ஒருவழியாக எனக்கு கல்யாணம் முடிந்து விட்டது! சுருதி நாராயணன் வெளியிட்ட பதிவு.. அட இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்த முகம் தான். ஒரே ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவால் உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமானார். அந்த சர்ச்சைக்குப் பிறகு, தனது நடிப்புக் கேரியரில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது சமூக வலைதளங்களில் மாலையும் கழுத்துமாக, தாலியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்தியம் பார்த்துள்ளார்!

விசுவல் கம்யூனிகேஷன் டூ சின்னத்திரை
நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் விசுவல் கம்யூனிகேஷன் படித்த ஸ்ருதி நாராயணன், தனது பயணத்தை கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகத் தொடங்கினார். பின்னர், விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல், ஜீ தமிழில் 'கார்த்திகை தீபம்', 'மாரி' போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்குப் பெரிய புகழை வாங்கிக் கொடுத்தது, 'சிறகடிக்க ஆசை' சீரியலில் அவர் ஏற்று நடித்த வித்யா கதாபாத்திரம்தான்.
சர்ச்சையும், ஷகிலாவின் விமர்சனமும்
அண்மையில், ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், சினிமா வாய்ப்பு பெறுவதற்கான ஆபாசமான விஷயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ஸ்ருதியைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்துத் திரையுலகப் பிரபலம் ஷகிலா பேசியதுதான் பெரிய விவாதத்தைக் கிளப்பியது: "சினிமா வாய்ப்புக்காக இப்படித் தரம் தாழ்ந்து அந்தப் பெண் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. சினிமாவில் இப்படி ஆடிஷன் நடக்கவே நடக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" என்று கூறி ஸ்ருதியை விளாசி இருந்தார்.
இந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாத ஸ்ருதி, "அந்த வீடியோ நான் இல்லை; அது AI வீடியோ" என விளக்கம் கொடுத்தார்.
ரீல் கல்யாணம் Vs ரசிகர்களின் ஏமாற்றம்
சர்ச்சையில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி நாராயணன், தனது இன்ஸ்டாகிராமில் கழுத்தில் தாலியுடன், மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவைப் பதிவிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள், "ஸ்ருதிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா! வாழ்த்துகள்!" என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், இது ரியல் கல்யாணம் இல்லை; ரீல் கல்யாணம்!

'சிறகடிக்க ஆசை' சீரியலில், வித்யா (ஸ்ருதி நாராயணன்) மற்றும் முருகன் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு முன்பாக முருகனிடம் ரோகிணி பணம் கேட்டுச் சண்டை போட்டதால், வித்யா - முருகன் திருமணம் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
ஆனால், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பையும் மீறி, ரோகிணியின் சதி பெரிதாக எதுவும் நடக்கவில்லை! கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சப் என்று நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் திருமணத்தில், ரோகிணியின் முதல் திருமணம் பற்றிய உண்மைகள் தெரிய வருமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தற்போது ஸ்ருதி நாராயணன், அந்த சீரியல் கல்யாண போட்டோவைத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications