சிறகடிக்க ஆசை: மனோஜை சிக்க வைக்க ஸ்ருதி செய்த செயல்.. ஒன்று சேர்ந்த குடும்பம்.. விஜயாவிற்கு ஆப்பு
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நாளை எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் தான் தங்க நகையை கவரிங் ஆக மாற்றியது என்று சந்தேகப்படும் முத்துவிற்கு ஸ்ருதியும் ரவியும் உதவி செய்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஆரம்பத்தில் இருந்து ரோகிணி மட்டும் எந்த இடத்திலும் வீட்டில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் கதாநாயகன் முத்து மற்றும் மீனாவிற்கு தான் ஒவ்வொரு வாரமும் புது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் எல்லோரும் முத்துவை தவறாக புரிந்து கொண்டு திட்டுவார்கள், கடைசியில் முத்து மீது தப்பு இல்லை என்று முத்துவே நிரூபிப்பார் அல்லது முத்துவுக்காக மீனா பல போராட்டங்களை தாண்டி தன் கணவர் மீது தப்பில்லை என்று நிரூபிக்கிறார்.

இதுதான் ஒவ்வொரு வாரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் கடந்த வாரத்தில் கூட மீனா வேண்டாம் என்று கழட்டி கொடுத்த நகைகளை வைத்து மனோஜ் தான் ஏமாந்து போன நாலு லட்சம் கடனை அடைத்திருந்தார். ஆனால் மீனாவும் முத்துவும் திடீரென அந்த நகைகளை கேட்டதும் மனோஜ் கவரிங் நகைகளை வாங்கி கொடுத்து சமாளித்து இருந்தார். ஆனால் முத்துவும் மீனாவும் அந்த நகைகளை நகைக் கடையில் கொண்டு போய் கொடுக்க, அவர்கள் கவரிங் நகை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று போலீஸில் பிடித்துக் கொடுக்க போனார்கள்.
பிறகு அங்கிருந்து வெளியே வந்த முத்து நடந்த விஷயத்தை அண்ணாமலையிடம் உடனே சொல்லலாம் என்று சொல்ல அதற்கு மீனா இப்போது வேண்டாம் பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷன் முடியட்டும் அதற்குப் பிறகு சொல்லலாம் என்று சொல்லி இருந்தார். ஏற்கனவே அண்ணாமலை முத்துவை பல இடங்களில் நீ அமைதியாய் இரு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதே என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

அதுபோல இப்போது முத்து இரண்டு நாட்கள் ஆக அமைதியாகவே இருந்தார் ஆனாலும் பாட்டியை இன்று ஊருக்கு அனுப்பி வைத்ததும் நகை பற்றி விஷயத்தை வீட்டில் பேசி இருக்கிறார். அதற்கு விஜயா நீங்க கழட்டி தந்த நகையை தான் நான் உங்ககிட்ட தந்தேன். அந்த நகை எப்படி மாறுச்சுன்னு எனக்கு தெரியாது. ஒருவேளை நீங்க தந்ததே கவரிங் நகையா தான் இருக்கும் என்று பொய் சொல்கிறார்.

இந்த நிலையில் நாளைக்கு இன்று வெளியான வீடியோவில் ரவி வேலை செய்யும் ஹோட்டலில் முத்து மீனா ஸ்ருதி என நான்கு பேரும் இருக்கின்றனர். அப்போது ஸ்ருதி முத்து சொல்லிக் கொடுத்தது போல ரவிக்கு போன் போட்டு நீங்க கடந்த வாரத்தில் வாங்கிய கவரிங் நகை பற்றி உங்களுடைய ரிவ்யூ சொல்லுங்க என்று சொல்ல, அதற்கு மனோஜ் உண்மையை உளற போகிறார்.
இந்த ப்ரோமோ வெளியானதும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வழக்கம் போல மனோஜ் இந்த முறையும் மாட்டிக் கொண்டு வீட்டில் மேலும் 4 லட்சம் தர வேண்டும் என்று கடன் சொல்லப் போகிறாரா? அல்லது கடைசி நேரத்தில் சுதாகரித்து ஸ்ருதியிடம் நான் நகை வாங்க வில்லை என்று சமாளிக்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications