சிறகடிக்க ஆசை: இன்று முத்துவுக்கு விழுந்த அடி பலருக்கு பாடம்.. ஆனால் மீனா பாவம்! கடைசியில் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 16ஆம் தேதி காலை எபிசோடில் மீனாவின் பேச்சையும் முத்து தன்னுடைய நண்பன் செல்வத்திற்கு பணத்தை கொடுத்துவிட்டு, செல்வத்தை சந்தித்து மீனா பேசியதற்காக மீனாவை அடிக்கப் போகிறார். ஆனால் கடைசியில் முத்து செல்வம் குடும்பத்திடம் அவமானப்பட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடந்த எபிசோடு பலருக்கு பாடம் என்று சொல்லலாம். ஆடம்பர செலவு மற்றும் அத்தியாவசிய செலவுக்கு கடந்த வாரமே மீனா விளக்கம் கொடுத்திருந்தார். இது பலரும் பின்பற்ற வேண்டிய விஷயம்தான். ஆனாலும் இன்றைய எபிசோடில் ஆடம்பர செலவு அதிகரிக்கும் போது வீண் அவமானமும் மன கஷ்டங்களும் எப்படி வருகிறது என்று காட்டி இருக்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

எபிசோடின் ஆரம்பத்தில் முத்து செல்வத்திடம் பணத்தை கொடுக்க, அவர் வேண்டாம் என்று சொல்ல முத்து நீ எதற்காக மனம் மாறின? என்ன நடந்துச்சுன்னு உண்மையை சொல்லு? என்று மீண்டும் மீண்டும் முத்து கேட்க ஒரு கட்டத்தில் செல்வம் மீனா வந்து தன்னை சந்தித்த விஷயத்தை சொல்லி விடுகிறார். ஆனாலும் மீனா மீது தப்பில்லை மீனா சொன்னது சரிதான் என்று சொன்னாலும் அதை கேட்காத முத்து மீனா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்.

ஆனால் பணத்தை செல்வம் வாங்காததால் பக்கத்தில் இருக்கும் காரில் வைத்துவிட்டு இந்த பணத்தை நீ எடுக்கலைன்னா என்னுடைய நண்பனே இல்லை என்னிடம் பேசாதே என்று மிரட்டி விட்டு செல்கிறார். உடனே செல்வமும் அந்த பணத்தை எடுத்துக் கொள்கிறார். வீட்டிற்கு வந்த முத்து கோபத்தோடு மீனாவை கூட்டிக்கொண்டு மாடிக்கு சென்று நீ எதற்காக செல்வத்தை போய் சந்திச்ச? என்று கேட்க, மீனா நான் போய் தப்பா எதுவும் பேசல, ஆடம்பர செலவு வேண்டாம் என்று தானே சொன்னேன் என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது முத்து ஒரு லட்சம் பணம் பேங்கில் இருந்து எடுத்து கொடுத்ததாக சொல்ல அதற்கு மீனா நீங்களும் உங்க அண்ணனும் போல தான் இருக்கீங்க என்று சொல்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது அப்போது ஒரு கட்டத்தில் மீனா மீது கோபத்தில் அடிக்க கை ஓங்கி விடுகிறார். பிறகு அடுத்த நாள் முத்து செல்வம் வீட்டிற்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருக்க அண்ணாமலை எங்கப்பா வேலையா என்று கேட்க, இல்லப்பா அறுபதாம் கல்யாணத்துக்கு போறேன் என்று சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை என்னது 60 கல்யாணத்துக்கு போறியா? என்று அண்ணாமலை கிண்டல் செய்ய என்னப்பா நீ என்ன கலாய்க்கிறீயா என்று முத்து கேட்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை நீ மட்டும் தனியா வா போற மீனா வரலையா என்று கேட்க மீனாவோடு சண்டை என்பதை சொல்லாமல் முத்து சமாளிக்க பார்க்கிறார். அந்த நேரத்தில் போலாமா என்று மீனா கிளம்பி வருகிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மீனாவை கூட்டிக்கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கும் போது இப்பவாவது உனக்கு புரிஞ்சுச்சுசே என்று சொல்ல அதற்கு மீனா நான் இப்பவும் உங்க மரியாதைக்காக தான் வரேன் என்று சொல்கிறார். பிறகு ஃபங்ஷனுக்கு வந்த முத்து மீனாவை செல்வத்தின் மனைவி வரவேற்கிறார். செல்வம் எங்கே என்று கேட்க பின்னாடி போய் பாருங்க என்ன என்று அவர் சொன்னதும் முத்து வீட்டிற்கு பின்னாடி வந்து பார்க்க அங்கு சரக்கை அண்டாவில் ஊற்றி மிக்ஸ் பண்ணி எல்லோருக்கும் செல்வம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்து முத்து அதிர்ச்சியடைந்து நிற்கிறார். முத்து பின்னாடியே மீனாவும் வந்து இதை பார்த்து விடுகிறார். அப்போது ஒரு நண்பர் முத்து நீ கொடுத்த காசு சரக்குகே போதாது என்று சொல்கிறார். இது பார்க்கும் ரசிகர்களையும் கடுப்பாக்கி இருக்கிறது. அத்தியாவசியம் இல்லாத உதவி செய்பவர்கள் இப்படித்தான் அவமானப்பட வேண்டும் என்பது அப்போது முத்துவின் நிலைமையை பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனாலும் முத்து அந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று கிளம்ப முயற்சி செய்யும்போது செல்வம் குடித்துவிட்டு போ என்று வற்புறுத்துகிறார். ஆனால் உனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டு மீனாவோடு வந்து சாப்பிட உட்காருகிறார். அப்போது அங்கிருப்பவர்கள் இது என்ன கறி வேகல, சீக்கு வந்த கோழி போல, நீ எதுக்கு எங்களை இப்படி ஒரு சாப்பாடு போட்டு ஏமாத்துற உங்க அண்ணனுக்கு எல்லாம் கெடாவெட்டி விருந்து போட்டான்.

இந்த சாப்பாடு கோவில்ல உள்ள புளியோதரை மாதிரி இருக்கு. அங்க மிச்சம் வச்சதை இங்க வந்து போடுவியா? இதை நாங்க சாப்பிடனுமா என்று வாக்குவாதம் ஆகி கொண்டு இருக்கும் போது ஒரு நபர் செல்வத்தை அடிக்க வர முத்து என்னுடைய நண்பனை அடிப்பியா என்று அந்த நபரை அடித்ததும் அங்கிருந்த உறவுக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து எங்க வீட்டுக்கே வந்துட்டு நீ எங்க சொந்தக்காரங்களை அடிப்பியா? என்று முத்துவை பிடித்து கீழே தள்ளி விடுகின்றனர். இதை எல்லாம் பார்த்து மீனாவும் அதிச்சியாகி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+