சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial Update) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 13-ஆம் தேதிக்கான எபிசோடில், தேர்தலில் ஜெயித்த மீனாவை அழிப்பதற்காக சிந்தாமணி முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் நீதிமன்றத்தில் மனோஜ்க்கு எதிராக ரோகிணி புது நாடகம் போட்டு இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai serial today episode) சீரியலின் இன்றைய எபிசோடில், தேர்தலில் தோற்ற கோபத்தில் இருக்கும் சிந்தாமணி தலைவிரிகோலத்தில் இருந்து ரோகிணியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் அவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்து முதலில் ரோகிணியே கொஞ்சம் தயக்கமடைகிறார். அப்போது சிந்தாமணி அந்த மீனாவை நான் சும்மா விடமாட்டேன். எலெக்ஷனில் ஜெயிச்சா என்ன, என்னோட ஆளுங்களை வைத்து அவளை இந்த தலைவர் போட்டியில் இருந்தே ஓட வைக்கிறேன்" என்று சபதம் எடுக்கிறார்.
அதற்கு ரோகிணி நீங்க எவ்வளவோ பணம் செலவழிச்சிங்களே அப்புறம் எப்படி அந்த மீனா ஜெயித்தா என்று கேட்க, அவ புருஷன் முத்து தான் என்னை பத்தி தப்பு தப்பா பேசி வாக்கு கேட்டு இருக்கான். நான் எனக்கு சரியா வட்டி தராதவங்களை திட்டி இருக்கேன். அவங்களே வைத்தும் எனக்கு எதிராக பேச வைத்திருக்கான். ஆனா நான் இனி அந்த மீனாவை பதவியில் இருக்க விட மாட்டேன் என்கிட்ட பணம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை என்று விஜயா கோபத்தில் சொல்கிறார்.
சிந்தாமணி திட்டம்
மேலும் பணத்தை வைத்து அவளை இந்த சங்கத்தில் இருந்தே தூக்குறேன் பாரு. என் ஆளுங்கள அனுப்பி அவகிட்ட ஒரு பைலில் கையெழுத்து வாங்கி அவ ஊழல் பண்ணிட்டான்னு சொல்லி அவளுக்கு எதிராகவே வியாபாரிகள திருப்பி மறுபடியும் எலெக்ஷன் வரவைத்து நான் அன்னபோஸ்டா ஜெயிப்பேன் என்று ரோகிணியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் சிந்தாமணி.
மறுபுறம், மீனாவும் முத்துவும் பிளான் பண்ணி ஸ்ருதியையும் ரவியையும் டூர் அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் டூர் போயிட்டு வரும் வரை முத்துவும் மீனாவும் தான் ரெஸ்டாரண்டை பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். மறுநாள், முத்துவும் மீனாவும் ரெஸ்டாரண்டை கவனித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நீத்து வருகிறார்.

பழிவாங்கும் திட்டம்
நீத்துவை பார்த்ததும் இவ வருவா என்று எனக்கு தெரியும் என்று மீனா சொல்கிறார். அப்போது நீத்து ரவி எங்கே, போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான். இன்னைக்கு நான் என்னோட பூக்கடையை ஓபன் பண்ணுறேன். அவன் இல்லாம நான் எப்படி கடை திறப்பு விழாவை நடத்த முடியும். அவனை எங்க மறச்சு வச்சிருக்கீங்க, வரச்சொல்லுங்க" என்று கூறுகிறார்.
ரவி இங்கே இல்லை என்று முத்துவும் மீனாவும் சொல்கிறார்கள். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் நீத்து இல்லை. அதனால் கோபமடையும் மீனா, "ஏண்டி இப்படி அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே, ஒழுங்கு மரியாதையா வாழத் தெரியாத?" என்று திட்டுகிறார்.
அதற்கு பதிலாக நீத்து, "உன் புருஷன் மட்டும் என்ன ஒழுங்கானவனா, அவன் ஒரு ரெளடி தான்" என்று முத்துவை பற்றி அவதூறாக பேசுகிறார். இதைக் கேட்டதும் கோபமடைந்த மீனா, நீத்துவுக்கு கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார். அதற்கு நீத்து, "என்னைய இப்படி எல்லார்முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டேல்ல, உன்னை சும்மா விடமாட்டேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
ரோகிணி மனோஜ் விவாகரத்து வழக்கு
மறுபுறம், மனோஜ் தொடர்ந்த டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வருகிறது. இதனால் இந்த முறை ரோகிணி தன்னுடைய மகன் கிரிஷை தன்னுடன் அழைத்து வருகிறார். அடுத்ததாககோர்ட்டிற்கு வரும் மனோஜ், நீதிபதியிடம் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ரோகிணி, அழுது கொண்டு "இவரால நான் நிறைய கடன் வாங்கி வச்சுட்டேன். எனக்கு குழந்தை வேற இருக்கு. இப்போ டைவர்ஸ் கொடுத்துட்டா நான் என்ன பண்ணுவது" என்று கூறுகிறார். இதையடுத்து நீதிபதி இந்த டைவர்ஸ் கேஸை 6 மாதத்திற்கு தள்ளிவைப்பதாக சொல்கிறார். அதிலும் ஆறு மாதத்திற்கும் ரோகிணிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கணும் என்று நீதிபதிக்கு சொல்ல அதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் குழந்தை பற்றி சரவணன் சொன்ன வார்த்தை! அடி வெளுத்து வாங்கிய கோமதி! பாண்டியன் எடுத்த முடிவு














Click it and Unblock the Notifications