சிறகடிக்க ஆசையில் அதிரடி! வீட்டை காப்பாற்ற முத்து எடுத்த விபரீத முடிவு.. வேலைக்கு போகும் விஜயா! மீனாவால் அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தினமும் பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. இன்றைய எபிசோடில் கூட மீனா எடுத்த விபரீத முடிவு மற்றும் முத்து தன்னுடைய வீட்டை காப்பாற்ற செய்த அதிரடி செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே மீனாவின் அம்மா சந்திரா, தன்னுடைய தோழிகளிடம் விஜயாவை கொடுமைக்கார மாமியார் என கூறிய விஷயம் பெரிய பிரச்சனையாக மாறியது. அந்த பேச்சை விஜயா நேரடியாக ஒட்டுக்கேட்டு கடும் கோபத்தில் வெடித்தார். "இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்" என்று சண்டையிட்டு கிளம்பிய விஜயாவை முத்து சமாதானப்படுத்த முயன்றாலும், அவர் ஒரு கடும் நிபந்தனை போட்டார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
"இரண்டு நாளுக்குள் வீட்டை மீட்டு என்னை கூட்டிட்டு போ... இல்லேனா நான் இங்க இருக்க மாட்டேன்" என்று விஜயா திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதனால் ஏற்கனவே பிரச்சனையில் சிக்கியிருந்த முத்து இன்னும் பெரிய நெருக்கடிக்குள் சிக்குகிறார்.
இதையடுத்து மறுநாள் முத்து எடுத்த முடிவு ரசிகர்களையே கலங்க வைத்துள்ளது. தன்னுடைய கார் ஷெட்டிற்கு சென்ற முத்து, வீட்டை மீட்க பணம் தேவை என்பதால் தன்னுடைய கார் மற்றும் டிராவலர் வேனை விற்க முடிவு செய்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. மொத்தமாக வெறும் ஏழரை லட்சம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட, முத்து முகமே சோர்ந்து போகிறது.

முத்து எடுத்த முடிவு
ஒருபக்கம் முத்து இப்படி உயிர் பறக்கும் போராட்டத்தில் இருக்க, மறுபக்கம் மனோஜ் வழக்கம்போல் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருப்பது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதை பார்த்த ஸ்ருதி கூட கொந்தளிக்கிறார்.
"பாவம் முத்து வீட்டை காப்பாத்த எவ்வளவு கஷ்டப்படுறார்... இந்த மனோஜுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?" என்று ஸ்ருதி கேட்கும் காட்சி ரசிகர்களின் மனநிலையையே பிரதிபலிக்கிறது.
ரவி கொடுத்த ஐடியா
இதற்கிடையில் ரவி ஒரு ஐடியா சொல்கிறார். தங்களுடைய ரெஸ்டாரண்ட் பெயரில் லோன் வாங்கி முத்துவுக்கு உதவலாம் என கூற, ஸ்ருதியும் அதற்கு சம்மதிக்கிறார். இதனால் முத்துவுக்கு ஒரு பக்கம் உதவி கிடைக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால் அதைவிட பெரிய அதிர்ச்சி மீனாவிடமிருந்து வருகிறது. சிந்தாமணி சொன்ன பேச்சை நம்பி, தன்னுடைய தலைவி பதவியை ராஜினாமா செய்ய மீனா முடிவு செய்கிறார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை எழுதி கொண்டு கிளம்பும் அவரை முத்து சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துகிறார்.
அவரிடம் இருந்த கடிதத்தை நேரடியாக பிடுங்கி கிழித்தெறியும் முத்துவின் செயல் ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்துள்ளது. இல்லையெனில் மீனா இன்னொரு பெரிய தவறு செய்திருப்பார் என்ற கருத்து ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

விஜயா எடுத்த முடிவு
இதெல்லாம் போதாதென்று கடைசியில் விஜயா எடுத்த முடிவு இன்னொரு ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது. தன்னுடைய தோழி பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயா, "நான் வேலைக்கு போகப் போறேன்" என்று கூறுகிறார்.

இதைக்கேட்டு பார்வதி கூட ஷாக் ஆகிறார். எப்போதும் வீட்டில் அதிகாரம் செலுத்தி வந்த விஜயா திடீரென வேலைக்கு போக முடிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய சஸ்பென்ஸாக மாறியுள்ளது.
வீட்டை காப்பாற்ற முத்து தன்னுடைய சொத்துக்களையே விற்கும் நிலை... மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... விஜயாவின் திடீர் வேலை முடிவு... இப்படி சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது முழுக்க முழுக்க உணர்ச்சி மற்றும் பரபரப்பு மோடில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications