சிறகடிக்க ஆசை: உன் மகன்னு நான் தான் சொல்லணும்! ரோகிணியை மிரட்டிய அம்மா! க்ரிஷ் இனி முத்து குழந்தையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணியின் அம்மா போன் பண்ணி க்ரிஷ் விஷயத்தில் ரோகிணியை மிரட்டுகிறார். இதனால் இனி முத்து மற்றும் மீனா கேட்டது போல க்ரிஷை தத்து கொடுக்கப் போகிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ரோகிணி மட்டும் எந்த இடத்திலும் பிரச்சனைகளில் மாட்டாமல் தப்பித்து கொண்டிருக்கிறார். அவர் மாட்டுவது போன்று கதை வந்தாலும் கடைசியில் ஏதாவது சொல்லி ஏமாற்றி அவர் அதிலிருந்து தப்பித்து விடுகிறார். ஆனால் முத்துவும் மீனாவும் தப்பே செய்யவில்லை என்றாலும் கடைசியில் அவர்கள் மீதுதான் பழி வந்து விழுகிறது. இது பார்க்கும் ரசிகர்களை அதிருப்தியாகி ஆக்கி இருக்கிறது.

ஆனாலும் ஒவ்வொரு முறையிலும் இந்த முறை ரோகிணி மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது க்ரிஷ் விஷயத்தில் ரோகிணி மாட்டுவது போன்று கதை மீண்டும் வந்திருக்கிறது. அதாவது கிரஷ்ஷை முத்துவும் மீனாவும் தத்தெடுக்க போகிறோம் என்று போன மாதமே வீட்டில் சொல்லியிருந்தனர். இந்த நிலையில் இப்போது பாட்டி ஊரில் இருந்து நிலக்கடலை அனுப்பி இருக்கும் நிலையில் அந்த கடலையை கொண்டு போய் கிருஷ்க்கு கொடுத்துவிட்டு அவனைப் பார்த்துவிட்டு வருகிறோம் என்று முத்துவும் மீனாவும் கிளம்பிப் போயிருக்கின்றனர்.

இதை தெரிந்ததும் ரோகிணி அம்மாவுக்கு போன் போட்டு க்ரிஷை அவர்களிடம் காட்டக்கூடாது பக்கத்து வீட்டில் விட்டுடுங்க அதேபோல முத்துவும் மீனாவும் இந்த வீட்டிற்கு இனி வரக்கூடாதுன்னு சொல்லி இருக்க என்று மிரட்டி இருக்கிறார். ஆனால் முத்துவும் மீனாவும் வீட்டிற்கு போனதும் க்ரிஷ் பற்றி கேட்டு இருக்கின்றனர். அதற்கு ரோகிணியின் அம்மா எனக்கு உடம்பு சரியில்லை என்பதால் அவனை சரியாக பார்க்க முடியவில்லை என்று உறவினர் வீட்டில் விட்டு இருக்கிறேன் என்று சமாளிக்கிறார்.
ஆனாலும் விடாது முத்து உங்களுக்கு உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில் கூட உங்க பொண்ணு வரமாட்டாளா? என்று கோபப்படுகிறார். அதற்கு ரோகிணியின் அம்மா அவளுக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சமாளிக்கிறார். அதற்கு முத்துவும் மீனாவும் உங்க க்ரிஷை எங்களுக்கு தத்து கொடுத்துடுங்க. நாங்க அவனை நல்லா பாத்துக்குறோம். எங்களுக்குன்னு இன்னொரு குழந்தை வந்தா கூட நாங்க க்ரிஷை எங்களுடைய முதல் குழந்தையா பாத்துக்குறோம் என்று சொல்லி இருக்கின்றனர்.
இது பற்றி ரோகிணிக்கு போன் பண்ணி அவருடைய அம்மா சொல்ல ரோகிணி கோபப்படுகிறார். அதற்கு ரோகிணியின் அம்மா உனக்கு தான் அவன் மீது அக்கறையே இல்லையே என்று சொல்ல, அதற்கு ரோகிணி அவன் என்னுடைய மகன். அவன் மேல அக்கறை இருக்கு என்று சொல்ல அதற்கு ரோகிணியின் அம்மா அவன் உன் மகன் என்று நான் ஊரில் சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும்.

யாருக்கும் அவன் உன் மகன் என்று தெரியாது அது நினைவில் வைத்துக்கொள். அவன் விஷயத்தில் முடிவெடுக்கிற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என்று சொல்கிறார். இதனால் முத்து மீனாவிடம் கிருஷை தத்து கொடுத்து விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ் வீட்டிற்கு வந்த பிறகு தான் ரோகிணி ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன்னை பற்றி உண்மைகளை வீட்டில் சொல்வார் என்றும் தெரிகிறது.
ஏற்கனவே முத்துவும் மீனாவும் க்ரிஷை தத்தெடுக்க போவது பற்றி அவருடைய பாட்டி இடம் பேசியதை விஜயாவிடம் போட்டுக் கொடுக்கிறார். ஆனால் இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று முத்துவோ அல்லது மீனாவோ கேட்டால் ரோகிணி மீது விஜயாவிற்கு சந்தேகம் வரும். ஆனாலும் நாளைக்கு என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications