விஜயாவை வீட்டை விட்டு துரத்த போகிறார். அதற்கு பிறகு வாடகை வீட்டில் இருக்கும் முத்து மொத்த குடும்பத்தையும் கவனித்துக் கொள்வார். இதை ஏற்கனவே பல சீரியல்களில் பார்த்திருக்கோம். அதுதான் இப்போது நடக்கப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. எப்படியோ வழக்கம்போல இந்த முறையும் தியாகி மீனா அத்தை பாவம்... மாமா பாவம், அவங்களுக்காக இந்த வீட்டை மீட்கணும் என்று இன்னும் போராடப் போகிறார் என்று தெரிகிறது. இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்..?












Click it and Unblock the Notifications