சிறகடிக்க ஆசை: விஜயாவிற்கு இடியாக வந்த செய்தி.. அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. பாராட்டும் முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் பத்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மனோஜ்க்கு வந்த கடிதத்தை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் நடக்கும் செயல்களை பார்த்து மீனா சந்தேகப்படுகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கும் காதலர்களில் அந்த பெண்ணை மட்டும் முன்னாடி வரவைத்து டான்ஸ் ஆட சொல்ல, அதை பார்த்து எல்லோரையும் டான்ஸ் கற்றுக்கொள்ள சொல்கிறார். அந்த நேரத்தில் மீனா சாப்பாடு கொண்டு போய் கொடுத்ததும், மாணவர்கள் எல்லோருக்கும் இடைவேளை என்று சாப்பிட சொல்லிவிட்டு விஜயா சாப்பிட போகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது விஜயா என்ன சாப்பாடு என்று மீனாவிடம் கேட்டதும் மீனா பிரியாணி என்று சொல்கிறார். அப்போ வீட்டில் சமைச்சியா? என்று கேட்க இல்ல கடையில்தான் வாங்கிட்டு வந்தேன். வேலை அதிகமாக இருந்ததால சமைக்க முடியல என்று சொன்னதும் பார்வதி நான் காலையில் தான் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல மீனா வாங்கிட்டு வந்துட்டா ரொம்ப சந்தோஷம் என்று சொல்ல, விஜயா மீனாவை பரிமாற சொல்கிறார்.

மீனா அவசரமாக பரிமாறி விட்டு நான் மாலை கட்ட போறேன் என்று கிளம்பி போகும்போது அங்கு காதலர்கள் மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொண்டு இருப்பதை பார்த்து மீனா சந்தேகப்படுகிறார். மறுபக்கத்தில் ரோட்டில் வாகனங்களை டிராபிக் போலீஸ் செக் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த வழியாக வந்த சத்யாவின் பைக்கை நிறுத்துகிறார்கள். அப்போது முத்துவின் காரையும் நிறுத்தி செக் பண்ணுகிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

சத்யாவின் பைக்கில் பியர் பாட்டில்கள் இருக்கிறது. ஆனால் தன்னிடம் டாக்குமெண்ட் எல்லாம் சரியாக இருப்பதாக சத்தியா காட்டிக் கொண்டிருக்கிறார். முத்துவும் அருகில் நின்று சத்யாவுக்கு அட்வைஸ் கொடுப்பது போல பேசிக் கொண்டிருக்க போலீஸ்காரர் இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். போலீஸ்காரரிடம் முத்து சத்யா பற்றி போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கிறார். கடைசியில் இப்படி குடிச்சிட்டு இருந்தா நடுத்தெருவுல நிற்கும்போது தான் தெரியும், இதை அனுபவபட்டவன் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.

television siragadikka aasai serial vijay tv

இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த விஜயா பிரியாணி சாப்பிட்டு ஜீரணமாகாததால் நெஞ்சை பிடித்துக் கொண்டிருக்கிறார். ரோகிணி அவருக்கு சுடுதண்ணி வைத்துக் கொடுக்கிறார். அப்போது அண்ணாமலை நீ ஏன் பிரியாணி சாப்பிட்டா? அதான் மீனா கீரை, பொரியல் என்று விதவிதமா சமைச்சு கொண்டு வந்தாளே நீ அதை சாப்பிடாம ஏன் பிரியாணி சாப்பிட்ட? என்று கேட்க, அவ தான் எனக்கு பிரியாணி வாங்கிட்டு வந்தா என்று விஜயா சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ரோகிணி கொண்டு போன சாப்பாட்டை என்ன செஞ்சீங்க என்று மீனாவிடம் கேள்வி கேட்க, மீனா தயங்கி தயங்கி தெருவில் மயக்கம் போட்டு விழுந்த பாட்டிக்கும் தாத்தாவிற்கும் கொடுத்ததாத சொல்ல, அதைக் கேட்டு அண்ணாமலையும் முத்துவும் மீனாவை பாராட்டுகின்றனர். ஆனால் விஜயா யார் வீட்டு சாப்பாட்டை யாருக்கு கொடுப்ப என்று திட்டுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து மீனாவுக்கு சுத்தி போடுகிறார். இறுதியாக மனோஜ் தூங்கும்போது லெட்டரை நினைத்து தூங்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மொட்டை மாடிக்கு செஞ்சு விஜயாவை போன் பண்ணி வர சொல்கிறார். விஜயாவும் அங்கு வந்ததும் லெட்டரை விஜயாவிடம் கொடுக்க அதை படித்து பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகிறார். அந்த கடிதத்தில் முதலில் உங்க அம்மாவுக்கு நெஞ்சுவலி வரும் என்று எழுதி இருப்பதால் தனக்கு என்ன ஆகும் என்று விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+