சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட பிளான்.. முத்துக்கு நடந்த நல்ல விஷயம்.. முழு வில்லனாக மாறிய அருண்
சென்னை: (Siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 4ஆம் தேதிக்கான எபிசோடில், அருண் அம்மா விபத்தில் இறந்ததுக்குப் பிறகு, முத்து மேல விழுந்த பழி இன்னும் குறையவே இல்ல. என் அம்மா சாவுக்கு நீ தான் காரணம்ன்னு சொல்லி அருண் முத்துவை நேர்ல அசிங்கப்படுத்துகிறார்.
இன்றைய (Siragadikka Aasai serial Feb 4, 2026) எபிசோடில், செல்வத்தை ஜாமினில் வெளியே கொண்டு வரணும்னு முடிவு பண்ணி, முத்துவும் மீனாவும் வக்கீலை சந்திக்கிறாங்க. மனோஜின் டைவர்ஸ் கேஸ் பார்த்துக்கிட்டிருக்கிற அதே வக்கீல் தான் செல்வத்தின் கேஸையும் எடுக்க போகிறார். அங்க அந்த வக்கீல் தன்னுடைய காயம் பட்ட கணவரை பாசமா கவனிக்கிறதை பார்த்து, "இந்த காலத்துலயும் இப்படி ஒரு புரிதலான தம்பதி இருக்காங்க பாரு"ன்னு முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுறாங்க.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு
செல்வத்தின் கேஸை முழுசா கேட்ட வக்கீல், "இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, விபத்து தான்... ஜாமினில் எடுக்கலாம்"ன்னு சொன்னதும், முத்துவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்குது. மறுபக்கம் செல்வத்தின் மனைவி, அவங்க நண்பர்களோட அருண் வீட்டுக்கு போய் "எப்படியாச்சும் என் புருஷனை விடச்சொல்லுங்க"ன்னு கெஞ்சுறாங்க. ஆனா அருண் வழக்கம்போல கோபப்பட்டு அவங்களை திட்டி விரட்டறான்.
அருண் கோபம்
கூட வந்த முத்துவின் நண்பர்களையும் அடிக்கிறார். அந்த நேரத்துல முத்துவும் மீனாவும் அங்க வர்றாங்க. முத்துவை பார்த்த உடனே அருண் எதுவும் பேசாம வீட்டுக்குள்ள போயிடுறார். செல்வத்தின் மனைவிக்கு ஆறுதல் சொல்ற முத்து, "நான் ஜாமினில் எடுக்க முயற்சி பண்றேன்"ன்னு வாக்கு கொடுக்கிறார்.
மனோஜ் - ரோகிணி
இதுக்கிடையில, மனோஜ் - ரோகிணி ட்ராக் தான் இன்னொரு சுவாரசியமான பகுதி. ரூம்ல தனியா இருக்குற மனோஜுக்கு ரோகிணி போன் போட்டு ரொமான்டிக்கா பேசுறார். டைவர்ஸ் கேஸ்ல இருந்து தப்பிக்கணும்னா, மனோஜ் தான் "எனக்கு டைவர்ஸ் வேண்டாம்"ன்னு சொல்லணும்னு ரோகிணி முடிவு பண்ணி, அவரை தன் வழிக்கு கொண்டு வர பிளான் போடுறதை பார்க்க முடிஞ்சது.
அடுத்ததாக, ரவி வீட்டுக்கு வந்து முத்துவை கட்டிப்பிடிச்சு மன்னிப்பு கேக்குறான். "நான் உன்னை தவறா நினைச்சுட்டேன்"ன்னு ஃபீல் பண்ணி பேசுறார். முத்துவும் மனசார மன்னிச்சு விடுறார். ஆனா ரவியின் பாக்கெட்டில இருந்து சரக்கு பாட்டில் சத்தம் கேட்க, மீனாவுக்கு விஷயம் புரிஞ்சிடுது. அதுக்குப் பிறகு ரவி, மனோஜ், முத்து மூணு பேரும் இரவில் மாடியில சரக்கடிக்க பிளான் போட்டுக்கிட்டிருக்காங்கன்னு தெரிய வருது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications