சிறகடிக்க ஆசை: கதறி அழுத வித்யா! மனோஜ் கேட்ட கேள்வி.. முத்துவிடம் செல்வம் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜை ரோகிணியும் அவருடைய தோழி வித்தியாவும் ஏமாற்றி பணத்தை வாங்குகின்றனர். அதே நேரத்தில் செல்வத்தை நேரில் சந்தித்த மீனா, சொன்ன வார்த்தையை கேட்டு செல்வம் மனம் மாறுகிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் ரோகிணியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ ஏன் ஜீவா பத்தி பேசி என் மனசை கஷ்டப்படுத்துறா? அந்த மாதிரி ஒரு ஆள் என் வாழ்க்கையிலே இல்லை என்று நான் நினைச்சு சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் நீ இப்படி பேசுறது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்ல, ரோகிணி சாரி மனோஜ் நான் என் பிரண்டு கிட்ட வாக்கு கொடுத்துட்டேன். அது கிடைக்கலையே என்ற கோவத்துல இப்படி பேசிட்டேன்.இனிமே இப்படி பேச மாட்டேன் என்று சமாதானம் செய்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு மனோஜ் நான் ஒரு லட்சம் ரூபாய்க்கு மூன்று ரூபாய் வட்டி போட்டு கொடுக்கிறேன் என்று சொல்ல ரோகிணியும் வேறு வழி இல்லாமல் சரி என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கத்தில் மீனா செல்வத்தை சந்தித்து நீங்க உங்க அம்மா அப்பா கல்யாண நாளில் சந்தோஷமா கொண்டாட நினைக்கிறது நல்லது தான். ஆனால் ஆடம்பரமா செலவு செய்வதை விட வீட்டில் நம்ம வசதிக்கு ஏற்றபடி செய்வது ரொம்ப நல்லது அண்ணா.

நீங்க உங்க அப்பா அம்மாவுக்கு செய்றதை நான் வேணான்னு சொல்லல. உங்க அப்பா அம்மாவுக்காக கல்யாணம் பண்ணுறது நல்லது தான். ஆனா நம்மள மாதிரி ஆளுங்க எப்படி பண்ணுனா நல்லா இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்கிறேன். நீங்க என்ன தங்கச்சியா நினைக்கிறீங்க அந்த உரிமையில் தான் நான் சொல்றேன். கடன் வாங்கி வட்டி கட்டுற கஷ்டம் நம்மள மாதிரி உழைச்சு வேலை செய்றவங்களுக்கு தான் தெரியும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு முத்துவின் நண்பர்கள் முத்து மற்றும் மீனா இருவருக்கும் செல்வத்திற்கு பணம் கொடுப்பதில் வந்த சண்டை பற்றி சொல்ல அதைக் கேட்ட செல்வம் இவ்வளவு பிரச்சனை நடந்து இருக்கு நீங்க ஏன் என்கிட்ட சொல்லவில்லை என்று திட்டிவிட்டு மீனா இங்க வந்த விஷயத்தை முத்துவிடம் சொல்ல வேண்டாம். என்னால் அவங்களுக்குள் சண்டை வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக ஷோரூம் வந்த மனோஜ் இடம் ரோகிணி ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்கிறார். அந்த நேரத்தில் அங்கு வித்யா வந்து ரோகிணியை தனியாக கூப்பிட்டு அழ ஆரம்பிக்கிறார். அதை பார்த்து மனோஜ் என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். இதுவரைக்கும் மொக்கையா காமெடியா பண்ணி எப்போதும் சிரிச்சிட்டே இருப்ப இப்போ என்ன அழுகுற என்று கேட்க, எங்க அம்மாவுக்கு ரொம்ப நாளா வயிறு வலி என்று சொல்லிட்டு இருந்தேன்ல இப்போ அவங்களுக்கு கட்டி இருக்கிறதா சொல்லி இருக்காங்க. உடனே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.

television siragadikka aasai serial vijay tv

ஆப்ரேஷனுக்கு 75 ஆயிரம் ஆகும் என்கிட்ட காசு இப்போ இல்ல. என் பிரண்டு ஒருத்தி கேட்டானு இருந்த பணத்தை கொடுத்துட்டேன். ஆனால் இப்ப என்ன பண்ணுறதுன்னு தெரியலையே என்று அழுது கொண்டிருக்க மனோஜ் ரோகிணியை கூப்பிட்டு நான் வேணும்னா பணம் தரேன். ஆனால் மூன்று ரூபாய் வட்டிக்கு வாங்கிக்கோ என்று சொல்ல அதற்கு வித்யாவும் சரி என்று சொல்ல ரோகிணியிடம் பணத்தை கொடுத்து மனோஜ் வித்யாவிடம் கொடுக்க சொல்கிறார்.

பிறகு வித்யாவும் ரோகிணியும் வெளியே வந்து இருவரும் டிராமா போட்டு மனோஜிடம் காசு வாங்கியது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வித்யா நான் ஒரு நாள் டிராமா போடுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால் நீ எப்படி தான் அவன் கூட டெய்லி ட்ராமா போட்டுட்டு இருக்கியே என்று சொல்லிக் கொள்கிறார். மறுபக்கத்தில் செல்வம் அவருடைய நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது முத்துவிடம் நீ என்ன சொல்ல போற என்று நண்பர்கள் கேட்க, அவனிடம் பணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன் என்று சொல்ல அப்போ கல்யாணத்தை எப்படி நடத்த போறே என்று அவர்கள் கேட்க நம்மள மாதிரி ஆள்கள் ஆசைப்பட மட்டும்தான் தகுதி இருக்கு ஆனா செய்யிற தகுதி இல்லை. ஃபங்ஷனை கேன்சல் பண்ண போறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து நேற்று சவாரி முடிவதற்கு லேட்டாயிடுச்சு அதான் பேங்கில் போய் பணம் எடுத்துட்டு வர முடியல இந்தா வச்சுக்கோ என்று ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறார்.

அதற்கு செல்வம் பணம் வேண்டாம் என்று சொல்ல, முத்து கோபப்படுகிறார். நாளைக்கு பங்க்ஷன் நடக்க இருக்கு, நீ இப்போ பணம் வேண்டாம்னு சொல்லுற? அப்போ எப்படி பங்ஷனை நடத்த போற என்று கேட்க, நான் எளிமையா கோயிலில் வச்சு சிம்பிளா முடிக்க போறேன் என்று சொல்ல, முத்து விடாமல் செல்வத்திடம் துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+